{"Header": "வன்னி படைத் தளபதி வவுனியா பிரதி பொலிஸ் மாஅதிபரை சந்திப்பு", "Time": "12th January 2020 08:06:23 Hours", "Content": "வவுனியா மாவட்டத்தின் தலைமை அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு பி கே தம்மிக பிரியந்த அவர்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்களை இம் மாதம் (6) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது இந்த உயரதிகாரிகள் இருவரும் வன்னி பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதியின்மை தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இறுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியினால் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்."}