{"Header": "‘செபல சிதுவம்’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கண்காட்சி", "Time": "12th January 2020 23:40:30 Hours", "Content": "இராணுவ சமிக்ஞை படையணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘செபல சிதுவம்’ கண்காட்சியானது கொழும்பு 7 அமைந்துள்ள ஜே.டி.ஏ பெரேரா கலை நிலையத்தில் இரண்டாவது நாளான (12) ஆம் திகதி பெரும்பாலான ரசிக பார்வையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ சமிக்ஞை படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கேஷினி ஹெட்டியாரச்சி அவர்கள் வரவேற்று பின்னர் பிரதம அதிதி அவர்கள் ஓவிய கண்காட்சிகளை பார்வையிட்டார். கண்காட்சிகளில் அழகான 150 ஓவியங்கள் சமிக்ஞை படையணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளால் முன்வைக்கப்பட்டிருந்தன். இவர்கள் 4 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் R.M.K.U.K ரத்னாயக, 7 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கோப்ரல் M.G.C ராஜகுமார, 9 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கோப்ரல் D.S பெர்ணாண்டோ, 11 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கோப்ரல் கோப்ரல் B.A.N.U பமுனுசிங்க, 3 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த கோப்ரல் W.P.S பண்டார, 11 ஆவது சமிக்ஞை படையணியைச் சேர்ந்த போர் வீரன் S.T பெடல், 2 (தொ) இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மகளிர் படையாளி N.G.R மல்லிகா போன்றோர் ஆவர். 11 ஆம் திகதி இடம்பெற்ற இந்த ஓவிய கண்காட்சிக்கு பிரதம அதிதியாக பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். இந்த கண்காட்சிகள் (ஜனவாரி 11 – 12) ஆம் திகதிகளில் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்."}