{"Header": "இராணுவத்தினரது ஏற்பாட்டில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் ", "Time": "12th January 2019 20:08:12 Hours", "Content": "கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 222, 22 ஆவது படைப் பிரிவுத் தலைமையகங்களின் ஏற்பாட்டில் சிவில் கிரிக்கட் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் (07) ஆம் திகதி திங்கட் கிழமை கந்தளாய் பாத்தியகம பொது மைதானத்தில் இடம்பெற்றது. இந்த கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் 15 சிவில் கிரிக்கட் கழகங்கள் பங்கேற்றியதுடன் இறுதிச் சுற்றுப் போட்டிகள் அக்ரபோதி விளையாட்டு கழகம் மற்றும் சுபர் கிங் விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் சுபர் கிங் விளையாட்டு கழகம் திறமையாக விளையாடி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்தும் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 222 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் தீபால் புஷல்ல அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்த இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் வருகை தந்து வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்."} |