{"Header": "121 ஆவது படைத் தலைமையகத்தின் ஆண்டு நிறைவு விழா", "Time": "10th January 2019 12:01:38 Hours", "Content": "மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 121 ஆவது படைத் தலைமையகத்தின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு இம்மாதம் (9) ஆம் திகதி மொனராகலையில் அமைந்துள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு வருகை தந்த 121 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் என்.சி சோமவீர அவர்களை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து படையினர் மத்தியில் படைத் தளபதி உரையை நிகழ்த்தினார். இறுதியில் அனைவரது பங்களிப்புடன் இடம்பெற்ற பகல் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் படைத் தளபதி பங்கேற்றுக் கொண்டார்."} |