transcription
stringlengths
1.67k
10.5k
gender
stringclasses
1 value
speaker_id
int64
1
1
audio
audioduration (s)
121
763
இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு இவர் ஆபிரகாமின் வம்சத்தானாகிய தாவீதின் வம்சத்தினராவார் ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன் ஈசாக்கு யாக்கோபின் தகப்பன் யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன் அவர்களின் தாய் தாமார் பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன் எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்ஆராம் அம்மினதாபின் தகப்பன் அம்மினதாப் நகசோனின் தகப்பன் நகசோன் சல்மோனின் தகப்பன்சல்மோன் போவாஸின் தகப்பன் போவாஸினுடைய தாய் ராகாப் போவாஸ் ஓபேத்தின் தகப்பன் ஓபேத்தினுடைய தாய் ரூத் ஓபேத் ஈசாயின் தகப்பன்ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன் தாவீது சாலொமோனுக்குத் தகப்பன் இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள் சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன் ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன் அபியா ஆசாவுக்குத் தகப்பன்ஆசா யோசபாத்தின் தகப்பன் யோசபாத் யோராமுக்குத் தகப்பன் யோராம் உசியாவின் தகப்பன்உசியா யோதாமின் தகப்பன் யோதாம் ஆகாஸின் தகப்பன் ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன்எசேக்கியா மனாசேயின் தகப்பன் மனாசே ஆமோனின் தகப்பன் ஆமோன் யோசியாவின் தகப்பன்யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன் அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான் சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன் அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன் எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன் சாதோக் ஆகீமிற்குத் தகப்பன் ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன்எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன் எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன் மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன் யோசேப்பு மரியாளின் கணவன் மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார் இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும் தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள் ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான் எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல் திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான் யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி தாவீதின் மகனாகிய யோசேப்பே நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள் அவள் ஒரு மகனைப் பெறுவாள் நீ அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும் ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார் என்றான் கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தனஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள் அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள் இம்மானுயேல் என்பதன் அர்த்தம் இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதே யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும் கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான் ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்
male
1
யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தபின் ஏரோது அரசனாக இருந்தபொழுது கிழக்கிலிருந்து அறிஞர்கள் எருசலேமுக்கு வந்தார்கள் அவர்கள் யூதருக்கு அரசனாகப் பிறந்தவர் எங்கே இருக்கிறார் நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கிழக்கிலே கண்டோம் அவரை வழிபட வந்திருக்கிறோம் என்றார்கள் ஏரோது அரசன் இதைக் கேட்டபோது அவனும் அவனோடுகூட எருசலேம் மக்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள் அப்பொழுது அவன் எல்லா தலைமை ஆசாரியர்களையும் மோசேயின் சட்ட ஆசிரியர்களையும் ஒன்றுகூட்டி கிறிஸ்து எங்கே பிறப்பார் எனக் கேட்டான் அவர்களோ யூதேயாவிலுள்ள பெத்லகேமில் என்றார்கள் ஏனெனில் இறைவாக்கினன் எழுதியிருப்பது இதுவே யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேமே யூதாவை ஆளுபவர்களில் நீ அற்பமானவனல்ல ஏனெனில் உன்னிலிருந்து ஆளுநர் ஒருவர் வருவார் அவர் எனது மக்களான இஸ்ரயேலுக்கு மேய்ப்பராயிருப்பார் என பதிலளித்தார்கள் அதற்குப் பின்பு ஏரோது அறிஞர்களை இரகசியமாய் அழைத்து நட்சத்திரம் தோன்றிய சரியான நேரத்தை குறித்து அவர்களிடம் கவனமாய்க் கேட்டு அறிந்துகொண்டான் ஏரோது அவர்களிடம் நீங்கள் போய் கவனமாய் விசாரித்து குழந்தையைத் தேடுங்கள் அவரைக் கண்டதும் நானும் போய் அவரை வழிபடும்படி உடனே எனக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான் அரசன் கூறியதைக் கேட்டபின் அவர்கள் தங்கள் வழியே சென்றார்கள் அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாகச் சென்றது அது குழந்தை இருக்கும் இடம்வரை வந்து அதற்கு மேலாக நின்றது அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து குழந்தை அதன் தாயாகிய மரியாளுடன் இருக்கக் கண்டு தரையில் விழுந்து அவரை வழிபட்டார்கள் பின்பு தங்கள் திரவியப் பெட்டியைத் திறந்து தங்கம் நறுமணத்தூள் மற்றும் வெள்ளைப்போளம் ஆகியவற்றைப் பிள்ளைக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள் அதற்குப் பின்பு ஏரோதிடம் திரும்பிச் செல்லக்கூடாது என அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டிருந்ததால் தங்கள் நாட்டிற்கு வேறு வழியாய்த் திரும்பிச் சென்றார்கள் அறிஞர்கள் திரும்பிச் சென்றபின் கர்த்தரின் தூதன் ஒருவன் யோசேப்புக்குக் கனவில் தோன்றி எழுந்திரு குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்குத் தப்பிப்போ நான் உனக்குச் சொல்லும்வரை அங்கேயே தங்கியிரு ஏனெனில் ஏரோது குழந்தையைக் கொல்வதற்காக வகைதேடுகிறான் என்று சொன்னான் உடனே யோசேப்பு எழுந்திருந்து குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இரவு நேரத்தில் எகிப்திற்குப் புறப்பட்டுச் சென்றான்அவன் ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தான் இவ்வாறு கர்த்தர் தனது இறைவாக்கினன் மூலம் எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன் என்று கூறியிருந்தது நிறைவேறியது ஏரோது தான் அறிஞர்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்தபொழுது கடுங்கோபம் கொண்டான் அதனால் அவன் தான் அறிஞர்களிடம் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்தான் அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா மூலமாகக் கூறப்பட்டது நிறைவேறியதுராமாவிலே ஒரு குரல் கேட்கிறது அழுகையும் பெரும் புலம்பலும் கேட்கின்றன ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள் அவர்களை இழந்ததினால் ஆறுதல் பெற மறுக்கிறாள் ஏரோது இறந்தபின் கர்த்தருடைய தூதன் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றிஎழுந்திரு குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குப் போ குழந்தையின் உயிரையெடுக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டார்கள் என்றான் எனவே அவன் குழந்தையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்றான் ஆனால் அர்கெலாயு தனது தகப்பனான ஏரோதுவின் இடத்தில் யூதேயாவில் ஆட்சி செய்வதை யோசேப்பு கேள்விப்பட்டபோது அங்கே போகப் பயந்தான் அப்பொழுது யோசேப்பு கனவிலே எச்சரிக்கப்பட்டபடியால் அப்பகுதியைவிட்டு கலிலேயா மாவட்டத்திற்குப் போனான் அங்கு நாசரேத் எனப்படும் ஊருக்குச் சென்று அங்கே குடியிருந்தான் எனவே இயேசு நசரேயன் என அழைக்கப்படுவார் என இறைவாக்கினர்மூலம் சொல்லப்பட்டது இவ்வாறு நிறைவேறியது
male
1
அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் பாலைவனப் பகுதியில் வந்துமனந்திரும்புங்கள் பரலோக அரசு சமீபித்திருக்கிறது எனப் பிரசங்கித்தான் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவருக்காக பாதைகளை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் ஒரு குரல் கூப்பிடுகிறது என்று இறைவாக்கினன் ஏசாயாவின் மூலம் கூறப்பட்டவன் இவனே யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான் அவனது உணவு வெட்டுக்கிளியும் காட்டுத்தேனுமாய் இருந்தது மக்கள் எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் பகுதி முழுவதிலிருந்தும் அவனிடம் சென்றார்கள் அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்கு பெற்றார்கள் அப்பொழுது அநேக பரிசேயரும் சதுசேயரும் திருமுழுக்கு கொடுக்கும் இடத்திற்கு வருவதை யோவான் கண்டு அவர்களிடம் சொன்னதாவது விரியன் பாம்புக் குட்டிகளே வரப்போகும் கடுங்கோபத்திலிருந்து தப்பியோடும்படி உங்களை எச்சரித்தது யார்நீங்கள் மனந்திரும்பியிருந்தால் அதற்கேற்ற கனியைக் காண்பியுங்கள் ஆபிரகாம் எங்களுக்கு தகப்பனாக இருக்கிறார் என்று உங்களால் சொல்லமுடியும் என நினைக்கவேண்டாம் இந்தக் கற்களிலிருந்துங்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க இறைவனால் முடியும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் கோடாரி ஏற்கெனவே மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் நான் மனந்திரும்புதலுக்கென்று தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன் ஆனால் என்னிலும் வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார் அவரது பாதரட்சைகளைச் சுமக்கக்கூட நான் தகுதியற்றவன் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும் திருமுழுக்கு கொடுப்பார் அவர் தமது கரத்தில் தூற்றுக்கூடை ஏந்தி தமது களத்தைச் சுத்தம் செய்வார் அவர் தன் தானியங்களை களஞ்சியத்தில் சேர்ப்பார் பதரையோ அணைந்து போகாத நெருப்பில் எரித்துப்போடுவார் என்றான் அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோவானால் திருமுழுக்கு பெறும்படி யோர்தானுக்கு வந்தார் ஆனால் யோவான் அவரிடம் நான் உம்மிடம் திருமுழுக்கு பெற வேண்டியிருக்க நீர் என்னிடம் வருகிறீரா என்று சொல்லி அவரைத் தடுக்க முயற்சித்தான் அதற்கு இயேசு இப்பொழுது இடங்கொடு இவ்விதமாக எல்லா நீதியையும் முழுவதுமாய் நிறைவேற்றுவது நமக்குத் தகுதியாய் இருக்கிறது எனப் பதிலளித்தார் அப்பொழுது யோவான் அதற்கு ஒப்புக்கொண்டான் இயேசு திருமுழுக்கு பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார் உடனே பரலோகம் திறக்கப்பட்டு இறைவனின் ஆவியானவர் ஒரு புறாவைப்போன்று இறங்கி அவர்மேல் அமர்வதைக் கண்டார் அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல் இவர் என் மகன் நான் இவரில் அன்பாயிருக்கிறேன் இவரில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன் என்று உரைத்தது
male
1
அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார் இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின் பசியாயிருந்தார் சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து நீர் இறைவனின் மகன் என்றால் இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும் என்றான் அதற்கு இயேசு மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான் என்று எழுதப்பட்டிருக்கிறது எனப் பதிலளித்தார் பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான் அவன் நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும் ஏனெனில் இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் உமது கால்கள் கல்லில் மோதாதபடி அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே என்றான் அதற்கு இயேசு உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே எனப் பதிலளித்தார் மீண்டும் சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான் நீர் என்னை விழுந்து வணங்கினால் இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான் இயேசு அவனிடம் சாத்தானே என்னைவிட்டு அப்பாலே போ உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு அவர் ஒருவரையே பணிந்துகொள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார் அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான் தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள் யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார் அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய் அங்கே வாழ்ந்தார் அது செபுலோன் நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்செபுலோன் நாடே நப்தலி நாடே யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலேஇருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள் மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது அந்த வேளையிலிருந்து இயேசு மனந்திரும்புங்கள் பரலோக அரசு சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன் அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார் மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள் இயேசு அவர்களிடம் வாருங்கள் என்னைப் பின்பற்றுங்கள் நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன் என்றார் உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில் வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும் அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார் அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள் இயேசு அவர்களையும் கூப்பிட்டார் உடனே அவர்கள் படகையும் தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள் இயேசு கலிலேயா முழுவதும் சென்று யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார் மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார் இயேசுவைப்பற்றிய செய்தி சீரியா முழுவதும் பரவியது மக்கள் அவரிடம் பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும் தீய ஆவி பிடித்தவர்களையும் வலிப்பு உள்ளவர்களையும் முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள் இயேசு அவர்களைக் குணமாக்கினார் கலிலேயா தெக்கப்போலி எருசலேம் யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்
male
1
இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார் அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள்இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார் அவர் சொன்னதாவதுஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பரலோக அரசு அவர்களுக்கு உரியது துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் ஆறுதல் அடைவார்கள் சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள் நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் நிறைவு பெறுவார்கள் இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள் இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் இறைவனைக் காண்பார்கள் சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள் நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பரலோக அரசு அவர்களுக்குரியதே என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும் துன்புறுத்தும்போதும் உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள் மகிழ்ந்து களிகூருங்கள் பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும் ஏனெனில் இதைப்போலவே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள் நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாக இருக்கிறீர்கள் ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால் மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும் அது வேறொன்றுக்கும் பயன்படாது வெளியே வீசப்பட்டு மனிதரால் மிதிக்கப்படும் நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்காது மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள் அப்பொழுது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் அதைப் போலவே உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கட்டும் அப்பொழுது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள் நான் மோசேயின் சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்கவேண்டாம் நான் அவற்றை அழிக்க அல்ல நிறைவேற்றவே வந்தேன் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் வானமும் பூமியும் அழிந்துபோனாலும் மோசேயின் சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும் அதில் உள்ள மிகச்சிறிய எழுத்தோ எழுத்தின் சிறிய புள்ளியோ அழிந்துபோகாது இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்கு போதிக்கிறவன் பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான் ஆனால் இந்தக் கட்டளைகளை தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் போதிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான் நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்களுடைய நீதியானது பரிசேயர் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களின் நீதியைவிட மேலானதாய் இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள் கொலை செய்யாதே கொலை செய்கிறவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான் என்று வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால் அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள் மேலும் தனது சகோதரனை அல்லது சகோதரியை பயித்தியம் என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும் ஆனால் யாரையாவது முட்டாள் என்று சொல்லுகிறவர்கள் நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள் அதனால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால்பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகுங்கள் அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள் உங்களது பகைவர் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே அவர்களோடு விரைவாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் இல்லையெனில் அவர்கள் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக்கூடும் நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க நீங்கள் சிறையில் தள்ளப்படலாம் உங்களிடத்திலிருக்கும் கடைசி காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்லுகிறேன் விபசாரம் செய்யாதே எனச் சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான் உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதைத்தோண்டி எறிந்துவிடு உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும் உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால் அதை வெட்டி எறிந்துபோடு உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும் உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன் அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன் தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால் அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான் மேலும் நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம் கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள் என்று வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம் பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம் ஏனெனில் அது இறைவனின் அரியணைபூமியின்மேலும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் அது இறைவனின் பாதபீடம் எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் அது பேரரசரின் பட்டணம் உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ கருமையாக்கவோ முடியாதே ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில் ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் இருக்கட்டும் இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம் யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால் அவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் யாராவது உங்களுடன் வழக்காடி உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவருக்கு உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள் யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால் அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள் உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள் உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம் உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள் உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள் இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள் அவர் தீயவர்மேலும் நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார் நீதியுள்ளவர்மேலும் அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார் உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால் நீங்கள் பெறும் வெகுமதி என்ன வரி வசூலிப்பவரும்கூட அப்படிச் செய்வதில்லையாநீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையாஉங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள்
male
1
நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள் நீங்கள் அப்படிச் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம் மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள் ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும் அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும் நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா உங்களுக்கு வெகுமதி அளிப்பார் நீங்கள் மன்றாடும்போது வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம் ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள் ஆனால் நீங்கள் மன்றாடும்போது உங்கள் அறைக்குள் போய் கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள் அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா உங்களுக்கு வெகுமதியளிப்பார் நீங்கள் மன்றாடும்போது இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள் ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம் தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள் நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம் ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார் ஆகவே நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே உமது பெயர் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும் எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல் எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும் இராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே ஆமென் ஏனெனில் மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால் உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார் ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால் உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார் நீங்கள் உபவாசிக்கும்போது வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம் ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து உங்கள் முகத்தைக் கழுவுங்கள் அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும் ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும் மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா உங்களுக்கு வெகுமதி அளிப்பார் நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம் இங்கே அவை பூச்சி அரித்தும் துருப்பிடித்தும் அழிந்துவிடும் திருடரும் உடைத்துத் திருடுவார்கள் ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள் அங்கே அவை பூச்சி அரித்தோ துருப்பிடித்தோ அழிவதில்லை அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள் ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும் கண் உடலின் விளக்காய் இருக்கிறது உனது கண் நல்லதாய் இருந்தால் உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும் ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால் உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும் அப்படியானால் உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால் அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்எந்த வேலைக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது அவன் ஒருவனை வெறுத்து இன்னொருவனில் அன்பு செலுத்துவான் அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து மற்றவனை அலட்சியம் செய்வான் அப்படியே நீங்கள் இறைவனுக்கும் பணத்துக்கும் பணிசெய்ய முடியாது ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம் அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம் உங்கள் உயிர் உணவைவிடவும் உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவாஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதோ அறுவடை செய்வதோ களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார் நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவாகவலைப்படுவதால் உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள் அவை உழைப்பதுமில்லை நூல் நூற்கிறதுமில்லை ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை விசுவாசக் குறைவுள்ளவர்களே இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால் உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்எனவே என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்னத்தை உடுப்போம் என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம் ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள் உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார் எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும் நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம் ஏனெனில் நாளையத்தினம் நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும் ஒவ்வொரு நாளுக்கும் அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்
male
1
தீர்ப்புச் செய்யாதிருங்கள் நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள் நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள் நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல் உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் நீ உனது சகோதரனிடம் நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன் என எப்படிச் சொல்லலாம்வேஷக்காரனே முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும் பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம் உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம் அப்படிச் செய்தால் அவை முத்துக்களை மிதித்துவிட்டு திரும்பி உங்களையும் பீறிப்போடும் கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும் ஏனெனில் கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள் தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள் தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள் அப்படியிருக்க பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்ஆகவே மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள் இதுவே மோசேயின் சட்டமும் இறைவாக்குகளும் ஆகும் இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள் ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது வழியும் விரிவானது பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள் ஆனால் இடுக்கமான வாசலும் குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள் பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள் அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள் ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள் அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள் மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும் முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களாஇல்லையே அதேபோல் ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும் கெட்ட மரமோ கெட்ட கனியையே கொடுக்கும் நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும் வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும் இவ்வாறு அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்லுகிற எல்லோரும் பரலோக அரசிற்குள் செல்வதில்லை மாறாக பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே அதின் உள்ளே செல்வார்கள் அந்நாளில் அநேகர் என்னிடம் ஆண்டவரே ஆண்டவரே நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா என்று சொல்வார்கள் அப்பொழுது நான் அவர்களிடம் அக்கிரம செய்கைக்காரர்களே நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று வெளிப்படையாகச் சொல்வேன் எனவே நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும் கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான் மழை பெய்தது வெள்ளம் மேலெழுந்தது காற்று வீசி வீட்டைத் தாக்கியது அப்படி இருந்தும் வீடு விழவில்லை ஏனெனில் அதன் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருந்தது ஆனால் எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும் மணலின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவன் போலிருப்பான் மழை பெய்தது வெள்ளம் மேலெழுந்தது காற்று வீசி வீட்டைத் தாக்கியது அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள் ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல் அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்
male
1
இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார் அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு ஆண்டவரே உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான் இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு எனக்கு சித்தமுண்டு நீ சுத்தமடைவாயாக என்று சொன்னார் உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான் அப்பொழுது இயேசு அவனிடம் நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள் ஆனால் நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும் என்றார் இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது ஒரு நூற்றுக்குத் தலைவன் உதவிகேட்டு அவரிடம் வந்துஆண்டவரே வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய் கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான் என்றான் இயேசு அவனிடம் நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார் நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக ஐயா நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் வேலைக்காரன் குணமடைவான் ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும் எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள் நான் ஒருவனை போ என்றால் போகிறான் ஒருவனை வா என்றால் வருகிறான் நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால் அவன் செய்கிறான் என்றான் இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார் அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன் அநேகர் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வருவார்கள் அவர்கள் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள் ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார் அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம் நீ போ நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகட்டும் என்றார் அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான் இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார் இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள் மாலை நேரமானபோது பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார் அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு நமது நோய்களைச் சுமந்தார் என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது அவர் தம்முடைய சீடர்களிடம் மறுகரைக்குப் போகும்படி கட்டளையிட்டார் அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து போதகரே நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன் என்றான் இயேசு அதற்குப் பதிலாக நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை என்றார் இன்னொரு சீடன் அவரிடம் ஆண்டவரே முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும் என்றான் அதற்கு இயேசு அவனிடம் நீ என்னைப் பின்பற்று மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும் என்றார் அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார் அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள் அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது அலைகள் படகிற்கு மேலாக மோதியது இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார் சீடர்கள் இயேசுவிடம் வந்து அவரை எழுப்பி ஆண்டவரே எங்களைக் காப்பாற்றும் நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம் என்று அவரிடம் சொன்னார்கள் அதற்கு இயேசு விசுவாசக் குறைவுள்ளவர்களே நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள் எனக் கேட்டார் பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார் அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று அதைக் கண்டவர்கள் வியப்படைந்து இவர் எப்படிப்பட்டவரோ காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று பேசிக்கொண்டார்கள் இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர் ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள் அவர்கள் இறைவனின் மகனே உமக்கு எங்களிடம் என்ன வேண்டும் நியமிக்கப்பட்ட காலம் வருமுன் எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர் என உரத்த சத்தமிட்டார்கள் அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது பிசாசுகள் இயேசுவிடம் நீர் எங்களை வெளியே விரட்டுவதானால் பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும் என்று கெஞ்சிக்கேட்டன இயேசு அவைகளிடம் போங்கள் என்றார் எனவே அவைகள் வெளியே வந்து பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன அந்த முழுப்பன்றிக்கூட்டமும் மேட்டிலிருந்து விரைந்தோடி கடலுக்குள் விழுந்து செத்தன பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய் பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும் நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள் அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து அவர்கள் இயேசுவைக் கண்டபோது தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்
male
1
இயேசு ஒரு படகில் ஏறி கடலைக் கடந்து தமது சொந்தப் பட்டணத்திற்கு வந்தார் அங்கே சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனைப் படுக்கையில் கிடத்தியபடியே அவரிடம் கொண்டுவந்தார்கள் இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது அந்த முடக்குவாதக்காரனிடம் மகனே தைரியமாயிரு உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன என்றார் இதைக் கேட்ட சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள் இவன் இறைவனை நிந்திக்கிறான் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்த இயேசு அவர்களிடம் நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் தீயவைகளைச் சிந்திக்கிறீர்கள்உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்வதா அல்லது எழுந்து நட என்று சொல்வதா எது எளிதுஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லி பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம் எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ என்றார் உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப் போனான் மக்கள் கூட்டம் இதைக் கண்டபோது இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதருக்கு அளித்த இறைவனைப் பயபக்தியுடன் துதித்தார்கள் இயேசு அங்கிருந்து போகும்போது மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார் அவர் அவனிடம் என்னைப் பின்பற்றி வா என்றார் அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான் பின்பு இயேசு மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது வரி வசூலிக்கிறவர்களும் பாவிகளும் அநேகர் வந்து அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள் இதைப் பரிசேயர் கண்டபோது அவரது சீடர்களிடம் ஏன் உங்கள் போதகர் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார் என்று கேட்டார்கள் இதைக் கேட்டபோது இயேசு சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை என்றார் மேலும் அவர் நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற இறைவாக்கின் கருத்து என்னவென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள் ஏனெனில் நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை பாவிகளையே அழைக்கவந்தேன் என்றார் அதற்குப் பின்பு யோவானுடைய சீடர்கள் இயேசுவிடம் வந்து நாங்களும் பரிசேயரும் உபவாசிக்கிறோம் ஆனால் உமது சீடர்கள் உபவாசிப்பதில்லை அது ஏன் என்று கேட்டார்கள் அதற்கு இயேசு மணமகன் தங்களுடன் இருக்கும்போது மணமகனின் விருந்தினர் துக்கங்கொண்டாடுவது எப்படி மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும் அப்பொழுது அவர்கள் உபவாசிப்பார்கள் என்று சொன்னார் ஒருவனும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை அப்படி ஒட்டுப் போட்டால் புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும் கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும் மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை அப்படி செய்தால் தோல் பைகள் வெடித்து விடும் திராட்சை இரசமும் சிந்திப்போகும் தோல் பைகளும் பாழாய்ப்போகும் அப்படிச் செய்யாமல் புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார் இயேசு இதைச் சொல்லிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத் தலைவன் ஒருவன் வந்து அவர்முன் முழங்காற்படியிட்டு அவரிடம் எனது மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள் ஆனாலும் நீர் வந்து உமது கையை அவள்மேல் வையும் அப்பொழுது அவள் உயிர் பெறுவாள் என்று சொன்னான் இயேசு எழுந்து ஜெப ஆலயத் தலைவனுடன் சென்றார் இயேசுவின் சீடர்களும் அவருக்குப் பின்சென்றார்கள் அவ்வேளையில் பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள் அவள் நான் அவரது மேலுடையைத் தொட்டால் போதும் குணமடைவேன் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள் இயேசு அவளை திரும்பிப்பார்த்து மகளே தைரியமாயிரு உனது விசுவாசம் உன்னை குணப்படுத்தியது என்றார் அந்தப் பெண் அந்த நேரத்திலேயே குணமானாள் பிறகு இயேசு ஜெப ஆலயத் தலைவனின் வீட்டிற்குள் போனவுடன் குழல் ஊதுவோரையும் கூச்சலிட்டு அழும் மக்கள் கூட்டத்தையும் கண்டார் இயேசு அவர்களிடம் வெளியே போங்கள் இந்த சிறுமி சாகவில்லை அவள் தூங்குகிறாள் என்றார் அவர்களோ அதைக்கேட்டு நகைத்தார்கள் மக்கள் கூட்டத்தை வெளியே அனுப்பியபின் இயேசு உள்ளேப் போய் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்துத் தூக்கினார் அவள் உடனே எழுந்திருந்தாள் இச்செய்தி அப்பகுதிகள் எங்கும் பரவியது இயேசு அங்கிருந்து போகும்போது இரண்டு பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று தாவீதின் மகனே எங்கள்மேல் இரக்கமாயிரும் என்று சத்தமிட்டார்கள் அவர் வீட்டிற்குள் சென்றபோது அந்த பார்வையற்றோர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவரிடம் வந்தார்கள் இயேசு அவர்களிடம் என்னால் இதைச் செய்யமுடியும் என நீங்கள் விசுவாசிக்கிறீர்களா எனக் கேட்டார் ஆம் ஆண்டவரே என்று அவர்கள் பதிலளித்தார்கள் பின்பு இயேசு அவர்களுடைய கண்களைத் தொட்டு உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்குச் செய்யப்படும் என்றார் உடனே அவர்களுக்கு பார்வை கிடைத்தது இயேசு அவர்களிடம் இதைப்பற்றி ஒருவரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கடுமையாக எச்சரித்தார் ஆனால் குணமடைந்தவர்களோ வெளியே போய் அவரைப் பற்றியச் செய்தியை அப்பகுதியெங்கும் பரப்பினார்கள் அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் அந்த பிசாசு துரத்தப்பட்டபோது ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான் மக்கள் கூட்டம் வியப்படைந்து இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும் ஒருபோதும் காணப்பட்டதில்லை என்றார்கள் ஆனால் பரிசேயரோ பிசாசுகளின் தலைவனாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் இயேசு எல்லாப் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் நடந்துபோய் அங்கே யூதருடைய ஜெப ஆலயங்களில் போதித்து பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார் அத்துடன் எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார் அவர் திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபோது அவர்கள்மேல் மனதுருகினார் ஏனெனில் அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் துன்புறுத்தப்பட்டு உதவியற்றவர்களாக இருந்தார்கள் அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம் அறுவடை மிகுதியாய் இருக்கிறது ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள் ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம் தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்
male
1
இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து அசுத்த ஆவிகளை விரட்டவும் எல்லா விதமான நோய்களையும் வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார் இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் முதலாவது பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன் அவனுடைய சகோதரன் அந்திரேயா செபெதேயுவின் மகன் யாக்கோபு அவனுடைய சகோதரன் யோவான்பிலிப்பு பர்தொலொமேயு தோமா வரி வசூலிப்பவனான மத்தேயு அல்பேயுவின் மகன் யாக்கோபு ததேயுகானானியனாகிய சீமோன் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார் நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம் சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம் இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள் நீங்கள் போகும்போது பரலோக அரசு சமீபித்து வருகிறது என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள் நோயுற்றோரை குணமாக்குங்கள் இறந்தவர்களை எழுப்புங்கள் குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள் பிசாசுகளை விரட்டுங்கள் இலவசமாக நீங்கள் பெற்றீர்கள் இலவசமாகவே கொடுங்கள் நீங்கள் போகும்போது எவ்வித தங்கம் வெள்ளி செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்பயணத்திற்கென்று பையையோ மாற்று உடையையோ பாதரட்சைகளையோ ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம் ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான் நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள் அந்த வீட்டிற்குள் செல்லும்போது உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள் அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால் உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும் இல்லையானால் உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும் யாராவது உங்களை வரவேற்காமலோ உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால் நீங்கள் அந்த வீட்டையோ பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும் ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன் ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும் புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள் மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள் அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள் என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள் அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் முன்னால் நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது என்ன சொல்வது எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள் அந்த நேரத்தில் என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும் ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள் உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார் சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான் தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான் பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி அவர்களை கொலைசெய்வார்கள் என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள் ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான் நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில் மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள் ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால் நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும் வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால் அதுவே போதுமானது ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால் அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்எனவே அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம் மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள் உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள் உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம் அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே உடலையும் ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள் இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன எனவே பயப்படவேண்டாம் நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள் மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன் மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன் பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம் நான் சமாதானத்தை அல்ல ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன் எப்படியெனில் மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர் தம் தகப்பனையோ தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல தம் மகனையோ மகளையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்லதம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல தம் வாழ்வைக் காக்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள் தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள் ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால் அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள் ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள் இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால் கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்
male
1
இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார் யோவான் சிறையில் இருக்கையில் கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான் அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பிவரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான் அதற்கு இயேசு நீங்கள் திரும்பிப்போய் கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள் கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள் குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள் செவிடர் கேட்கிறார்கள் இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றார் யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார் பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள் காற்றினால் அசையும் நாணலையாஇல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள் சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா இல்லை சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள் அப்படியானால் எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள் இறைவாக்கினனையா ஆம் ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன் அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான் என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை ஆனால் பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன் அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான் யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர் ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும் மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது வரவேண்டியிருந்த எலியா இவனே நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள் கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும் இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன் இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள் நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம் நீங்கள் நடனமாடவில்லை ஒப்பாரி பாடினோம் நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன் ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும் குடிக்காதவனுமாக வந்தான் அவர்களோ அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்கிறார்கள் மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார் அவரைப் பார்த்து இவனோ உணவுப்பிரியன் மதுபானப்பிரியன் வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது என்றார் சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும் அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார் கோராசினே உனக்கு ஐயோ பெத்சாயிதாவே உனக்கு ஐயோ உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள் துக்கவுடை உடுத்தி சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள் ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும் உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும் கப்பர்நகூமே நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ இல்லவே இல்லை நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய் உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால் இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும் ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும் என்றார் அவ்வேளையில் இயேசு சொன்னதாவது பிதாவே பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால் உம்மைத் துதிக்கிறேன் ஆம் பிதாவே இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது ஆம் பிதாவே இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான் மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ அவர்களைத்தவிர வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள் வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள் ஏனெனில் நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன் எனது நுகம் இலகுவானது எனது சுமை எளிதானது
male
1
அக்காலத்தில் ஓய்வுநாளில் இயேசு தானியம் விளைந்திருந்த வயல் வழியாகச் சென்றார் அவருடைய சீடர்கள் பசியாயிருந்ததினால் அவர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள் பரிசேயர்கள் இதைக் கண்டபோது அவர்கள் இயேசுவிடம் இதோ உமது சீடர்கள் ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தைச் செய்கிறார்களே என்றார்கள் இயேசு அதற்குப் பதிலாக தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும் பசியாயிருந்தபோது அவன் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையாஅவன் இறைவனுடைய வீட்டிற்குள் போய் அவனும் அவனோடிருந்தவர்களும் மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தைச் சாப்பிட்டார்கள் அவர்கள் அப்படிச் செய்தது மோசேயின் சட்டத்திற்கு முரணாயிருந்தது மேலும் ஆசாரியர்கள் ஓய்வுநாளில் ஆலயத்திலுள்ள தங்கள் வேலையினால் ஓய்வுநாளையே வேலை நாளாக்கினாலும் குற்றமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மோசேயின் சட்டத்தில் வாசிக்கவில்லையாஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஆலயத்தைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் ஆனால் நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்ற இறைவார்த்தையின் கருத்து உங்களுக்குத் தெரிந்திருந்தால் நீங்கள் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திருக்கமாட்டீர்கள் ஏனெனில் மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று சொன்னார் இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார் அங்கு சுருங்கிய கையுடைய ஒருவன் இருந்தான் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும்படி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரிடம் ஓய்வுநாளில் குணமாக்குவது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ என்று கேட்டார்கள் இயேசு அவர்களிடம் உங்களில் யாரிடமாவது ஒரு ஆடு இருந்து அது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால் நீங்கள் அதைப்பிடித்து வெளியே தூக்கியெடுக்கமாட்டீர்களாஆட்டைவிட ஒரு மனிதன் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன் ஆதலால் ஓய்வுநாளிலே மோசேயினுடைய சட்டத்தின்படி நன்மை செய்வது உகந்ததே என்றார் அதற்குப் பின்பு இயேசு அந்த மனிதனிடம் உன் கையை நீட்டு என்றார் அவன் அப்படியே தன் கையை நீட்டினான் உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது அப்பொழுது பரிசேயர் வெளியே போய் இயேசுவைக் கொலை செய்யும்படி சதி செய்தார்கள் இதை அறிந்த இயேசுவோ அந்த இடத்தைவிட்டுச் சென்றார் அநேகர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள் அவர்களில் எல்லா நோயாளிகளையும் இயேசு குணப்படுத்தினார் அவர் தான் யாரென ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரித்தார் இறைவாக்கினன் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி இது நடந்ததுஇவர் நான் தெரிந்துகொண்ட எனது ஊழியராயிருக்கிறார் நான் அன்பு செலுத்துகிறவரும் என் மகிழ்ச்சிக்குரியவரும் இவரே இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன் இவர் யூதரல்லாதவர்களுக்கு நீதியை பிரசித்தப்படுத்துவார் இவர் வாக்குவாதம் செய்யமாட்டார் கூக்குரலிடவுமாட்டார் யாரும் வீதிகளில் இவருடைய குரலைக் கேட்கவுமாட்டார்கள் நீதிக்கு வெற்றி கிடைக்கும்வரை அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார் மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார் இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள் அப்பொழுது சிலர் பிசாசு பிடித்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள் அவன் பார்வையற்றவனும் ஊமையுமாய் இருந்தான் இயேசு அவனை குணமாக்கினார் அவனால் பேசவும் பார்க்கவும் முடிந்தது மக்கள் எல்லோரும் வியப்படைந்து இவர் தாவீதின் மகனாய் இருப்பாரோ என்றார்கள் ஆனால் பரிசேயர் இதைக் கேட்டபோது இந்த ஆள் பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே பிசாசுகளை விரட்டுகிறான் என்றார்கள் இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் தனக்குத்தானே விரோதமாய் பிளவுபடுகிற எந்த அரசும் பாழாய்ப்போகும் தனக்குத்தானே எதிராகப் பிளவுபடுகிற எந்த ஒரு பட்டணமும் குடும்பமும் நிலைக்காது சாத்தானை சாத்தான் விரட்டினால் அவன் தனக்குத்தானே பிளவுபடுகிறவனாய் இருப்பான் அப்படியானால் எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால் உங்கள் மக்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள் எனவே அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள் ஆனால் நானோ பிசாசுகளை இறைவனின் ஆவியானவரால் விரட்டுகிறேன் என்றால் இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது மேலும் ஒரு பலமுள்ளவனைக் கட்டிப்போடாமல் எப்படி ஒருவனால் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டுபோக முடியும் அவனைக் கட்டிப்போட்ட பின்பே அவனுடைய வீட்டைக் கொள்ளையிடமுடியும் என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான் என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒவ்வொரு பாவமும் நிந்தனையும் மனிதருக்கு மன்னிக்கப்படும் ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்திப்பது மன்னிக்கப்படாது மானிடமகனாகிய எனக்கு எதிராக யாராவது ஒரு வார்த்தை பேசினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் ஆனால் யாராவது பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படவே மாட்டாது இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் அது மன்னிக்கப்பட மாட்டாது ஒரு நல்ல மரத்தை நடுங்கள் அப்பொழுது அதன் கனிகளும் நல்லதாய் இருக்கும் ஒரு கெட்ட மரத்தை நீங்கள் நட்டால் அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும் ஏனெனில் ஒரு மரம் அதன் கனிகளினாலேயே இனங்காணப்படுகிறது விரியன் பாம்புக் குட்டிகளே தீயவர்களாகிய நீங்கள் நன்மையானதை எப்படிப் பேசுவீர்கள் ஏனெனில் இருதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும் நல்ல மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் நன்மையிலிருந்து நல்ல காரியங்களை வெளியே கொண்டுவருவான் தீய மனிதன் தன்னில் நிறைந்திருக்கும் தீமையிலிருந்து தீய காரியங்களை வெளியே கொண்டுவருவான் ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் மனிதர் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாய்த் தீர்க்கப்படுவீர்கள் உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள் அப்பொழுது சில பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரிடம் வந்து போதகரே நாங்கள் உம்மிடமிருந்து ஓர் அடையாளத்தைப் பார்க்க விரும்புகிறோம் என்று கேட்டார்கள் அதற்கு இயேசு பொல்லாத வேசித்தனம் நிறைந்த இந்த தலைமுறையினர் அற்புத அடையாளத்தைக் கேட்கிறார்கள் ஆனால் இறைவாக்கினன் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் பெரியதொரு மீனின் வயிற்றில் இருந்ததுபோல மானிடமகனாகிய நானும் மூன்று நாட்கள் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்கவேண்டும் நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும் இந்தத் தலைமுறையினரோடு எழுந்து நின்று இவர்கள்மீது குற்றஞ் சுமத்துவார்கள் ஏனெனில் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள் ஆனால் இப்பொழுதோ யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் நியாயத்தீர்ப்பின்போது தென்நாட்டு அரசியும் இந்தத் தலைமுறையினரோடே எழுந்து இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் ஏனெனில் அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால்நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன் என்று சொல்லும் அது அங்கு போகிறபோது அந்த வீடு வெறுமையாயும் கூட்டிச் சுத்தமாக்கப்பட்டும் ஒழுங்காக இருப்பதைக் காணும் அப்பொழுது அந்தத் தீய ஆவி போய் தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும் இவ்விதமாகவே இந்த பொல்லாத தலைமுறையினருக்கும் நடக்கும் என்றார் இயேசு மக்கள் கூட்டத்தோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயும் சகோதரர்களும் அவருடன் பேச விரும்பி வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து உமது தாயும் உமது சகோதரர்களும் உம்முடன் பேச விரும்பி வெளியே நிற்கிறார்கள் என்றான் இயேசு அவனிடம் யார் எனது தாய் யார் எனது சகோதரர்கள் என்று கேட்டார் பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி இவர்களே என் தாயும் என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள் எனது பரலோக பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களே எனது சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறார்கள் என்றார்
male
1
அதே நாளில் இயேசு வீட்டைவிட்டு வெளியே போய் கடலின் அருகே உட்கார்ந்திருந்தார் அப்பொழுது மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவைச் சுற்றி ஒன்றுகூடிவந்தனர் ஆகவே அவர் ஒரு படகில் ஏறி அதில் உட்கார்ந்தார் மக்கள் எல்லோரும் கரையில் நின்றார்கள் இயேசு அவர்களுக்குப் பல காரியங்களை உவமைகள் மூலம் சொன்னார் அவைகளில் இது ஒன்றாகும் ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான் அவன் விதைகளைத் தூவி விதைக்கையில் சில விதைகள் பாதையருகே விழுந்தன பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன சில விதைகள் மண் அதிகமாய் இல்லாத கற்பாறையான இடங்களில் விழுந்தன மண் ஆழமாக இல்லாததால் அது விரைவாக முளைத்தாலும்வெயில் அதிகமானபோது பயிர்கள் வாடிப்போயின வேர் இல்லாததினாலே அவை உலர்ந்தும் போயின வேறுசில விதைகள் முட்செடிகளின் நடுவில் விழுந்தன முட்செடிகள் வளர்ந்து பயிர்களை நெருக்கிப்போட்டன ஆனால் வேறுசில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன அங்கே அவை முறையே நூறு அறுபது முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும் என்றார் அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து நீர் மக்களுடன் ஏன் உவமைகள் மூலம் பேசுகிறீர் என்று கேட்டார்கள் இயேசு அதற்குப் பதிலாக உரைத்தது பரலோக அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவில்லை இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும் அவன் நிறைவைப் பெற்றுக்கொள்வான் இல்லாதவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் இதனாலேயே அவர்களுடன் நான் உவமைகள் மூலம் பேசுகிறேன் அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும் அவர்கள் கேட்டும் கேளாதவர்களாகவும் விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள் ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள் நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள் தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும் தங்கள் காதுகளால் கேட்காமலும் தங்கள் இருதயங்களினால் உணர்ந்து மனம் மாறாமலும் இருக்கிறார்கள் நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன் உங்கள் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை ஏனெனில் அவை காண்கின்றன உங்கள் காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை ஏனெனில் அவை கேட்கின்றன நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் பல இறைவாக்கினர்களும் நீதிமான்களும் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை ஆகையால் இப்பொழுது விதைக்கிறவனின் உவமையின் விளக்கத்தைக் கேளுங்கள்யாராவது இறைவனுடைய அரசைக் குறித்தச் செய்தியைக் கேட்டு அதை விளங்கிக்கொள்ளாதிருக்கும்போது தீயவன் வந்து அவருடைய இருதயத்தில் விதைக்கப்பட்டவற்றைப் பறித்தெடுக்கிறான் இதுவே பாதை ஓரத்தில் விதைக்கப்பட்ட விதையாகும் கற்பாறையான இடங்களில் விழுந்த விதை வார்த்தையைக் கேட்டவுடன் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள் ஆனால் அவர்களில் வேரில்லாததால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே நிலைத்திருப்பார்கள் வார்த்தையின் நிமித்தம் கஷ்டங்களும் துன்பங்களும் வரும்போது அவர்கள் விரைவாய் விழுந்துபோவார்கள் முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்டும் உலக வாழ்வின் கவலைகளும் செல்வச் செழிப்பின் வஞ்சனைகளும் அந்த வார்த்தையை நெருக்கிவிடுகின்றன அதனால் அவர்கள் பலனற்றுப் போவார்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்டு அதை விளங்கிக்கொள்கிறவர்கள் இவர்கள் நூறு அறுபது முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுப்பார்கள் இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார் பரலோக அரசு ஒரு மனிதன் தனது வயலில் நல்ல விதையை விதைத்ததற்கு ஒப்பாய் இருக்கிறது எல்லோரும் நித்திரையாய் இருக்கையில் அவனுடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான் கோதுமை முளைத்து வளர்ந்து கதிர்விட்டது அப்பொழுது களைகளும் காணப்பட்டன வயலுக்குச் சொந்தக்காரனின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து ஐயா நீர் உமது வயலில் நல்ல விதையை அல்லவா விதைத்தீர் அப்படியிருக்க களைகள் எங்கிருந்து வந்தன என்று கேட்டார்கள் அதற்கு எஜமான் பகைவனே அதைச் செய்தான் என்று பதிலளித்தான் வேலைக்காரர்கள் அவனிடம் நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடட்டுமா என்று கேட்டார்கள் அதற்கு எஜமான் இல்லை நீங்கள் களைகளைப் பிடுங்கும்போது அவற்றுடன் கோதுமையையும் பிடுங்கிவிடக் கூடும் அறுவடைவரைக்கும் இரண்டும் சேர்ந்து வளரட்டும் அப்பொழுது நான் அறுவடை செய்கிறவர்களிடம் முதலில் களைகளை ஒன்றுசேர்த்து அவற்றை எரிப்பதற்காகக் கட்டுங்கள் அதற்குப் பின்பு கோதுமையை சேர்த்து எனது களஞ்சியத்திற்கு கொண்டுவாருங்கள் என்பேன் இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார் பரலோக அரசு ஒருவன் தனது நிலத்தில் விதைத்த கடுகுவிதையைப் போன்றது அது எல்லா விதைகளிலும் சிறிதானதாக இருந்தும் அது வளரும்போது தோட்டத்திலுள்ள மற்றெல்லாச் செடிகளைப் பார்க்கிலும் பெரியதாய் வளர்ந்து மரமாகிறது அதனால் ஆகாயத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்குகின்றன என்றார் இயேசு அவர்களுக்கு வேறொரு உவமையைச் சொன்னார் பரலோக அரசு புளிப்புச்சத்துக்கு ஒப்பாயிருக்கிறது ஒரு பெண் ஏறக்குறைய இருபத்து ஏழு கிலோ மாவிலே சிறிதளவு புளித்தமாவைக் கலந்து அது முழுவதும் புளிக்கும்வரை வைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது என்றார் இயேசு இந்தக் காரியங்களையெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு உவமைகள் மூலமே பேசினார் இயேசு அவர்களுக்கு உவமைகள் இல்லாமல் எதையுமே பேசவில்லை இறைவாக்கினன் மூலம் கூறப்பட்டவை இவ்வாறு நிறைவேறின நான் உவமைக் கதைகளால் என் வாயைத் திறப்பேன் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மறைபொருளானவைகளைக் கூறுவேன் அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைவிட்டு வீட்டிற்குள் சென்றார் அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து வயலின் களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லும் என்று கேட்டார்கள் இயேசு அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது நல்ல விதையை விதைத்தவர் மானிடமகனாகிய நானே வயல் என்பது உலகம் நல்ல விதை பரலோக அரசின் பிள்ளைகள் களைகளோ தீயவனின் பிள்ளைகள் அவற்றை விதைக்கிற பகைவன் சாத்தான் அறுவடை என்பது உலகத்தின் முடிவு அறுவடை செய்பவர்கள் இறைத்தூதர்கள் களைகள் பிடுங்கப்பட்டு நெருப்பில் எரிக்கப்படுகிறதுபோல இந்த உலகத்தின் முடிவிலும் நடைபெறும் மானிடமகனாகிய நான் எனது தூதரை அனுப்புவேன் அவர்கள் போய் எனது அரசில் இருக்கிற பாவத்திற்கு காரணமான எல்லாவற்றையும் தீமை செய்கிறவர்கள் எல்லோரையும் பிடுங்கிப் போடுவார்கள் இறைத்தூதர் அவர்களை எரியும் சூளைக்குள் எறிந்துவிடுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் அப்பொழுது நீதிமான்களோ தங்களுடைய பிதாவின் அரசில் சூரியனைப்போல் ஒளி வீசுவார்கள் கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும் பரலோக அரசு ஒரு வயலில் மறைந்து கிடக்கும் புதையலுக்கு ஒப்பாயிருக்கிறது அதை ஒருவன் கண்டுபிடித்தபோது அவன் அதைத் திரும்பவும் மறைத்து வைத்துவிட்டு பின்பு போய் தனது மகிழ்ச்சியின் நிமித்தம் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று அந்த வயலை வாங்குகிறான் மேலும் பரலோக அரசு வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது பெரும் மதிப்புள்ள ஒரு முத்தைக் கண்டதும் அவன் போய் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் விற்று அதை வாங்குகிறான் மேலும் பரலோக அரசு கடலிலே வலையை வீசி எல்லா விதமான மீன்களையும் பிடிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது வலை நிரம்பியபோது மீனவர் அதைக் கரைக்கு இழுத்தெடுத்தார்கள் பின்பு அவர்கள் உட்கார்ந்து நல்ல மீன்களையெல்லாம் ஒன்றாகக் கூடைகளில் சேர்த்தார்கள் கெட்டவற்றையோ எறிந்துவிட்டார்கள் இவ்வாறே உலகத்தின் முடிவிலும் நடக்கும் இறைத்தூதர் வந்து நீதிமான்களிலிருந்து தீயவர்களைப் பிரித்தெடுத்துஅவர்களை எரிகிற சூளைக்குள் எறிந்துபோடுவார்கள் அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இவற்றையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொண்டீர்களா என்று இயேசு சீடர்களை கேட்டார் ஆம் என அவர்கள் பதிலளித்தார்கள் ஆகவே பரலோக அரசின் சீடனான ஒவ்வொரு மோசேயின் சட்ட ஆசிரியனும் தனது பொக்கிஷ அறையிலிருந்து புதியவைகளையும் பழையவைகளை வெளியே கொண்டுவருகின்ற ஒரு வீட்டின் சொந்தக்காரனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார் இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின் அங்கிருந்து சென்றார் அவர் தமது சொந்த பட்டணத்திற்கு வந்து அவர்களுடைய ஜெப ஆலயத்தில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார் அவர்கள் வியப்படைந்தார்கள் இவன் இப்படிப்பட்ட ஞானத்தையும் அற்புத வல்லமையையும் எங்கிருந்து பெற்றான் என்று கேட்டார்கள் அவர்கள் இவன் தச்சனின் மகன் அல்லவா இவனுடைய தாயின் பெயர் மரியாள் அல்லவா யாக்கோபு யோசேப்பு சீமோன் யூதா ஆகியோர் இவனது சகோதரர்கள் அல்லவாஇவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கிறார்கள் அல்லவா அப்படியிருக்க இந்த மனிதன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான் என்று சொல்லிஅவரைக்குறித்துக் கோபமடைந்தார்கள் அப்பொழுது இயேசு அவர்களிடம் ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும் அவனது சொந்த வீட்டிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான் என்றார் அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம் இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை
male
1
அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான் ஏரோது தனது வேலைக்காரர்களிடம் அவன் யோவான் ஸ்நானகனே அவன் உயிரோடு திரும்பவும் எழுந்துவிட்டான் அதனாலேயே அவனிடத்தில் அற்புத வல்லமைகள் செயல்படுகிறது என்று சொன்னான் தனது சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் நிமித்தமே ஏரோது யோவானைக் கைதுசெய்து அவனைக் கட்டி சிறையில் அடைத்திருந்தான் ஏனெனில் யோவான் அவனிடம் அவளை நீ வைத்திருப்பது சட்டத்திற்கு மாறானது என்று சொல்லியிருந்தான் ஏரோது யோவானைக் கொலைசெய்ய விரும்பினான் ஆனால் மக்களுக்குப் பயந்திருந்தான் ஏனெனில் மக்கள் அவனை இறைவாக்கினன் என்று எண்ணினார்கள் ஏரோதின் பிறந்தநாள் அன்று ஏரோதியாளின் மகள் அவர்களுக்காக நடனமாடி ஏரோதை மிகவும் மகிழ்வித்தாள் அதனால் அவள் எதைக் கேட்டாலும் அதை அவளுக்குத் தருவதாக ஏரோது ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான் அவள் தனது தாயின் தூண்டுதலினால் யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து எனக்குக் கொடுங்கள் என்று கேட்டாள் அரசன் மிகவும் துக்கமடைந்தான் ஆனால் தனது ஆணையின் நிமித்தமும் தனது விருந்தினர்களின் நிமித்தமும் அவன் அவளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்படி உத்தரவிட்டான் அவ்வாறே சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது அவனுடைய தலை ஒரு தட்டில் வைக்கப்பட்டு அந்தச் சிறுமியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது அவள் அதைத் தன் தாயிடம் கொண்டுபோனாள் அப்பொழுது யோவானின் சீடர்கள் வந்து அவனது உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள் அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள் இயேசு நடந்தவற்றைக் கேள்விப்பட்டபோது யாருக்கும் தெரியாமல் தனிமையான இடத்திற்கு படகில் ஏறிச்சென்றார் இதைக் கேள்விப்பட்ட மக்கள் பட்டணத்திலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள் இயேசு கரையில் இறங்கியவுடன் அங்கே மக்களின் பெரிய கூட்டத்தைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகி அவர்களில் நோயுள்ளவர்களைச் குணமாக்கினார் மாலை வேளையானபோது சீடர்கள் இயேசுவிடம் வந்து இது சற்று தூரமான ஒரு இடம் ஏற்கெனவே நேரமாகிவிட்டது மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் அவர்கள் கிராமங்களுக்குப் போய் அங்கே தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டை வாங்கிக்கொள்ளட்டும் என்றார்கள் அதற்கு இயேசு அவர்கள் போக வேண்டியதில்லை நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள் என்றார் இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் மட்டுமே இருக்கின்றன என அவர்கள் சொன்னார்கள் அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார் அவர் மக்களை புற்தரையில் உட்காரும்படிச் செய்தார் பின்பு அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை நோக்கிப்பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்தி அப்பங்களைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார் சீடர்கள் அதை மக்களுக்குக் கொடுத்தார்கள் அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள் அவர்கள் சாப்பிட்டு மீதியான துண்டுகளை சீடர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள் சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது இவர்களைத் தவிர பெண்களும் பிள்ளைகளுங்கூட இருந்தார்கள் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிக் கொண்டிருக்கையில் தனக்கு முன்பாகவே சீடரை படகில் ஏறி மறுகரைக்குப் போகும்படி செய்தார் அவர்களை அனுப்பிவிட்ட பின்பு இயேசு தனிமையாக மன்றாடுவதற்கென மலையின்மேல் ஏறினார் இரவு வேளையானபோது அவர் அங்கே தனிமையாய் இருந்தார் ஆனால் சீடர்கள் சென்ற படகு கரையை விட்டு மிகத் தொலைவில் போயிருந்தது எதிர்க்காற்று வீசியதால் படகு அலைக்கழிக்கப்பட்டது அதிகாலை மூன்றாம்மணி நேரத்தில் இயேசு கடலின்மேல் நடந்து அவர்களிடம் சென்றார் அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது திகிலடைந்து அது பேய் என்று சொல்லி பயத்துடன் சத்தமிட்டார்கள் உடனே இயேசு அவர்களிடம் தைரியமாய் இருங்கள் இது நான்தான் பயப்படவேண்டாம் என்றார் அதற்கு பேதுரு ஆண்டவரே நீர்தான் என்றால் நானும் தண்ணீர்மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும் என்றான் அதற்கு இயேசு வா என்றார் அப்பொழுது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி தண்ணீரின்மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான் ஆனால் அவன் காற்றைக் கண்டபோது பயமடைந்து மூழ்கத்தொடங்கி ஆண்டவரே என்னைக் காப்பாற்றும் என்று கதறினான் உடனே இயேசு தமது கையை நீட்டி பேதுருவைப் பிடித்தார் அற்பவிசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய் என்றார் அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று படகிற்குள் இருந்தவர்கள் அவரை வழிபட்டு உண்மையாகவே நீர் இறைவனின் மகன் என்றார்கள் அவர்கள் மறுகரைக்குச் சென்று கெனேசரேத்து என்னும் இடத்தில் கரை இறங்கினார்கள் அந்த இடத்து மக்கள் இயேசுவை அடையாளம் கண்டபோது சுற்றுப்புறங்களுக்கு எல்லாம் செய்தி அனுப்பினார்கள் அவர்களோ தங்களில் நோயாளிகளை எல்லாம் அவரிடம் கொண்டுவந்தார்கள் நோயாளிகள் இயேசுவின் மேலுடையின் ஓரத்தையாகிலும் தொடுவதற்கு அவர் அனுமதிக்க வேண்டுமென அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள் அவரைத் தொட்ட யாவரும் குணமடைந்தார்கள்
male
1
README.md exists but content is empty.
Downloads last month
36