Title
stringlengths 21
197
| Author
stringlengths 4
27
| City
stringlengths 3
20
| Published
stringlengths 19
19
| Text
stringlengths 149
24k
|
---|---|---|---|---|
ஜெயலலிதா பிறந்தநாள் | 'மக்கள் மனம் குளிர நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக' - அதிமுக | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 12:40:00 |
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி, வரும் பிப்.24-ம் தேதியன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும், அன்றைய தினம், மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு அக்கட்சியின் தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் மக்கள் பேரியக்கமான அதிமுகவை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமது வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டு, கட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்து, தமிழ் நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, ``தனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; தனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; தான் வாழ்வதே இந்த இயக்கத்துக்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்’’ என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன என்று வீரமுழக்கமிட்டு அரும்பணியாற்றியவர்.
இத்தகைய போற்றுதலுக்குரிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளான 24.2.2024 – சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அவரது உருவச் சிலைக்கு, அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ``நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள 76-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கட்சித் தொண்டர்கள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும்; இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும்’’ என்றும்; ``எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கட்சிக் கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கட்சித் தொண்டர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, அவரது பிறந்த நாளான 24.2.2024 அன்று, அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தும்; தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே அவரது உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, கண் தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2024 அன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
|
தே.ஜ. கூட்டணியில் சேர இந்து மக்கள் கட்சி முயற்சி | செய்திப்பிரிவு | கூறியது | 2024-02-18 12:36:00 |
இந்து மக்கள் கட்சியின் 29-ம் ஆண்டு தொடக்க விழா, மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள், மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகியவை கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றன.
இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக வேண்டும். இதற்காக தேர்தல் பணி, பிரச்சாரம், விளம்பர குழுக்களை அமைக்கவுள்ளோம்.
தமிழகத்தில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுக்கு மத்தியில்தான் போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றி அடையக் கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், இந்து மக்கள் கட்சியைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக்கும் அறிவிப்பு வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.குரு மூர்த்தி மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.
|
இண்டியா கூட்டணிக்கு மக்கள் விடுதலை கட்சி ஆதரவு | செய்திப்பிரிவு | கூறியது | 2024-02-18 12:24:00 |
கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) மக்கள் விடுதலை கட்சியின் மாநில மாநாடு தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சி தலைவர் ஜெ.சிதம்பர நாதன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் பாசிசத்தை கட்டமைப்பதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
சுரண்டலை உறுதிப்படுத்துவதற்காக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட ஒற்றை கலாசாரத்தை புகுத்தும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்.
தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாஜக விஷயத்தில் திமுக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனவே, திமுக அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
|
சிங்காரவேலர் விரும்பிய சமதர்ம சமூகம் வளர பாடுபடுவோம்: முதல்வர் ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 12:19:00 |
சென்னை: ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்காரவேலரின் 165-வது பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாள் இன்று.
ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளர பாடுபடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னை மேயர் பிரியா மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தமிழக அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
|
20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.ஐ பதவி உயர்வு: அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 11:24:00 |
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நாளை (பிப்.20) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (பிப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவலர்கள் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு குறித்தக் காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு ஆகும். ஆனால், காவலர்களுக்கு 7 ஆண்டுகளில் தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் 3 பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேருவோருக்கு 7 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர்களாகவும், பத்தாண்டுகளில் தலைமைக் காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், பல்வேறு நிலைகளில் காவலர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை பதவி உயர்வு குறித்த அவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றவில்லை.
ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை அங்கு சட்டம் & ஒழுங்கும், பொது அமைதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். அந்த அடிப்படைத் தேவையை நிறைவேற்றித் தருபவர்கள் காவலர்கள் தான். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் காரணமாக இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அவர்களை கவுரவப்படுத்தவும், கண்ணியம் காக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது தான் உண்மையாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காவலராக பணியில் சேரும் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தாலும் காவல் அதிகாரி என்ற நிலையை எட்ட முடியாமல் தலைமைக் காவலராகவே ஓய்வு பெறும் அவல நிலை இருந்தது.
இந்த நிலையை மாற்ற வேண்டும், காவலராக பணியில் சேருபவர்கள் அதிகாரி நிலையில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேருவோர் பத்தாண்டுகளின் நிறைவில் முதல்நிலைக் காவலராகவும், 15-ஆம் ஆண்டின் நிறைவில் தலைமைக் காவலர்களாகவும், 25-ஆம் ஆண்டின் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை 2006-11 ஆட்சிக் காலத்தில் கலைஞர் செயல்படுத்தினார். இது வரவேற்பைப் பெற்றாலும் கூட, சற்று அதிக வயதில் காவலராக பணியில் சேர்ந்தவர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் என்ற நிலையை அடையை முடியவில்லை. அவர்களின் மனக்குறையை களையும் நோக்குடன் தான் திமுக இந்த வாக்குறுதியை அளித்திருந்தது.
ஆனால், வழக்கம் போலவே மற்ற வாக்குறுதிகளுடன் சேர்த்து காவலர்களின் பதவி உயர்வு தொடர்பான வாக்குறுதியையும் நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டது. தமிழக அரசில் பெரிய துறையாக கருதப் படுவது வருவாய்த் துறை ஆகும். வருவாய்த்துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் கடைநிலை பணியில் சேருபவர்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வைப் பெற்று அதிகாரிகள் நிலையில் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், காவல்துறையில் மட்டும் இந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவலராக பணியில் சேருபவர் காவலராகவே பணி ஓய்வு பெறுவது கொடுமை. இது மாற்றப்பட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே அரசாணையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றலாம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதால் சிறிய தொகை மட்டும் தான் அரசுக்கு கூடுதலாக செலவாகும். இதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த சுமையும் ஏற்படாது. அதே நேரத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 1999 ஆம் ஆண்டில் பணியில், சேர்ந்த 1100 பேர், 2002-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 3000 பேர், 2003-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 11,000 பேர் என 15,000 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு கிடைக்கும்.
கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நிலைக் காவலராகவும், தலைமைக் காவலராகவும் பதவி உயர்வு கிடைக்கும். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பதவி உயர்வை எதிர்நோக்கியிருக்கும் காவலர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
|
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு | இ.மணிகண்டன் | விருதுநகர் | 2024-02-18 11:05:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் நேற்று (பிப்.17) விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், போர்மேன்கள் தொம்பக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், மாதாங்கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோர் மீது ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதில், பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் பட்டாசு ஆலையை முறையாக பராமரிக்காமலும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், வெடிபொருள் மருந்து கலவையை சரிவரி கலக்கி கொடுக்காததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம்: முன்னதாக, விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்த துரதிர்ஷ்ட சம்பவம் குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன். இந்த கடினமான சூழலில், எனது எண்ணங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்போருடனேயே இருக்கும். காயமடைந்தவர்களும் விரைவாக பூரண குணமடைய விரும்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிதி: இதேபோன்று, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
|
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று 44 மின் ரயில்கள் ரத்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 09:37:00 |
சென்னை: சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் இன்று ( பிப்.18 ) மாற்றம் செய்யப்பட உள்ளது. மொத்தம் 44 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 நண்பகல் 12,00, 12.10, 12.20, 12.40, மதியம் 1.15, 1.30, 2.00, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதே போல, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று காலை 11.00, பகல் 11.50, 12.30, 12.50, மதியம் 1.45,பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு இன்று மதியம் 1.00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று காலை 10.05, 10.15, 10.25, 10.45, 10.55, 11.05, 11.25, 11.35, நண்பகல் 12.00, 12.15, 12.45 மதியம் 1.30, 1.45, பிற்பகல் 2.15, மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அதேபோல, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேஇன்று காலை 9.40, 10.55, 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளன.
இதுதவிர, காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இன்று காலை 9.30 மணிக்கு இயக்கப்படும மின்சார ரயில், திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு இன்று முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
ரத்து செய்யப்படும் மின்சார ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இத்தகவலை சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
22 வரை ரயில் சேவையில் மாற்றம்: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகாரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் பிப்.18-ம் தேதி முதல் பிப்.22-ம்தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 8.15, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு பிப்.18-ம் தேதி இரவு 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.20, 11.40ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு பிப்.19, 20, 21 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு பிப்.18-ம் தேதி இரவு 11.15, 11.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு பிப்.18-ம் தேதி இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் - கடற்கரை இடையே பகுதி ரத்துசெய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ஹெல்மெட் அணியாத காவலர்களுக்கு நூதன தண்டனை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்க காரைக்கால் எஸ்.எஸ்.பி உத்தரவு | செய்திப்பிரிவு | காரைக்கால் | 2024-02-18 06:08:00 |
காரைக்கால்: காரைக்காலில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு காவலர்கள், இருசக்கர வாகனஓட்டிகளுக்கு ரோஜா பூ வழங்குமாறு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நூதன தண்டனை வழங்கினார்.
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் நேற்று முன்தினம் காரைக்கால் நகரப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இரு காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த முதுநிலைகாவல் கண்காணிப்பாளர் இரு காவலர்களையும் தனது அலுவலகத்துக்கு அழைத்து வரும்படி, அங்கிருந்த மற்ற காவலர்களிடம் கூறினார். இதையடுத்து, 2 காவலர்களும் எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று, அவரை சந்தித்தனர்.
"ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியது ஏன்?" என்று கேட்டு, அவர்களைக் கண்டித்த காவல் கண்காணிப்பாளர், இருவரும் காரைக்காலில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத் தில் செல்பவர்களுக்கு ரோஜா பூ வழங்க வேண்டும் என்று நூதன தண்டனையை வழங்கினார்.
இதையடுத்து, இரு காவலர் களும் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் புதிய பேருந்து நிலைய சிக்னலில் நின்று, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு ரோஜா பூ வழங்கினர்.
மேலும், சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
|
டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது | செய்திப்பிரிவு | தஞ்சாவூர் | 2024-02-18 05:56:00 |
தஞ்சாவூர்: டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, தஞ்சாவூரில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். வேளாண்விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரும், மத்திய அரசின் மின்வாரிய ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற விவசாயிகள், மாநிலஎல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுஉள்ளனர்.
இதனால், விவசாயிகள் ஆங்காங்கே டிராக்டர்களுடன் முகாமிட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இதன்படி,தஞ்சாவூரில் நேற்று பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன.
தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு திரண்ட விவசாயிகள், மத்தியஅரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ரயில் நிலையத்துக்குள் நுழையமுயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்தனர். ஆனால், விவசாயிகள் போலீஸாரை மீறிக் கொண்டு செல்லமுயன்றதால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
எனினும், போலீஸாரையும், அவர்கள் வைத்திருந்த தடுப்புகளையும் மீறி விவசாயிகள் ரயில் நிலையத்தின் உள்ளே சென்று திருச்சி - சென்னை சோழன் விரைவுரயிலை மறித்து 20 நிமிடங்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் மற்றும் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
|
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம்: அமைச்சர் முத்துசாமி தகவல் | செய்திப்பிரிவு | ஈரோடு | 2024-02-18 05:52:00 |
ஈரோடு: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் உள்ளூர் திட்டமிடல்ஆணையத்தின் (டிடிசிபி) மாஸ்டர் பிளான் இணையதள சேவைதொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த சேவையைத் தொடங்கிவைத்த அமைச்சர் முத்துசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் விலக்கப்பட்ட பகுதிகளை, மீண்டும் சேர்ப்பது குறித்த பொதுமக்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். 2016-ம் ஆண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த பிப்ரவரி 29-ம்தேதி கடைசி நாளாகும். அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர்கள் 10 சதவீத நிலத்தை அரசிடம் ஒப்படைத்து, உரிய அனுமதியைப் பெறலாம்.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். கட்டிடங்களின் உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. திறந்தவெளி இருப்பு விதிமுறைகளில் எந்த தளர்வும் செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, டிடிசிபி உதவி இயக்குநர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையத்துக்கு அடிக்கல் | செய்திப்பிரிவு | கடலூர் | 2024-02-18 05:49:00 |
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத் துறைசார்பில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி, வடலூரில் சத்திய ஞான சபையில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எஸ்.பி. ராஜாராம் முன்னிலை வகித்தனர். அறநிலையத் துறை இணை ஆணையர் பரணிதரன் வரவேற்றார். அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டிவைத்தார். அவர் பேசியதாவது: அடிக்கல் நாட்டு விழாவில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். எனினும், சிலர் தேவையின்றி அரசியலாக்கி வருகின்றனர்.
இந்தப் பெருவெளியில் உள்ள 72 ஏக்கரில், 3.42 ஏக்கர் மட்டுமே இந்த மையத்துக்காக பயன்படுத்த உள்ளது. வள்ளலாரின் கொள்கையை உலக அளவில் கொண்டுசெல்லும் வகையில் தியான மண்டபம், தகவல் மையம், கலையரங்கம், மின் நூலகம், முதியோர் இல்லம், கழிப்பறை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், வெளிநாட்டு மாணவர்கள் தங்கி ஆய்வு செய்ய ஆய்வகம், அணுகு சாலை வசதியுடன் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.
இந்த மையத்தால் பொருளாதாரம் மேம்படும். மையம் அமைப்பது குறித்து 3 முறை கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி, இதை அமைக்க முடிவு செய்தோம். எவ்வளவு தடை வந்தாலும், சர்வதேச மையம் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். சத்திய ஞானசபை நிர்வாக அதிகாரி ராஜாசரவணகுமார் நன்றி கூறினார்.
பாமக, பாஜக ஆர்ப்பாட்டம்: வள்ளலார் மையம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடலூர் நான்கு முனை சந்திப்பில் நேற்று காலை திரண்ட பாமகவினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், தாமரைக்கண்ணன், மாவட்டசெயலாளர்கள் ஜெகன், சண்முத்துகிருஷ்ணன் கார்த்திகேயன், செல்வமகேஷ் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல, மாலையில் பாஜகசார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் திருமுருகன்,மாவட்ட துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பங்கேற்றோர் கூறும்போது, "வள்ளலாரின் சன்மார்க்கத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். வள்ளலார் வழி அன்பர்கள் தைப்பூசத்துக்கு திரளும் இப்பெருவெளியை, இந்த திட்டத்துக்குப் பயன்படுத்தினால், அவர்கள் வந்து செல்லும் போது கடும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே எதிர்ப்பு தெரிவிக்கிறோம்" என்றனர்.
|
வங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு நாளை தமிழ்நாடு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:42:00 |
சென்னை: அகில இந்திய காங்கிரஸின் வங்கிகணக்கை முடக்கியதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ளவருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு நாளை (பிப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது..
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல்பத்திர நன்கொடை திட்டம் மூலம் பாஜக மட்டும் ரூ.6,572 கோடியை பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவீதம். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது.
இதை சகித்துக்கொள்ள முடியாத மத்திய பாஜக அரசு, வருமானவரித்துறையை ஏவி அகில இந்தியகாங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ்வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. 2018-19 ஆண்டில் காங்கிரஸ்கட்சி, காலம் தவறி வருமானவரிகணக்கை தாக்கல் செய்ததால்ரூ.210 கோடி அபராதம் விதித்திருக்கிறது. மேலும், காங்கிரஸின் வங்கி கணக்குகளையும் முடக்கியது.
தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூ.1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6,812. இதன்மூலம் ரூ.6,812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? யார் இந்த கார்ப்பரேட்டுகள்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்களுக்கு பாஜகசெய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பாஜக செய்த சட்டவிரோதஉதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
இதன்மூலம் தேர்தல் களத்தில்சமநிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை மூலம்காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை மத்திய பாஜக அரசு முடக்கியதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உளள வருமான வரித்துறை அலுவலகங்கள் முன்பு நாளை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
|
சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: திருப்புகழ் குழுவின் அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:36:00 |
சென்னை: சென்னை மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வெ.திருப்புகழ் தலைமையிலான குழுவினர் தங்கள் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்புமேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை திருப்புகழ் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து, 2023-ம் ஆண்டு வெள்ள பாதிப்பு பிரச்சினை மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய 86 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அளித்தனர்.
அப்போது பேராசிரியர் ஜனகராஜன், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டி.காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர்கள் இளங்கோ, பாலாஜி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரதீப், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதல்வரிடம் அளித்த அறிக்கையில், குறுகிய மற்றும் நடுத்தர நீண்டகாலத் திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர திட்டமிடலை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம்அளிக்கப்பட்ட அறிக்கையில் முந்தைய ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்துக்கான காரணங்கள், உடனடி தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்று குறுகிய, நீண்டகால திட்டங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசு முழு முயற்சியாக இறங்கி, நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டது. சென்னை மாநகராட்சி தவிர, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கும் மழைநீர் வடிகால் பணிகள் வழங்கப்பட்டன. பணிகள் நடைபெறும் போது, 11-க்கும் மேற்பட்ட முறை ஆய்வு நடத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டன.
போரூர், செம்மஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் பணிகள்எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட் டன. இறுதி அறிக்கையில் கூடுதல்பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற பாதாள சாக்கடை, நகர்ப்புற திட்டமிடல், திடக்கழிவு மேலாண்மை, பருவகால மாற்றம், பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட 11 வகையான பிரிவுகளின்கீழ் 365 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உயர்நிலை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதன்மூலம் பணிகளைமுழுமையாக ஆய்வு செய்து முடிக்க முடியும் என்று குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
|
பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும் விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? - களஆய்வு செய்ய உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:32:00 |
சென்னை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும் விவகாரத்தில் உரிய விதிமுறைகள் சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும். அதில் திருப்தியடைந்தால் மட்டுமே உரிமம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்த தாவது:
மக்களிடம் விழிப்புணர்வு இல்லை: பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலை கருத்தில்கொண்டு பெட்ரோல் பங்குகளுக்கு பல்வேறு நிபந்தனைகள்விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருப்பது இல்லை.
பொதுவாக பெட்ரோல் பங்குகள் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை உற்பத்தி செய்யும் கனரக தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தடையின்றி செல்ல பாதை இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை எந்த பெட்ரோலிய நிறுவனமும் கடைபிடிப்பதில்லை. பெட்ரோலிய எண்ணெய் கசிவுகளால் புற்றுநோய், மூளை,நரம்பு பாதிப்பு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கு தீங்குவிளைவிக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளுக்கு விதிகளுக்கு புறம்பாக உரிமமும், தடையில்லா அனுமதியும் வழங்கப்படுகிறது.
பல பெட்ரோல் பங்குகள் போலியான தடையில்லா சான்று சமர்ப்பித்து மத்திய அரசிடமிருந்து உரிமம் பெற்றுள்ளன. இவற்றைமத்திய, மாநில அரசு அதிகாரிகளும்ஆய்வு செய்வது இல்லை.
சிபிஐ விசாரணை வேண்டும்: எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன், இனிவரும் காலங்களில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகள் நேரடியாக களஆய்வு செய்து அனுமதியளித்த பிறகே, பெட்ரோல் பங்குகளுக்கு உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அமர்வில்விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வி.பி.ஆர்.மேனனும், மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் நடராஜனும் ஆஜராகி வாதிட்டனர்.
கள ஆய்வு செய்ய வேண்டும்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொடரப்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல் பங்குகளுக்கான உரிமம் வழங்கும்முன்பாக உரிய விதிமுறைகள் சட்டப்பூர்வமாக பின்பற்றப்பட்டுள் ளதா என்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக நேரில் களஆய்வு மேற்கொண்டு கண்டறிந்து திருப்தியடைந்தால் மட்டுமே உரிமம் வழங்க எடுக்க வேண்டும்.
அதற்காக எல்லா பெட்ரோல் பங்குகளையும் ஆய்வு செய்தாக வேண்டும் என்பதில்லை. எந்த பெட்ரோல் பங்குகள் மீது சந்தேகம் உள்ளதோ, அந்த விற்பனை நிலையங்களின் மெய்த்தன்மை குறித்து மீண்டும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
|
கர்நாடக அரசின் பட்ஜெட்டில் மேகேதாட்டு அணை கட்டும் அறிவிப்பு: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:28:00 |
சென்னை: கர்நாடக அரசின் பட்ஜெட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக அரசு, கடந்த1-ம் தேதி காவிரி மேலாண்மைஆணையத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உடனடியாக உச்சநீதிமன்றம் செல்லாமல் காலதாமதம் செய்ததால், கர்நாடக அரசுமாநில பட்ஜெட்டில், உரிய அனுமதிபெற்று காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வெளிப்படையா கவே மீறுவது நீதிமன்ற அவ மதிப்பாகும்.
மேகதேதாட்டு அணை கட்டினால், 20 மாவட்டங்களில் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் இன்றி பாலைவனமாகும். எனவே அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிடவேண்டும். தவறினால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் அறப் போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை பேரதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது. இது கண்டனத்துக் குரியது. அம்மாநில அரசை கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திலும் முறையிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: மேகேதாட்டு அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பு, மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலு சேர்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கர்நாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். கர்நாடக அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிக்கிறோம்.
ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன்: கர்நாடகத்தின் சூழ்ச்சியை முறியடிக்க, தமிழக அரசு சட்டப் போராட்டம் மட்டுமல்லாது, தொடர் போராட்டங் களையும், அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு முன்னெடுக்க வேண்டும். கர்நாடகஅரசு அணைகட்டும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
|
திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:25:00 |
சென்னை: திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ வெளியிட்ட தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, 2ஜி வழக்கில் ஆதாரங்களை மாற்றுவதற்கு, ரெய்டு குறித்த தகவல்கள் முன்கூட்டியே பகிரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக மீது ஊழல், முறைகேடுஉள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறிவருகிறார். மேலும், என் மண் என் மக்கள்பெயரில் நடைபயணம் உள்ளிட்டபல்வேறு வகைகளில் திமுகவுக்குஎதிராக அரசியல் செய்துவரும் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ்என்ற பெயரில் ஊழல் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். கடந்தஆண்டு ஏப்ரலில் திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஜூலைமாதம் திமுக ஃபைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில்,அரசுத் துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து திமுகஃபைல்ஸ் பாகம் மூன்று என பெயரிலான தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை அவர் வெளியிட்ட உரையாடல்களில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் தனித்தனியே முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட்டுடன் பேசியதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுவரை 3 ஆடியோக்களைஅண்ணாமலை வெளியிட்டிருந் தார்.
சோதனை தொடர்பாக உரையாடல்: இதைத் தொடர்ந்து திமுக ஃபைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோ பதிவை அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில், திமுகஎம்பி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான மற்றொரு தொலைபேசிஉரையாடல்கள் இடம்பெற்றுள்ள தாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். உரையாடலில் ஒரு வழக்கின்சோதனை தொடர்பாக பேசப்படுகிறது. ஆனால், அது தொடர்பான முழு விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எக்ஸ் வலைதள பதிவில் அண்ணாமலை, “2ஜி வழக்கின் முக்கிய குற்றவாளிஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையேயான உரையாடல்களை வெளியிட்டுள் ளோம்.
2ஜி ஊழலில் திமுகவின்முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத்தலைமையின் தலையீடு, முக்கிய ஆதாரங்கள் அனைத்தையும் அழிக்கவோ, மாற்றவோ முடியும் என்பதற்காக ரெய்டு பற்றிய முன்கூட்டிய தகவல் பகிரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
|
திருச்சியில் தகவல் தொழில்நுட்ப கட்டிடம்; விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:20:00 |
சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிமாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இத்திட்டத்தினால் விழுப்புரம்மாவட்டத்தில் படித்த இளைஞர்கள்வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும். முதலாவது இடஒதுக்கீடு ஆணையை ‘எஸ்யுவிஸ்டார்ட்அப் ஸ்பேஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.யுவராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து காணொலி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிகுமார், எம்எல்ஏ ஆர்.லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்தசேவைகள் தமிழகத்தில் தழைத்துவளர, தமிழக அரசின் கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகியநகரங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதாரமண்டலங்களை (எல்கோசெஸ் கள்) உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், நவல்பட்டில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) 147.61ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.80.55 கோடிமுதலீட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 123.23 ஏக்கர் நிலப் பரப்பளவு, சிறப்புப் பொருளாதார மண்டலமாக உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, நவல்பட்டில் 1,16,064 சதுரஅடி பரப்பளவில்ரூ.59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் நேற்று திறந்து வைத்தார். இந்தத்தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தின் மூலம் சுமார் 2,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், துறை செயலர்தீரஜ்குமார், திருச்சியில் இருந்து காணொலிக் காட்சியில் மாவட்டஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:16:00 |
சென்னை: 2024–25-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிஉரையுடன் தொடங்கியது. ஆளுநர்தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும்படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும்அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதைத்தொடர்ந்து, அன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்.15-ம் தேதிவரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பிப்.13-ம் தேதிஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை (பிப்.19) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, பிப்.20–ம் தேதிவேளாண் நிதிநிலை அறிக்கையைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும்மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ இயலாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படியே, இந்தாண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பொது பட்ஜெட், வேளாண்பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, பிப்.20–ம் தேதி முதலே 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்பின், பிப்.22–ம்தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்கின்றனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கானசட்ட முன்வடிவு தாக்கல் செய்யப் பட்டு நிறைவேற்றப்படுகிறது.
தங்கம் தென்னரசின் முதல் பட்ஜெட்: கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை முன்னி றுத்தி புதிய அறிவிப்புகள் பட்ஜெட் டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, இந்தாண்டு நிதி யமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|
விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சதி: நடிகையின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:04:00 |
சென்னை: இந்தியாவில் விடுதலை புலிகள்அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில், போதைப் பொருட்கள் விற்பனை, ஹவாலா பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திரைப்பட கலைஞரின் முன்னாள் உதவியாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் கடந்த 2021-ம்ஆண்டு 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது.
என்ஐஏ கொச்சி அதிகாரிகள் விசாரணையில், விடுதலை புலிகள்இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்கள், ஆயுதக்கடத்தல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது இதையடுத்து, இந்த வழக்கில் இலங்கைதமிழர்கள் உட்பட 13 பேரை என்ஐஏகைது செய்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும், இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தவழக்கில் திரைப்பட நடிகை ஒருவரின் முன்னாள் உதவியாளர் சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, 14-வது நபராக அவரை கைதுசெய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஆதிலிங்கம் மீதுபூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த வழக்கில் 16 பேர் மீதுகுற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில்,14-வது நபராக ஆதிலிங்கம் மீதுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்ததாக தெரிகிறது. மேலும், போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெறப்படும் பணத்தை, ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜெண்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார்.
இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பு நிர்வாகத்தில் பணிபுரிந்தபோது, இலங்கையை சேர்ந்தகுணசேகரன், அவரது மகன் திலீபன்உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும்போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
தேர்தலுக்கு முன் வெளியே வர செந்தில்பாலாஜி தீவிரம்: வந்தாலும் தேர்தல் களத்தில் திமுக முன்னிலைப்படுத்துமா? | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 05:00:00 |
சென்னை: மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சட்டப்பேராட்டம் நடத்திவருகிறார் செந்தில் பாலாஜி.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011-15 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்குகளை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி,செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிஇதுவரை 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டும், அவரது ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தச்சூழலில் தற்போது 2-வதுமுறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நிலுவையில் உள்ளது.
கடந்த 240 நாட்களுக்கும் மேலாகசிறையில் உள்ள செந்தில் பாலாஜி,ஜாமீனில் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் அமலாக்கத் துறைதீவிரம் காட்டி வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி வகித்துவருவதால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அமலாக்கத் துறை ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனக்கு ஜாமீன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இலாகா இல்லாத அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ள செந்தில் பாலாஜி, இம்முறை தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி மூத்த வழக்கறிஞர்களை களமிறக்கி உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் குற்றச்சாட்டுப்பதிவை ஜன.22 அன்று மேற்கொள்வதை தள்ளி வைக்கக் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிபதி எஸ்.அல்லி, தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிதரப்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிக்குமார், குற்றச்சாட்டுப்பதிவை மீண்டும் தள்ளிப்போடும் வகையில் தற்போது இந்த வழக்கில் இருந்தே செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி புதிதாக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றால், அதன்பிறகு இதை வைத்தே உச்ச நீதிமன்றம் வரை மீண்டும் செல்லலாம் என்றும், அதற்குள் ஜாமீன் கிடைத்து விடும் என்ற எண்ணத்திலும் செந்தில் பாலாஜி தரப்பு சட்டப்பூர்வமாக காய் நகர்த்தி வருகிறது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் பிப்.21அன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவரது நீதிமன்ற காவலை 21-வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, பிப்.20 வரை நீட்டித்துள்ளார்.
ஒருவேளை இந்த தேர்தலுக்கு முன்பாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தாலும் அவர் மீதுள்ள இந்த வழக்கை காரணம் காட்டி திமுகவுக்கு எதிராகபாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்பதால், அவரை பழையபடிகொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலைப்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம் செந்தில் பாலாஜி, இழந்த தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வாரா? அல்லது உடல் நிலையைக் காரணம்காட்டி ஒதுங்கி இருப்பதுபோல காட்டிக்கொண்டு, பாஜகவுக்கு எதிரான திரைமறைவு வேலையில் ஈடுபடுவாரா? என்ற கருத்தும் நிலவுகிறது.
|
தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்க தடை: சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 04:54:00 |
சென்னை: புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்களில் விதிகளை மீறி ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பொது இடங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 8-ம் தேதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை மெரினாகடற்கரையில் ஆய்வு மேற்கொண்டு வடமாநிலஇளைஞர்கள் விற்பனை செய்த பஞ்சுமிட்டாய்களை பறிமுதல் செய்தனர். அந்த பஞ்சுமிட்டாய்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில், பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். புற்றுநோயை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் இவற்றை பயன்படுத்தக்கூடாது” என்றனர்.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரோடமைன் பி (Rhodamine B) எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டங்களின்படி தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006-ன்படி செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையரால், அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பரிதாபம்: பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு | செய்திப்பிரிவு | விருதுநகர் | 2024-02-18 04:22:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுக்கான மருந்துக் கலவையைத் தயார் செய்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் பரவி அடுத்தடுத்து இருந்த 3 அறைகளிலும் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, வில்லிபுத்தூர் அருகே அச்சம் தவிர்த்தானைச் சேர்ந்த அபேராஜ் (62), சிவகாசி கிளியம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24), கருப்பசாமி (20), ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (32), குருசாமி (50), சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த முத்து (43), ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (40), தொம்பக்குளத்தைச் சேர்ந்த சாந்தா (43) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அடையாளம் தெரியாத பெண் உடல் ஒன்றும், உடல் உறுப்புகள் முற்றிலும் சிதைந்த நிலையில் மற்றொரு உடலும் மீட்கப்பட்டன.
இதுதவிர, நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32), ரெட்டியபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (21), முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி (34), சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுட்டனர். மண் தோண்டும் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. அப்போது காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் ஆய்வு செய்த பின் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறும்போது, "பட்டாசு ஆலையில் மருந்துக் கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. அதிக அளவில் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் (விருதுநகர் பொறுப்பு) ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல், நிவாரணம்: விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த துரதிர்ஷ்ட சம்பவம் குறித்து அறிந்து மனவேதனையடைந்தேன். இந்த கடினமான சூழலில், எனது எண்ணங்கள் அனைத்தும் குடும்ப உறுப்பினரை இழந்து தவிப்போருடனேயே இருக்கும். காயமடைந்தவர்களும் விரைவாக பூரண குணமடைய விரும்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரூ.3 லட்சம் நிதி: இதேபோன்று, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 04:18:00 |
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புதுடெல்லியில் நேற்று இரவு வெளியிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்து மிக முக்கியத் தலைவராக விளங்கியவர் செல்வப்பெருந்தகை. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மங்களூர் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விசிகவிலிருந்து விலகினார். அதன் பிறகு 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த செல்வப்பெருந்தகை, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். எனினும் அங்கும் அவரால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து 2010-ம்ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டசெல்வபெருந்தகை, 2011-ம்ஆண்டு செங்கம் சட்டப்பேரவை தொகுதியிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் பெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது பெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பணியை கட்சித் தலைமை வெகுவாகப் பாராட்டுகிறது
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரை நியமனம் செய்வதற்கும் அகில இந்திய தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி, 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 முதல் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்த கே.எஸ்.அழகிரியின் எதிர்கால பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
|
அமமுக பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க முடிவு | செய்திப்பிரிவு | பெரியகுளம் | 2024-02-18 04:10:00 |
பெரியகுளம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி தேனியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார்.
அமமுக சார்பிலான பொதுக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ள உள்ளார்.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்றது. இதில், அமமுக பொதுக் கூட்டத்தில் தனது அணி சார்பில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியினரிடையே வலியுறுத்தினார்.இதில் மாவட்ட அளவிலான ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
|
“ஒரு தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை வெற்றி பெறுவாரா?” - துரை வைகோ சவால் | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-18 04:08:00 |
திருவண்ணாமலை: தமிழகத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவாரா? என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சவால் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற வேலூர் மண்டல மதிமுக தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதன்மை செயலாளர் துரை வைகோ, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அவரது 10 ஆண்டுகள் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இந்தியா முழுவதும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளை நசுக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது. சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்து விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் திரும்ப பெறப்படும் என பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், புதுடெல்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியது. இதற்கு, ஹரியானா நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2024-ல் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக அரசுக்கு விவசாயிகள் உள்ளிட்டோர் தக்க பாடம் புகட்டு வார்கள் என நம்புகிறோம்.
மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் காங்கிரஸ் அரசும், இதற்கு முன்பு இருந்த பாஜக அரசும் நடந்து கொள்கிறது. காவிரி உரிமையை தமிழகத்துக்கு கொடுப்பது போல தெரிய வில்லை. தமிழக மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்து பாஜகவுடன் இணைந்து அதிமுகவும் கையெழுத்திட்டுள்ளது. பாஜக மீது எதிர்ப்பு மனப்பான்மையை அதிமுக எடுத்துள்ளது.
இது தொடர வேண்டும். ரஷ்யாவிடம் இருந்து 60 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைக்கவில்லை. காஸ் சிலிண்டர் விலையும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால், நாடு முழுவதும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் பாடுகள், அறிக்கைகள் உள்ளிட்டவை மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
முரண்பாடான அறிக்கைகளை கொடுப்பது, தவறான தரவுகளை கொடுப்பது போன்ற செயல்களால் பாஜகவும் ஏமாற்றம் அடையும். தமிழகத்தில் ஒரு தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? என சவால் விடுக்கிறேன். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது, எழுச்சி பெற்றுள்ளது என திராவிட கட்சிகளை விமர்சிக்கும் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போது தான் அவருக்கும், அவர் சார்ந்துள்ள மதவாத பாஜகவுக்கு மக்கள் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என தெரியவரும்” என்றார்.
|
“இண்டியா கூட்டணியை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டது” - ஷரிதா லைட்ப்லாங் | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-18 04:06:00 |
கோவை: இண்டியா கூட்டணியை பார்த்து பாஜகவுக்கு பயம் வந்துவிட்டதாக, கோவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங் தெரிவித்தார்.
கோவையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டாக பாஜக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தலைநகரை நோக்கி அமைதிப் பேரணி சென்ற விவசாயிகளை கண்ணீர் புகைக்குண்டு மூலம் விரட்டியடித்தனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்துவதாகக் கூறி தேர்தல் பத்திரத்தை பாஜக அரசு கொண்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.6,566 கோடி தேர்தல் பத்திரமாக பாஜக பெற்றுள்ளது. தங்களை வளர்த்துக் கொள்ளவே இந்த தேர்தல் பத்திர முறையை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உடனடியாக அறிவிக்கப்படும். பாஜகவுக்கு இண்டியா கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது.
எனவே தான் இந்த கூட்டணியை உடைக்க பாஜக மறைமுகமாக முயற்சி செய்து வருகிறது. இண்டியா கூட்டணி தொடர்பாக பொய்யான தகவலை பாஜக பரப்பி வருகிறது. இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் உயர்மட்டக் குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், என்றார். அப்போது, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.
|
சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள்: பிப்.28-ல் அடிக்கல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 04:04:00 |
சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்க உள்ளது. இப்பணிகளுக்கு பிரதமர் மோடி, காணொலி வாயிலாக வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், படிப்படியாக 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயில் 2-வது கட்டமாக, 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இவற்றில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இது தவிர, பணிகள் முடிக்கப்பட்ட 7 ரயில்வே மேம்பாலங்கள், 28 சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 8 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக, 7 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. அதாவது, ரூ.21.5 கோடி மதிப்பில் அம்பத்தூர் ரயில் நிலையமும், சென்னை கடற்கரை ரயில்நிலையம் ரூ.14.50 கோடி மதிப்பிலும், பூங்கா ரயில் நிலையம் ரூ.10.60 கோடி மதிப்பிலும், கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடி மதிப்பிலும், மாம்பலம் ரயில் நிலையம் ரூ.14.50 கோடி மதிப்பிலும், பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.14 கோடி மதிப்பிலும், சூலூர்பேட்டை ரூ.12.50கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையங்களில் தொடங்கப்பட உள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக வரும் 28-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர, பணிகள் முடிக்கப்பட்ட 7 ரயில்வே மேம்பாலங்கள், 28 சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன. ரயில்வே மேம்பாலங்களை பொருத்தவரை, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் 4 ரயில்வே மேம்பாலங்களும், சென்னை கடற்கரை - விழுப்புரம் மார்க்கத்தில் 3 ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - கூடூர் மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் தலா 14 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க தலா ரூ.30 கோடியும், சுரங்கப் பாதைகள் அமைக்கதலா ரூ.5 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தெற்கு ரயில்வேயில் 2-ம்கட்டமாக, 100-க்கும் மேற்பட்டரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதுபோல, பணிகள் முடிக்கப்பட்டுள்ள 82 ரயில்வே மேம்பாலங்கள், 117 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.
|
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பிப்.23-ல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு: அமைச்சர் கீதா ஜீவன் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 04:02:00 |
சென்னை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 4-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 23-ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 12-ம் தேதி 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அருகிலுள்ள மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு சென்னைகாமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களின் கோரிக்கை குறித்து, பள்ளிக் கல்வி, உயர் கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசு தேர்வாணையம் ஆகிய துறைகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். தனியாக மாற்றுத் திறனாளிகள் துறை மட்டும் முடிவெடுக்க முடியாது. எனவே வரும் 23-ம் தேதி இந்த துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
உடனே முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று வேலை உடனே பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வேண்டுமென கேட்டுள்ளனர். அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
|
புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சென்னையில் தர்ணா | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-18 04:00:00 |
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் துரை பாண்டியன் தொடங்கி வைத்தார்.
போராட்டம் குறித்து முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு, அடிப்படை ஓய்வூதியத்தில் 10 சதவீத உயர்வு வழங்குவதாக வாக்குறுதிஅளித்திருந்தது. அதை நடைமுறைப் படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களுக்கான செலவினத்தை அரசே ஏற்க முன் வர வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற கல்லூரி, பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியத்தை 2016-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணக் கட்டணச் சலுகையை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
|
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவை - கோவா விமான சேவை மீண்டும் தொடக்கம் | இல.ராஜகோபால் | கோவை | 2024-02-18 00:39:00 |
கோவை: கோவை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கோவா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை செயல்பாட்டில் உள்ளது. கோவையில் இருந்து கோவா மற்றும் கோவையிலிருந்து ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய கோவை விமான நிறுவன அதிகாரிகள் “கோவை விமான நிலையத்தில் தற்போது தினமும் சராசரியாக 23 முதல் 28 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. கோவை - கோவா மற்றும் கோவை - ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கோவை - கோவா இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் என வாரத்தில் நான்கு நாட்கள் இந்த சேவை வழங்கப்படுகிறது. கோவாவில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் விமானம் கோவைக்கு 11 மணிக்கு வந்தடையும். அதேபோல் கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு கோவா சென்றடையும். அதேபோல் கோவையில் இருந்து ஐதராபாத் இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவை பிப்ரவரி 21-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
|
இணைந்து பயணிப்போம்! - செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 22:49:00 |
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரியின் எதிர்காலப் பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமாரின் செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம். இண்டியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் பொறுப்பேற்பார். தமிழக காங்கிரஸுக்கான கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அதேவேளையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் @INCTamilNadu-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. @SPK_TNCC அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர்…
|
“எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஆளுநரின் பொறுப்பு” - உதயநிதி ஸ்டாலின் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 22:30:00 |
சென்னை: அரசு எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். எங்களுக்கு தேசிய கீதமும் முக்கியம், எங்களுடைய தமிழ்த்தாய் வாழ்த்தும் முக்கியம். இந்த நிகழ்ச்சியையும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித்தான் ஆரம்பித்துள்ளோம். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கழக நிகழ்ச்சிகளும் இனி தமிழ்த்தாய் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கப்படும். எழுதிக் கொடுப்பதை படிக்க வேண்டியதுதான் ஆளுநருடைய பொறுப்பு. அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி கிடையாது. அவர் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.
குடியரசுத் தலைவர் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் என்பவர் நியமிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு இதே ஆளுநர் என்ன செய்தார்? நாம் எழுதிக் கொடுத்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை தவிர்த்து விட்டார். அதன் பிறகு தமிழ்நாட்டின் பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்றார். ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு இரண்டே நாளில் பல்டி அடித்து மன்னிப்புக் கோரினார்.
தேர்தலை சந்திக்க இன்னும் நமக்கு ஏறக்குறைய 60 நாட்கள்தான் உள்ளன. இன்னும் 10 நாட்களில் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள். எனவே நமக்குள் இருக்கும் மனக்கசப்புகளை எல்லாம் தள்ளிவைத்து விட்டு வெற்றியை தருவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை (பிப்.12) அன்று கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவையில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ரவி அதற்கு முன்னரே அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
|
விருதுநகரில் 10 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன? | இ.மணிகண்டன் | விருதுநகர் | 2024-02-17 21:59:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். “பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம்” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுக்கான மருந்து கலவை தயார் செய்தபோது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 3 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தானைச் சேர்ந்த அபேராஜ் (62), சிவகாசி கிளியம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24), கருப்பசாமி (20), ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (32), குருசாமி (50), சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்த முத்து (43), ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (40), தொம்பக்குளத்தைச் சேர்ந்த சாந்தா (43), ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயா (36), கீழானமறைநாடு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (44) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (32), ரெட்டியபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (21), முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி (34), சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த ரங்கம்மாள் (55) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “பட்டாசு ஆலையில் மருந்து கலவையின்போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வெடி பொருள்கள் வைக்கப்பட்டிருந்ததும் விபத்துக்கு காரணம். இந்த விபத்து குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தில் மதுரை டிஐஜி ரம்யா பாரதி, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான டோக்ரேபிரவீன் உமேஷ் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளதோடு, தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோர் மற்றும் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
|
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 21:25:00 |
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரியையும் மாற்ற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலர் தொடர்ந்து, டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை தனது தலைமையில் சந்தித்து, கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். சத்தியமூர்த்தி பவனில் ஒரே ஒருமுறை மட்டுமே கோஷ்டி சண்டை நடைபெற்றுள்ளது. அதனால், டெல்லி தலைமையும், அழகிரியை மாற்றும் விவகாரத்தில் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அக்கட்சியின் தலைமை நியமித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவர் பொறுப்பேற்பார். தமிழக காங்கிரஸுக்கான கே.எஸ்.அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அதேவேளையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கும் காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து பேசியுள்ள செல்வபெருந்தகை, “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக செயல்படுவேன். இந்தியாவில் சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட இயக்கமாக காங்கிரஸ் செய்லபடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் கு.செல்வப்பெருந்தகை. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பிறகு அக்கட்சியில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து மாநிலத் தலைவரானார்.
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து 13 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 2-வது முறையாக எம்எல்ஏவான அவர், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக செயலாற்றி வந்த நிலையில், இப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு | செய்திப்பிரிவு | விருதுநகர் | 2024-02-17 21:05:00 |
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரு.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்து குறித்து கனத்த இதயத்துடன் அறிந்தேன். இந்த கடினமான நேரத்தில், அவர்களுடன் துணை நிற்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் பட்டாசு விபத்து: சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
|
“தமிழகத்தில் ‘இண்டியா’ கூட்டணி வலுவாக உள்ளது” - கார்த்தி சிதம்பரம் | சுப. ஜனநாயகசெல்வம் | மதுரை | 2024-02-17 20:39:00 |
மதுரை: “தமிழகத்தை பொறுத்த அளவில் ‘இண்டியா’ கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என அடித்துச்சொல்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே கிடையாது” என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியது: “தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இனிமேல் வாங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளனரே தவிர வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொல்லவில்லை. இதில் 90 சதவீத பணம் பாஜகவுக்கு சென்றுள்ளது. மற்ற எந்தக் கட்சிக்கும் இந்த அளவுக்கு நிதி வரவில்லை. ஆனால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததால் காங்கிரஸ் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது பழிவாங்கும் செயல். தேர்தலுக்கு முன்பு வாடிக்கையாக அரசியல் கட்சியை முடக்குவதற்காக எடுக்கப்படும் நிகழ்வு. அரசியல் கட்சியில் ‘சீட்’ கேட்பது அவரவர் உரிமை. சுதர்சன நாச்சியப்பன் கடந்த முறையும், இந்த முறையும் கேட்டுள்ளார். ஆனால் யாருக்கு சீட் என முடிவெடுக்க வேண்டியது மத்திய தேர்தல் கமிட்டி.
தொகுதி யாருக்கு என்பதை கூட்டணி கட்சித் தலைமை முடிவெடுக்கும். அதன்பின் வேட்பாளர் முடிவாகும். திமுக தான் கூட்டணிக்கு தலைமை. அவர்கள்தான் தொகுதியை பங்கிட்டு கொடுப்பர். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதால் அதைப் பொறுத்தே தொகுதி பகிர்ந்தளிக்கப்படும். இறுதியில் 39 தொகுதிகளுக்குள்தான் கொடுக்க முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் இலக்கணம் பொறுத்தே அரசியல் இலக்கணம் நடைபெறும்.
தமிழகத்தை பொறுத்த அளவில் ‘இண்டியா’ கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என அடித்துச்சொல்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு வாய்ப்பே கிடையாது. மத்திய பாஜக அரசுக்கு எதிராகத்தான் அனைத்து தரப்பினரும் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் மீதான கோபம் போல் மற்ற மாநிலங்களிலும் கோபத்தை வெளியில் கொண்டு வந்தால் கூட்டணிக்கு நல்லது” என்று அவர் கூறினார்.
|
ப்ரீமியம் விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து முதல் ‘பஞ்சு மிட்டாய்’ கட்டுப்பாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.17, 2024 | செய்திப்பிரிவு | உயிரிழப்பு | 2024-02-17 17:40:00 |
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் உயிரிழப்பு: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
மக்களவைத் தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கியதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 17:04:00 |
சென்னை: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக பரப்புரையைத் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதேவேளையில் தேர்தல் பரப்புரையையும் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். #INDIA வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும்!
பாசிசம் வீழும்! #INDIA வெல்லும்! @arivalayam @dmkitwing pic.twitter.com/KSJ6Dms6sy
|
7 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தம்: மாற்றுத் திறனாளிகள், முதியோர் சிரமம் | இ.ஜெகநாதன் | சிவகங்கை | 2024-02-17 16:29:00 |
சிவகங்கை: தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 7 மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், மாற்றுத் திறனாளிகள், முதியோர் சிரமமடைந்து வருகின்றனர்.
வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை,முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1,500 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.1,200 ஆகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், அந்த மாதத்திலிருந்து இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகையே வழங்கப்படவில்லை. மேலும், புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை வழங்காததால் அவர்களும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், எங்களுக்கு வாழ்வாதாரமே உதவித்தொகைதான். அதையும் 7 மாதங்களாக நிறுத்திவிட்டதால் சிரமப்படுகிறோம். புதிதாக விண்ணப்பித்து ஆணை பெற்ற 1 லட்சம் பேரும் உதவித்தொகைக்காக காத்திருக்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், உதவித்தொகை வழங்கப்படும் என்றனர்.
|
“சுமுக உறவுக்கு குந்தகம்” - கர்நாடக அரசுக்கு முத்தரசன் கண்டனம் @ மேகேதாட்டு அணை விவகாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 16:17:00 |
சென்னை: மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அறிவித்துள்ளார். சுமுக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டிருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான முறையில் ஒரு மண்டலக் குழுவும், இரண்டு துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு நான்கு மாநிலங்கள் - கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி - தொடர்புடைய பிரச்சினையாகும். கடந்த 1974-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சென்னை மாகாண அரசு, மைசூர் அரசுடன் 1924-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம். காலத்தில் புதுப்பித்திருந்தால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கிடைத்திருக்கும். அப்போதிருந்த காங்கிரஸ் மாநில அரசும், மத்திய அரசும் அளித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
1974-ம் ஆண்டு முதல் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட தமிழகம் சட்ட ரீதியாகவும், நேரடியாகவும் போராடி வருகின்றது. காவிரி நதி நீர் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும், இதன் மீதான மேல் முறையீடுகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி உத்தரவையும் மதித்து நடக்க வேண்டிய கர்நாடக மாநில அரசு, பெங்களூரு நகரக் குடிநீர் கோரிக்கையை ஆயுதமாக்கி. தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை அடியோடு பறித்து விடும் திசை வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் பிடிவாதம் காட்டுவதை கண்டிக்கிறோம்.
இதில் கட்சி வேறுபாடு இல்லாமல் தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதன் மீது மத்திய அரசும் தலையிட மறுத்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை தொடர்பான பிரச்சினையை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் முன்மொழிவுக்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கு வலுச் சேர்க்காது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை கர்நாடக மாநில அரசும், மக்களும் உணர வேண்டும். சுமுக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் கர்நாடக மாநில முதல்வரின் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று முத்தரசன் கூறியுள்ளார்.
|
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் உத்தரவு | செய்திப்பிரிவு | விருதுநகர் | 2024-02-17 15:58:00 |
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளர்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது.
அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
முதல்வர் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (17-02-2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
|
உதகையில் தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி | ஆர்.டி.சிவசங்கர் | உதகை | 2024-02-17 15:43:00 |
உதகை: தொட்டபெட்டா சிகரத்தை தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கண்டுகளித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. நீலகிரி மாவட்டம் உதகைக்கு 3 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கடந்த 15-ம் தேதி வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர் நேற்று தோடரின பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்துக்கு விஜயம் செய்தார். அங்குள்ள பழங்குடியினரின் கோயில்களில் வழிப்பட்டவர், அம்மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். இந்நிலையில், இன்று காலை தனது மனைவி லட்சுமி உறவினர்களுடன் இந்தியாவின் உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா சிகரத்தை கண்டு ரசித்தார்.
தொட்டபெட்டாவுக்கு வந்த ஆளுநரை சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன் வரவேற்றார். தொட்டபெட்டா சிகரத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் சீகூர், குன்னூர், மேட்டுப்பாளையம் பள்ளத்தாக்குகள், உதகை நகரம் ஆகியவற்றை கண்டு ரசித்தனர். பின்னர் தொட்டபெட்டா காட்சி முனைக்கு சென்றவர்கள். அங்கிருந்து பைனாக்குலர் மூலம் உதகை நகரை கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், காட்சி முனை பகுதிக்கு சென்ற ஆளுநர், அங்கு பாறைகள் மீது நடக்கும் போது, அவரது ஷூ வழுக்கியதால் நிலை தடுமாறினார். பின்னர் சுதாரித்துக்கொண்டவர், தனது உறவனிர்களிடம் காலணியை காண்பித்து, பாறைகள் மீது ஏற இத்தகைய காலணிகளை அணிய கூடாது எனத் தெரிவித்தார். காட்சிமுனையில் சிறிது நேரம் கண்டு ரசித்தார். பின்பு, தொட்டபெட்டா தொலைநோக்கி மையத்தில் தேனீர் அருந்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.
ஆளுநர் வருகை முன்னிட்டு தொட்டபெட்டா சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனுமதிக்க படாததால் சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் காத்திருந்தனர். தொட்டபெட்டாவிலிருந்து திரும்பிய ஆளுநர் உதகை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கல் பங்களாவை பார்வையிட்டார். அங்கு இயங்கி வரும் அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்தவர்கள் ராஜ்பவன் திரும்பினர். இந்நிலையில், ஆளுநர் நாளை தேயிலை பூங்காவை பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்புகிறார்.
|
கல்விக்கடன் முதல் வக்ஃபு வாரியம் வரை - சிறுபான்மை மக்களுக்கான தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 15:41:00 |
சென்னை: 1 முதல் 8ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு ஒன்றிய அரசு நிறுத்திய கல்வி உதவித் தொகையினை இனி தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினர் நலன் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது அவர், "2007-ம் ஆண்டில் "சிறுபான்மையினர் நல இயக்குநரகம்" உருவாக்கியது திமுக அரசு. அதேபோல், 2007-ம் ஆண்டு முதல், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5 சதவீதம் தனி இடஓதுக்கீடு வழங்க சட்டம் இயற்றி இட ஓதுக்கீடு வழங்கப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்தச் சங்கங்களின் மூலம் ஆதரவற்ற, விதவைகள் மற்றும் வயதான முஸ்லிம்/கிறிஸ்தவ பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நாங்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததும், மேலும் கூடுதலாக 5 மாவட்டங்களில் சங்கங்களை உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கான விடுதிகள் துவங்கப்பட்டு, தமிழ்நாட்டில் தற்போது 18 சிறுபான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் ரூ. 14 இலட்சம் செலவில் “செம்மொழி நூலகங்களும்” ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.5.90 இலட்சம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடுதிறன் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டில் பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பிற்காக வழங்கப்படும் மானியத் தொகை ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்பட்டு, இதன் மூலமாக 134 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் பயன்பெற்றுள்ளன.
"உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்" 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் தான் அமைக்கப்பட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல வாரியத்தில் இதுவரை மொத்தம் 15,848 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க கடந்த ஆண்டு ஆணையிட்டேன்.
அதேபோல், உறுப்பினர்களுக்கு 5.46 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
திமுக அரசு உருவானதும் முதன் முறையாக, 1000 இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் 2500 தையல் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு ஆண்டு நிர்வாக மானியம் ரூபாய் 2.50 கோடி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, 4 வக்ஃப் சரக அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வக்ஃப் சொத்துகளை பாதுகாக்கும்பொருட்டு, அவற்றை அளவை செய்வதற்காக ரூபாய் 2 கோடி அரசு நிதி ஒப்பளிப்பு செய்துள்ளது. வக்ஃப் சொத்துகளை அளவை செய்யும் பணி நடந்து வருகிறது. உலமா ஓய்வூதியதாரர் இறந்தபிறகு, அவரின் குடும்பத்தினருக்கு “குடும்ப ஓய்வூதியம்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான வயது வரம்பை 40 ஆகவும், பணிக்காலத்தினை 10 ஆண்டாகத் தளர்த்தியும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3987 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமியர் அடக்கம் செய்யும் இடமான கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்களுக்கு புதிதாக சுற்றுச் சுவர் மற்றும் பாதை அமைக்க 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதையும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்கும் 123 பணிகளுக்கு 658.44 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஆண்டில் 9217 சிறுபான்மை பயனாளிகளுக்கு 62 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில அறிவிப்புகள்:
> சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வாழ்நாள் அங்கீகாரம் மாநில அரசால் வழங்கப்படும்.
> மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ், காலம் குறிப்பிடப்படாமல், நிரந்தர சான்றிதழாக வழங்க அரசாணை 02.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
> அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
> கிராமப்புறங்களில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்த ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
> சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து சான்றிதழை பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கும் வகையில், வலைதளம் (Web portal) துவங்கப்பட்டுள்ளது.
> இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி / நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை 30.1.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
> மேலும், 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டுமென்ற கோரிக்கையினை பரிசீலிக்கப்பட்டு, தகுதிகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்று நீண்டநாள் சிறையிலிருந்த 10 சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
> வழிபாட்டு தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டு தலங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும் இருக்கக்கூடிய இடர்பாடுகளை களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை (SOP) வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவும் விரைவில் வெளியிடப்படும்.
> பள்ளிக் கல்வித் துறையில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வயது வரம்பு அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
> சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில் யு.ஜி.சி மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் நியமன அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும்.
> வக்ஃபு வாரியத்திற்கு போதுமான இடவசதிகளுடன் கூடிய புதிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.
> வக்ஃபு வாரியத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 27 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
> சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை விரைவில் கிடைக்கும்.
> தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன்கள், இனிமேல் ரூபாய் 5 இலட்சம் வரை வழங்கப்படும்.
> வக்ஃப் நிலங்களை கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக, 30 ஆண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க ஆய்வு செய்து, அரசு விரைவில் அனுமதி வழங்கும்.
> வக்ஃப் சொத்துக்கள் மற்றும் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்ய சென்னையில் இருப்பதை போல மதுரையிலும் ஒரு தீர்ப்பாயம் அமைக்க உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும்.
> சிறுபான்மையின மக்களுக்கு வழங்கிவந்த கல்வி உதவித் தொகையினை (Pre-Matric Scholarship) ஒன்றிய அரசு 2022-2023ம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு நிறுத்திவிட்டது. இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏழை சிறுபான்மையின மக்கள் கல்வி உதவித் தொகையினை பெற இயலாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையினை, 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 256 முஸ்லிம் மாணவியர்கள் பயன் பெறுவார்கள்.
> உருது, அராபிக் மற்றும் இதர ஓரியண்டல் மொழித் தேர்வுகளுக்கான கட்டணத்தை சென்னைப் பல்கலைக்கழகம் ரூ.540/-லிருந்து ரூ.3000/-ஆக உயர்த்தியது அரசின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இந்தக் கல்வியாண்டில் முந்தைய கட்டணத் தொகையான ரூ.540/- மட்டுமே மாணவர்களிடமிருந்து பெறப்படவேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்படும்.
> மேலும், ஓரியண்டல் மொழித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள், ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், விண்ணப்பம் செய்யாத மாணவர்கள், விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, இந்த மாதம் 29-2-2024 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
> சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் அராபிக் பாடத்திட்டம் குறைவான மாணவர் சேர்க்கையால் இந்த ஆண்டு கைவிடப்பட்டிருந்தது. அடுத்த கல்வியாண்டு முதல், இப்பாடத்திட்டம் மீண்டும் தொலைதூரக் கல்வி மூலம் கொண்டு வரப்படும்.
> முஸ்லிம் சட்டப்படி திருமணம் செய்த இரண்டாம் மனைவி மற்றும் அவரது வாரிசுகளுக்கு கணவர் இறப்புக்கு பின்னால் வாரிசு சான்றிதழ் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
|
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவல்: தமிழக எல்லையில் மருத்துவ பரிசோதனை | செய்திப்பிரிவு | மேட்டூர் | 2024-02-17 15:35:00 |
மேட்டூர்: கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக - கர்நாடக எல்லையில் சுகாதாரத்துறையினர் முகாம் அமைத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூரு ஆகிய மாவட்டங்களில் 53 பேருக்கு அண்மையில் குரங்கு காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனப்பகுதி வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக எல்லையான கொளத்தூரை அடுத்த காரைக்காடு சோதனைச் சாவடியில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் விமலா தலைமையிலான குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, மருத்துவ அலுவலர் விமலா கூறியதாவது: கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்புள்ள வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொளத்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து அதிக மக்கள் கர்நாடகாவுக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துத் துறை அலுவலர்களை கொண்டு குழு அமைத்தும், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழு மூலமாக தினமும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்கள் குறித்தும், அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக சுகாதாரத் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.
அனைத்துத் துறை அலுவலர்களை கொண்டு குழு அமைத்தும், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
|
“சிறந்த நகைச்சுவை பேட்டி...” - நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 15:15:00 |
சென்னை: "எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது" என்று சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எல்லார்க்கும் எல்லாம் என்ற வார்த்தைக்குள் பெரும்பான்மையும் உண்டு, சிறுபான்மையினரும் உண்டு. அனைவரும் உண்டு. திராவிட மாடல் என்பது எவரையும் யாரையும் பிரிக்காது, பிளவுபடுத்தாது, உயர்வு தாழ்வு கற்பிக்காது.
இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில், பேட்டி அளித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஒருவர், 'பிரிவினையைத் தூண்டுகிறது திராவிட மாடல்' என்று சொல்லி இருக்கிறார். இதைவிடச் சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது. பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்துக்குச் சொந்தக்காரர்களான அவர்கள், நம்மைப் பார்த்து பிரிவினைவாதிகள் என்று சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது. அனைவருக்கும் அனைத்தையும் கிடைக்கச் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியாகும்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடாது என்று சொல்லும் அவர்கள் தான் பிரிவினைவாதிகள். இந்த வரிசையில் சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடி அரசாக திமுக அரசு உள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதன் மூலமும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு திமுக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
சிறுபான்மை மக்களாகிய நீங்கள் அச்சமற்று வாழும் அமைதிச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அமைதியான சூழலை உருவாக்கித் தருவதே நல்லாட்சியின் இலக்கணம் ஆகும். அத்தகைய இலக்கணப்படி நடைபெறும் இந்த அரசுடன் இஸ்லாமிய கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை பரிசீலித்து, படிப்படியாக நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை 1967ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த மாற்றத்தை உருவாக்க பேரறிஞர் அண்ணா தன்னுடன் யாரை இணைத்துக் கொண்டார் என்றால் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களைத்தான்.
சிறுபான்மையினர் அமைப்புகள் சேர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியபோது, 'என்னை உங்களில் இருந்து பிரித்துப் பார்த்து நன்றி சொல்லாதீர்கள், நான் என் கடமையைத் தான் செய்தேன்' என்றார். அத்தகைய எண்ணம் கொண்டு தான் நானும் செயல்பட்டு வருகிறேன். மொழியால் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒற்றுமையாக வாழ்ந்து, மாநிலத்தையும் வளர்த்து, இந்திய நாட்டையும் செழிக்க வைப்போம்" என்று பேசினார்.
|
சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கான குடிநீரின் அளவை குறைக்கும் கேரள அரசு | செய்திப்பிரிவு | கோவை | 2024-02-17 15:08:00 |
கோவை: சிறுவாணி அணையில் இருந்து விநியோகிக்கப்படும், குடிநீரின் அளவை தினமும் கேரள அரசுகுறைத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது.
சிறுவாணி அணையில் இருந்துவரும் தண்ணீர், சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, வழியோரம் உள்ள 22 கிராமங்கள், மாநகராட்சியின்30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணையில் இருந்து முன்பு சராசரியாக 80 முதல் 90 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) அளவுக்கு குடிநீர் பெறப்பட்டது. ஆனால், கடந்த மாதம் இறுதியில் அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்த புள்ளிவிவரப்படி, சிறுவாணி அணையில் இருந்து கடந்த மாதம் 25-ம் தேதி 73.23 எம்.எல்.டி, 27-ம் தேதி 57.60 எம்.எல்.டி, 28-ம் தேதி 38.80 எம்.எல்.டி, பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 38.66 எம்.எல்.டி, 10-ம் தேதி 37.22 எம்.எல்.டி அளவுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு மேலும் குறைந்து, நேற்று சிறுவாணி அணையில் இருந்து 35.68 எம்.எல்.டி மட்டுமேகேரள அரசால் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘மாநகரில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்படுகிறது.
ஏற்கெனவே சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை. இச்சூழலில் சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் தொடர்ந்து குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயரதிகாரிகள் கூறும்போது,‘‘சிறுவாணி அணையில் மொத்தம் 49.50 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கலாம் என்றாலும், கேரள அரசால் 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த 1-ம் தேதி 26.17 அடி, 10-ம் தேதி 25.25 அடி அளவுக்கு இருந்த நீர்மட்டம், நேற்று 24.60 அடியாக குறைந்துள்ளது. அதேநேரம் கேரள அரசால் நமக்கு விநியோகிக்கப்படும் அளவும் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம். பில்லூர் 1, 2, 3 போன்ற மாற்று குடிநீர் திட்டங்கள் மூலம் தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.
கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது,‘‘சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு , கேரள அரசு நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் சூழலை விளக்கியுள்ளது. இதை நாங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் தமிழக அரசு அறிவுறுத்தினால் நேரில் சென்றும் கேரள அரசை வலியுறுத்துவோம்’’ என்றார்.
|
“10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 411 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது பாஜக” - ஆர்.எஸ்.பாரதி | செய்திப்பிரிவு | விழுப்புரம் | 2024-02-17 14:49:00 |
விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழு வதும் 411 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்பு ரம், நகராட்சித்திடலில் நேற்று மாலை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியது: மோடி ஒரு நாளைக்கு போட்டுக் கொள்ளும் உடையின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆடம்பர வாழ்க்கை நடத்தும் மோடி, தான் விலைக்கு வாங்கிய ஊடகங்களை மட்டும் நம்புகிறார்.
2016-ம் ஆண்டு நடந்த தேர்த லில், ரூ.570 கோடியை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகாரர்களுக்கு தற்போது அமலாக்கத்துறையை அனுப்பி வரும் மத்திய அரசு, இந்த ரூ.570கோடி யாருடையது என்று இதுவரையிலும் ஏன் கண்டுபிடிக்க வில்லை?.
2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்தோம். அப்போது அவர் நம் கூட்டணியில் இருந்திருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கும். அதைத் தொடர்ந்து கருணாநிதி,ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் இன்னமும் உயிருடன் இருந்து இருப்பார்கள்.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது மத்திய அரசுதான். மத்திய அரசின்தில்லு முல்லு காரணமாக முதல்வர் நாற்காலியில் துரதிஷ்டமாக அமர்ந்தவர் பழனிசாமி.
வர இருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பில், தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 411 எம்எல்ஏக்களை பாஜகவிலைக்கு வாங்கியுள்ளது. இதுதான் அவர்கள் காட்டும் ஜனநாயகம். விரைவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி தமிழகத்திற்கான தேர்தல் என்று நானே அறிவிக்கி றேன் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரான சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் தெற்கு மாவட்டசெயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி வடக்குமாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரான கௌதம சிகாமணி எம்.பி , உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந் திரன், மாவட்ட பொருளாளர் ஜன கராஜ், நகர செயலாளர் சக்கரை, திமுக நிர்வாகிகள் அன்னியூர் சிவா, செஞ்சி சிவா, தினகரன், கண்ணன் ஆனந்த் மற்றும் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான். செஞ்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
மதுரையில் போட்டியிட திமுக ஆர்வம் காட்டாதது ஏன்? | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-17 14:40:00 |
மதுரை: தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நகராக மதுரை திகழ்கிறது. இத்தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2024 தேர்தலில் இத்தொகுதி யில் திமுக போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் அண்மையில் சென்னையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமையிடம் தெரிவித்தனர்.
ஆனால், யாருக்கு இத்தொகுதியை ஒதுக்குவது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்து உரிய நேரத்தில் அறிவிக்கும் என்ற பதிலே கிடைத்தது. சு.வெங்கடசேன் எம்.பி. மக்கள வையிலும், பொது வெளியிலும் அரசியல் ரீதியாக பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் முதல்வர் ஸ்டாலினின் நன்மதிப்பை பெற்றுள்ள சு.வெங்கடேசனுக்கு 2-வது முறையாக மதுரையில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் திமுக வேட்பாளரை நிறுத்த கட்சி மேலிடம் ஆர்வம் காட்டுவதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவிடுகிறது. 2009 -ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக மு.க.அழகிரி கள மிறங்கி வெற்றிபெற்று மத்திய அமைச்சரானார். தற்போதுள்ள அமைச்சர்கள் இருவரும், தங்களை மீறி கட்சியில் மற்றவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.
அதனால்தான், அவர்கள் தங்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகளை எம்.பி.யாக்க முயற்சிப்பது இல்லை. கட்சி மேலிடமும் பெரிய அளவில் அழுத்தம் கொடுப்பதில்லை. இதனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறினர்.
|
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 10 பேர் உயிரிழப்பு | இ.மணிகண்டன் | விருதுநகர் | 2024-02-17 14:36:00 |
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.17) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று ஆலங்குளம் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் ஓர் அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ், கருப்பசாமி, அபயாஜ், முத்து, அம்பிகா, முருகஜோதி, சாந்தா உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுட்டனர். ஜேசிபி இயந்திரம் மூலம் இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 8 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
“40 தொகுதிகளிலும் திமுக வெல்லும்” - கனிமொழி எம்.பி. நம்பிக்கை | செய்திப்பிரிவு | கோவில்பட்டி | 2024-02-17 14:20:00 |
கோவில்பட்டி: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதியம்புத்தூரில் நேற்று முன்தினம் இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. பேசியதாவது:
கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜகரூ. 6,564 கோடி தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. இவ்வளவு நிதி எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தது? என்பது தெரியாது. நாட்டிலே பணக்கார கட்சியாக பாஜக உள்ளது. அவர்கள் கொண்டு வந்த சட்டம் தவறானது, செல்லாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாற்ற முடியாதது எதுவும் இல்லை. மக்கள் நினைத்தால், தமிழர்கள் நினைத்தால், திமுக நினைத்தால் எதையும் மாற்றிக் காட்ட முடியும். இந்த உறுதியோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் 40 இடங்களையும் திமுக கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியை எதிர்த்து தேர்தலில் நிற்க அண்ணாமலை தயாரா?. அப்படி அவர் போட்டியிட்டு டெபாசிட் வாங்கி விட்டால், அரசியலை விட்டு நான் விலகத் தயார். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று நினைத்து, சில அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐயை வைத்து சோதனை நடத்தினார்கள். யாராலும் இந்த இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம், திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
|
“மீனவர் பிரச்சினைகளில் குரல் எழுப்புவேன்” - நாம் தமிழரின் நாகை வேட்பாளர் கார்த்திகா | செய்திப்பிரிவு | நாகப்பட்டினம் | 2024-02-17 14:13:00 |
நாகப்பட்டினம்: நாகை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மண்டலச் செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் நாகை அருகே மஞ்சக்கொல்லையில் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன் முன்னிலை வைத்தனர். மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள், வேட்பாளர் மு.கார்த்திகாவை (34) அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, மு.கார்த்திகா பேசியபோது, “நாகை மக்களவைத் தொகுதி மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி. அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி தீர்வு காண்பேன். நாகை மாவட்ட மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன்” என்றார். கட்சி நிர்வாகிகள் ராஜேஷ், ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோயம்புத்தூர் விளாங்குறிச்சியைச் சேர்ந்த மு.கார்த்திகா, பி.இ. பட்டதாரி. இவரது கணவர் ப.முருகசந்திரகுமார். முதுநிலை பொறியாளர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா, நாம் தமிழர் கட்சியில் தலைமை தேர்தல் பரப்புரையாளராகவும், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
|
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் ரயில் மறியல்: 55 விவசாயிகள் கைது | வி.சுந்தர்ராஜ் | தஞ்சாவூர் | 2024-02-17 14:05:00 |
தஞ்சாவூர்: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் (அரசியல் சார்பற்றது) இன்று காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்கு முறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் (அரசியல் சார்பற்றது) இன்று காலை ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமை வகித்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் எல்.பழனியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு உள்ளே நுழைந்து, சோழன் விரைவு ரயிலை மறித்தனர். சுமார் 5 நிமிட போராட்டத்துக்கு பிறகு அதில் ஈடுபட்ட ஏறத்தாழ 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
|
வங்கிக் கணக்குகள் முடக்கம்: பிப்.19-ல் வருமான வரி அலுவலகங்கள் முன்பு தமிழக காங். ஆர்ப்பாட்டம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 13:51:00 |
சென்னை: “மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித் துறை அலுவலகங்கள் இருக்கிறதோ, அந்த அலுவலகத்துக்கு முன்பாக வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் கம்பெனி அதிபர்களிடமிருந்து லஞ்சமாக பெறுவதற்கு பதிலாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தி 2018 முதல் 2023 வரை பெறப்பட்ட 13,000 கோடி ரூபாய் மொத்த நன்கொடையில் ரூபாய் 6,572 கோடியை பாஜக மட்டும் பெற்றுள்ளது. இது மொத்த நன்கொடையில் 50 சதவிகிதம் ஆகும். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெறுவது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 6-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பட்டியலை தேர்தல் ஆணையம் மார்ச் 13-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரிய தீர்ப்பாகும். இதை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு வருமான வரித் துறையை ஏவிவிட்டு அகில இந்திய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கியிருக்கிறது.
இதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டின் மீது, வங்கி கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நிபந்தனையுடன் ஆணையிட்டுள்ளது. ஆனால், அந்த நிபந்தனையின்படி ரூ.185 கோடிக்கு மேல் இருக்கும் டெபாசிட் தொகையைத்தான் காங்கிரஸ் கட்சி பயன்படுத்த முடியும். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு வங்கியில் இருக்கும் டெபாசிட் தொகை ரூ.185 கோடிக்கு குறைவாக இருப்பதால் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்த நிபந்தனைக்கு காரணம் 2018-19 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி காலம் தவறி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததால் ரூபாய் 210 கோடியை வருமான வரித் துறை அநியாயமாக அபராதமாக விதித்திருக்கிறது. காலம் தாழ்ந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததற்காக பெரும் தொகையை அபராதமாக விதித்து, அதற்கு இணையாக காங்கிரஸின் வங்கி கணக்குகளை முடக்குவதை விட ஒரு கொடூரமான நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் பாஜக அரசுக்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள முடியாமல் விழி பிதுங்கி நிற்கிற வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்குவது ஜனநாயக விரோத, பாசிச அடக்குமுறை நடவடிக்கையாகும். சட்டவிரோதமாக 6500 கோடி ரூபாய் நிதி குவித்த பாஜகவின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு பதிலாக, பெருந்திரளான மக்களிடம் சட்டபூர்வமாக நிதி பெற்று வங்கியில் சேமித்து வைக்கப்பட்ட தொகையை பயன்படுத்த முடியாத நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பணியாளர்களுக்கு சம்பளம், மின்சார கட்டணம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளுக்கு கூட வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாத நிலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இந்திய தேசிய காங்கிரசின் வங்கி கணக்கை முடக்குவது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளின் மூலமாக காங்கிரஸ் கட்சியை முடக்கி விட முடியாது என தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை எச்சரித்திருக்கிறார்.
தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக, ரூபாய் 1 கோடி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 6812. இதன்மூலம் ரூபாய் 6812 கோடி நன்கொடையை வழங்கியது யார்? இந்த கார்ப்பரேட்டுகள் யார்? இந்த நன்கொடைக்கு ஈடாக கார்ப்பரேட்களுக்கு பா.ஜ.க. செய்த உதவி என்ன? அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. செய்த சட்டவிரோத உதவிகளுக்கு ஈடாக நிதி பெறப்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? இதன்மூலம் தேர்தல் களத்தில் சமநிலையற்ற தன்மை ஏற்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் நீதி வழங்கினாலும், மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முறையிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் நீதி கிடைத்ததைப் போல காங்கிரஸ் கட்சிக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித்துறை அலுவலகங்கள் இருக்கிறதோ, அந்த அலுவலகத்திற்கு முன்பாக வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பெருந்திரளாக பங்கேற்று, மோடி அரசின் பாசிச, ஜனநாயக விரோத போக்கை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
|
பட்ஜெட்டில் அரசாணை 354 குறித்த அறிவிப்பை வெளியிடுக: அரசு மருத்துவர்கள் கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 13:17:00 |
சென்னை: பிப்ரவரி 19ம் தேதி தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறப்பித்த அரசாணை எண் 354-ஐ (GO. 354) நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது, அரசு மருத்துவர்களின் நலனுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் உள்ளோம். எனவே இந்த ஆண்டாவது பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட முதல்வர் ஸ்டாலினை வேண்டுகிறோம்.
அரசாணை 354.ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டும். கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை தரப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர் பணியிடங்கள் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டுகிறோம்.
வழக்கம் போலவே இந்த ஆண்டு பட்ஜெட்டின் போதும், தமிழகத்தில் சுகாதாரத் துறையின் சாதனைகளை பட்டியல் இட்டு பேசுவார்கள். அதேநேரத்தில் இந்த ஆண்டாவது முதன்முறையாக சுகாதாரத் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகிறோம்.
கடந்த 10, 15 ஆண்டுகளில், முன்பு இருந்ததைவிட, நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பு பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதைப்போல தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆனால் இங்கு அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும், 13 ஆண்டுகளுக்கு பின் தங்கியும், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் உள்ளது.
மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு மாத ஊதியம் தரப்படுகிறது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், சின்னத்துரை, சிந்தனை செல்வன் மற்றும் எம்.ஆர்.காந்தி ஆகியோர், அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியதை நினைவுப்படுத்த விரும்புகிறோம். இருப்பினும் அது குறித்து இன்று வரை அமைச்சர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
தமிழக சுகாதாரத் துறையில் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் இங்கு போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரமும், ஊதியமும் தரப்பட வேண்டும் என்ற இந்த இரண்டு விசயங்களை புறக்கணித்து விட்டு சுகாதாரத் துறையை வலுப்படுத்த முடியாது என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.
திமுக ஆட்சி பதவியேற்ற போது, கரோனா தொற்றின் உச்சத்தால், முதல் சட்டமன்ற கூட்டத் தொடரையே வழக்கமான தலைமைச் செயலகத்தில் நடத்த முடியாமல், கலைவாணர் அரங்கில் நடத்தியதை இந்த நேரத்தில் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும். இருப்பினும் அந்த கடினமான தருணத்தில் உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களின் கோரிக்கையை, நிறைவேற்ற மறுப்பதை முதல்வர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம்.
அதுவும் அரசாணைப்படி உரிய ஊதியத்தை தருவதற்கு, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக வெறும் 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் கரோனாவுக்கு பிறகு கூட மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கவில்லை என்றால், இது நிச்சயம் மிகப்பெரிய வரலாற்று பிழையாகவே அமையும் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்து 4 ஆண்டுகளும் கடந்து விட்டது. இருப்பினும் எந்த கோரிக்கைக்காக அவர் தன் உயிரை கொடுத்தாரோ, அந்த கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அதைப்போல கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு கருணை காட்டவில்லை. மேலும் தனக்கு அரசு வேலை வேண்டி, திவ்யா விவேகானந்தன் முதல்வருக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்த பிறகும் முதல்வரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.
எனவே தமிழக முதல்வர் இந்த பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட நாம் வேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழி வகுப்பதோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை: அரசு உத்தரவு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 11:50:00 |
சென்னை: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.
இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி (Rhodamine-B) எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பிப்.8-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும்.
இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
|
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 11:43:00 |
சென்னை: தெலங்கானாவில் சமூகநீதியை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக பேரவையில் அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெலங்கானாவில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் அங்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டிய பிஹாரைத் தவிர்த்து கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மூன்று தென்னிந்திய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிலையில், அதற்கான முதல் படியைக் கூட தமிழக அரசு எடுத்து வைக்காதது கண்டிக்கத்தக்கது.
தெலங்கானா சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்த அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், ‘தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற நலிவடைந்த மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் வாய்ப்புகளை வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். இதே காரணங்களுக்காகத் தான் தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
எனினும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி தமது கடமையை முடித்துக் கொள்கிறார். முதல்வரின் இந்த நிலைப்பாடு கடலில் அலை ஓய்ந்த பிறகு மீன் பிடிப்போம் என்பதற்கு ஒப்பானது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு தவறானது என்பதை, அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.
‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு என்பது உண்மை தான். ஆனால், மாநிலங்களில் உள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தக் கணக்கெடுப்பை நாங்கள் நடத்துகிறோம்’’ என்றும் பிரபாகர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்பதற்கு தெலங்கானா அமைச்சரின் கருத்தை விட சிறந்த சான்று தேவையில்லை.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் மிகவும் அதிகமாக இருக்கின்றன. சமுகநீதியின் தொட்டில் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டாலும் கூட, தமிழகத்தில் தான் இன்னும் இட ஒதுக்கீடு பரவலாக்கப் படவில்லை. கேரளத்தில் ஓபிசிகளுக்கான 40% இடஒதுக்கீடு 8 பிரிவுகளாகவும், கர்நாடக மாநிலத்தில் 32% ஓபிசி ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும், ஆந்திரத்தில் 29% இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாகவும் பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் 50% ஓபிசி இட ஒதுக்கீடு கடந்த 35 ஆண்டுகளாக இரு பிரிவுகளாக மட்டுமே பிரித்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இன்னும் அதிக சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து தமிழகத்தில் ஓபிசி ஒதுக்கீடு ஒரே பிரிவாகத் தான் இருந்து வந்தது. எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாகத் தான் 1989 ஆம் ஆண்டில் அது இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போதே அண்டை மாநிலங்களில் உள்ளவாறு ஓபிசி ஒதுக்கீட்டை 6 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், அப்போது அதை அரசு செய்யவில்லை. இப்போதாவது அதை செய்வதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கட்டாயமாகும்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் 69% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை 69% க்கும் அதிகம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டாயமாகும். இவை தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள், சொந்த வீடு இல்லாத குடும்பங்கள், கல்வியறிவு பெற்ற குடும்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தமிழ்நாட்டில் துல்லியமாக இல்லை. இவற்றைத் துல்லியமாக திரட்டுவதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு ஆகும்.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காரணங்கள் இந்த அளவுக்கு இருக்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பயன்கள் வெளிப்படையாக தெரியத் தொடங்கி விட்டன. அதே பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்காக தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிடுவதுடன், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
|
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? - பதிலளிக்க அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 11:03:00 |
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதல்வர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப் பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடைய வில்லை. பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1598 பேருக்கு இப்போது தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.
முதல்வர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்ற போது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம் பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், அக்காலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கும். இதற்கும், திமுக அளித்த வாக்குறுதிக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இது தமிழகத்தில் படித்து விட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு ஒப்பானது ஆகும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மூன்றரை லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும்; தற்காலிக ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
|
ராமநாதபுரத்தில் நரேந்திர மோடியா? | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | கூறியதாவது | 2024-02-17 09:44:00 |
ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு தமிழக அரசியலில் பாஜக வேரூன்ற அடித்தளம் அமைக்க வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர். அண்மையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட மோடி, ராமேசுவரம் கோயிலுக்கும் வந்திருந்தார்.
அது, மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இந்நிலையில், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ராமேசுவரம் பகுதியை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டால், இப்பகுதி வேகமாக வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
திமுக, அதிமுகவுக்கு இணையாக ராமநாதபுரம் தொகுதியில் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது. அதனால் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை அவர் போட்டியிடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் ஏதாவது ஒரு வகையில் கோடிட்டு காட்டியிருப்பார்கள். ஆனால், தற்போது வரை அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று கூறினர்.
|
மேகேதாட்டுவில் அணை கட்ட தயாராகும் கர்நாடகா: தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 09:00:00 |
சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்டத் தயாராகும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதி தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஏற்கெனவே தனியாக ஒரு திட்ட மண்டலம் மற்றும் இரண்டு துணை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கெனவே துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையினை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் வந்ததிலிருந்தே, மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று தொடர்ந்து அம்மாநில முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி வந்த நிலையில், தற்போது இதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையை கர்நாடகா கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேகேதாட்டு அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வருகிறது. இந்த நிலையில், மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எனவே, முதல்வர், கர்நாடக முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கினை பயன்படுத்தி, மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்தவும், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தின் கீழ் ராமேசுவரம் மீனவர் 3 பேருக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு | எஸ்.முஹம்மது ராஃபி | ராமேசுவரம் | 2024-02-17 08:18:00 |
ராமேசுவரம்: வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தின் கீழ், ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் விதிப்பதுடன், கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத் துறைசார்பில் 2018 ஜன. 24-ல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர், மீண்டும் எல்லைதாண்டி வந்தால் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதுவரை விடுதலை செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டி வரும் விசைப்படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை தற்போது இலங்கை அரசு தொடங்கியுள்ளது.
கடந்த பிப். 3-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவற்றிலிருந்த 23 மீனவர்களை கைதுசெய்தனர். அவர்கள் மீதானவழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதில், 2-வது முறையாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனைவிதித்தார். மேலும், இரு விசைப்படகுகளின் ஓட்டுநர்களான ராபர்ட்,பெக்கர் ஆகியோருக்கு தலா 6மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த 2 பேரும் முதல்முறையாக எல்லை தாண்டி வந்ததாககைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைப்பற்றப்பட்ட 2 படகுகளின் உரிமையாளர்களும் மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
|
தேர்தல் அதிகாரியை தாக்கிய வழக்கு மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை | செய்திப்பிரிவு | மதுரை | 2024-02-17 08:06:00 |
மதுரை: தேர்தல் அதிகாரியைத் தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மதுரை மேலூர் அருகேஉள்ள வெள்ளலூர் அம்பலகாரன்பட்டி வல்லடிக்காரர் கோயிலுக்குள், மு.க.அழகிரி தலைமையிலான திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மேலூர் தேர்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் ஊழியர்கள் கோயிலுக்குள் வீடியோ கேமராவுடன் சென்று, படம் பிடித்தனர். அப்போது, திமுகவினர் தன்னைத் தாக்கி, கேமராவை சேதப்படுத்தியதாக வட்டாட்சியர் காளிமுத்து, கீழவளவு போலீஸில் புகார் அளித்தார்.
மு.க.அழகிரி, முன்னாள் துணைமேயர் மன்னன், திமுக நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2019 வரை மேலூர் நீதிமன்றத்திலும், பின்னர் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிலர் பிறழ்சாட்சியம் அளித்தனர். விசாரணை நிலுவையில் இருந்தபோது குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் முத்துலெட்சுமி நேற்று தீர்ப்பு வழங்கினார். மு.க.அழகிரி, மன்னன், ரகுபதி, திருஞானம், செந்தில், பொன்னம்பலம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் ஆகியோர் ஆஜராகினர். “வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, 17 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
|
மனைப்பிரிவு வரன்முறைக்கு கால அவகாசம் வழங்கப்படாது: அமைச்சர் முத்துசாமி உறுதி | செய்திப்பிரிவு | ஈரோடு | 2024-02-17 08:01:00 |
ஈரோடு: வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்துகொள்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில், வரும் 29-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குமேல் காலஅவகாசம் வழங்கப்படாது. வீட்டுவசதித் துறையில் பயனாளிகளின் குறைகள், புகார்களைப் பெற 16 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு, 5,000 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதிலும் 60 இடங்களில் வீட்டுவசதித் துறை மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள 10,000 வீடுகள்இடிக்கப்பட்டுள்ளன. அந்தஇடங்களில் தேவை அடிப்படையில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்படும்.
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட, 3,000 வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. அவற்றை வாடகை அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறையான திட்டமிடலின்றி வீடுகளைக் கட்டியதால், அவை விற்பனையாகவில்லை என்று தெரியவந்துள்ளது.சென்னையில், 5 இடங்களில் குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
|
மேல்மா சிப்காட் விவகாரம் அமைச்சர் எ.வ.வேலு கருத்தை எதிர்த்து செய்யாறு அருகே விவசாயிகள் போராட்டம் | செய்திப்பிரிவு | திருவண்ணாமலை | 2024-02-17 07:53:00 |
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்காக மேல்மா உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து,விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 7 விவசாயிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், குண்டர் சட்டத்திலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “9 கிராமங்களில், 7 கிராமங்களைச் சேர்ந்தவிவசாயிகள் நிலம் கொடுக்க முன்வந்துள்ளனர். இரு கிராம மக்கள் மட்டும், சிலரின் தூண்டுதலின் பேரில் செயல்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லை” என்றார்.
நிலத்தில் இறங்கி... அமைச்சரின் இந்த கருத்துக்கு மேல்மா சிப்காட் விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், செய்யாறு அடுத்த குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கிநேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் எ.வ.வேலுவை கண்டித்து முழக்கமிட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “நிலம் கொடுக்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கொடுமைப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம்கூட இல்லை எனஅமைச்சர் எ.வ.வேலு கூறி வருகிறார். எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதை நிரூபித்தால், அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலகத் தயாரா?” என்றனர்.
|
நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் தோடர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு | செய்திப்பிரிவு | உதகை | 2024-02-17 07:48:00 |
உதகை: பழங்குடியினத்தைச் சேர்ந்த தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை வந்துள்ளார். உதகைராஜ்பவன் மாளிகையில் தங்கிஉள்ள அவர் நேற்று காலை தோடரின மக்களின் தலைமை மந்தான முத்தநாடு மந்து வந்தார். அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ் குட்டன் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர்.
ஆளுநர் மற்றும் அவரது மனைவிக்கு தோடரின மக்களின் பாரம்பரிய புத்துக்குளி சால்வை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், அங்குள்ள தோடர்மக்களின் குலதெய்வக் கோயிலானகூம்பு வடிவ கோயில் மூன்போமற்றும் ஓடையாள் வாவ் கோயில்களில் ஆளுநர் வழிபாடு நடத்தினார். மேலும், தோடர் இளைஞர்இளவட்டக் கல்லை தூக்கியதையும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தோடர் மக்களின் கைவினைப்பொருட்களையும் பார்வையிட்டார்.
பின்னர், தோடரின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தார். மேலும், தோடர் மக்களுடன் கைகோர்த்து, அவர்களின்பாரம்பரிய நடனமாடினார். பின்னர்,தோடரின மக்கள் மத்தியில் ஆளுநர் பேசியதாவது:
தோடர்கள் நவீனத்தை நோக்கிமுன்னேறினாலும், தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்கிறீர்கள். இதுதான் உங்களின் தனித்துவம். இந்த நவீன யுகத்திலும் கலாச்சாரத்தை கைவிடாமல் இருக்கும் தோடர் இன மூத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த ஆளுநர், பகல் 12.30 மணியளவில் உதகை ராஜ்பவனுக்கு புறப்பட்டுச் சென்றார்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் கவுசிக், மாவட்ட வன அலுவலர் கவுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆளுநர் வருகையை முன்னிட்டு முத்தநாடு மந்து பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
|
மேகேதாட்டு அணை விவகாரம்: காவிரி ஆணைய தலைவருக்கு எதிராக போராட்டம் | செய்திப்பிரிவு | தஞ்சாவூர் | 2024-02-17 07:40:00 |
தஞ்சாவூர்: மேகேதாட்டு அணைக்கு காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம்முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். போராட்டத்தில் எஸ்.கே.ஹல்தர் உருவ பொம்மையை எரித்து, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பெ.மணியரசன் கூறியது: கடந்த பிப்.1-ம் தேதி நடைபெற்ற காவிரிநதி நீர் மேலாண்மைஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணையை கர்நாடகா கட்டிக் கொள்வது தொடர்பான தீர்மானம்குறித்து கருத்துகேட்க, மத்தியஅரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது அணை கட்டுவதற்கு ஆதரவான நிலைப்பாடாகும்.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்த பொருளை முன்வைத்தால், அந்தக் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் பிரதிநிதி வெளியேறிவிடுவார். ஆனால், பிப்.1-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மேகேதாட்டு அணை தொடர்பான தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யாதது ஏன் என்று விளக்கம் அளிக்கவேண்டும். இந்த தீர்மானம் தொடர்பாக தமிழக அரசு இதுவரை கண்டிக்கவும் இல்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்க மட்டுமே காவிரிநதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. கர்நாடகா புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம், காவிரிஆணையத்துக்கு இல்லை. இந்தஅணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது.
எனவே, கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் எஸ்.கே.ஹல்தரை காவிரி ஆணையத் தலைவர்பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போராட்டத்தில், காவிரிஉரிமை மீட்புக் குழுப் பொருளாளர் த.மணிமொழியன், தமிழகவிவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப.ஜெகதீசன், தமிழ்நாடுகாவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர.விமல்நாதன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச.சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
|
அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டம்: அரசை வலியுறுத்தி விசிக தீர்மானம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 06:20:00 |
சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலை குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை மிக கடுமையாக எதிர்க்கவேண்டும், தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது’ ஆகிய 2 தனித் தீர்மானங்களை வரவேற்று, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, அவர்கள் மீது நடத்தப்பட்ட மத்திய பாஜக அரசின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
பதவி உயர்வில் ‘200 பாயின்ட்ரோஸ்டர்’ முறை ரத்து செய்யப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தரவரிசை கடைபிடிக்கப்படுவதால் ஒட்டுமொத்தமாக எஸ்.சி. பிரிவினருக்கு உயர் பதவிகளில் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
அரசமைப்பு சட்டப்பிரிவு 16 (4ஏ)-ன்படி, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதை பயன்படுத்தி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் சட்டம் நிறைவேற்றியுள்ளன. அதுபோல தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
|
மெரினாவில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாயில் ரோடமைன் ‘பி’ நச்சுப்பொருள் கண்டுபிடிப்பு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 06:15:00 |
சென்னை: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் விதிகளை மீறி ரசாயனம் கலந்து பஞ்சு மிட்டாய் தயாரித்தது தெரிய வந்த நிலையில், அங்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மெரினா கடற்கரையில் கடந்த பிப்.8-ம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வண்ணங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். ஆய்வு முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி (Rhodamine B) என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியதாவது: ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும்.
இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
|
கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் 9 ஏக்கரில் நவீன பூங்கா: ரூ.16 கோடியில் அமைக்க ஒப்பந்தம் கோரியது சிஎம்டிஏ | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 06:10:00 |
சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் 9 ஏக்கரில் நவீன வசதிகளுடன்கூடிய பூங்காவை ரூ.16.50 கோடிசெலவில் அமைப்பதற்காக சிஎம்டிஏஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
கோயம்பேடு சந்தை வளாகம் 295 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான இது கடந்த 1996-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு பழம், பூ, காய்கறி கடைகளுக்கென தனித்தனி வளாகங்கள் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் இந்த வளாகத்தில் உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) கட்டுப்பாட்டில் உள்ள இந்த வளாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வளாகத்தில் பூ மார்க்கெட் அருகில் பசுமைப் பூங்காஅமைக்க சிஎம்டிஏ முடிவெடுத்தது.
பல்வேறு சிறப்பம்சங்கள், நவீன வசதிகளுடன் இந்த பூங்காவை ரூ.16.50 கோடியில் 9 ஏக்கர் பரப்பில் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை சிஎம்டிஏ கோரியுள்ளது. இப்பூங்காவில் அடர்வனம், பசுமைபுல்வெளி, பருவகாலத்துக்கு ஏற்றவகையிலான சிறு குளம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடும் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைப்பயிற்சிக்கான இடம், திறந்தவெளி திரையரங்கம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தபூங்கா அமைக்கப்படுகிறது.
இப்பூங்காவில் திறந்தவெளிப் பகுதி அதிகளவில் இருக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் இப்பூங்காவில் அதிகளவில் இருக்கை வசதிகள், போதிய விளக்குகள், நவீன கழிப்பிடங்கள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
4 மாதங்களில் பணிகளை முடித்து திறக்கும் வகையில் இந்த பூங்காவுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் பரபரப்பு குறைந்துள்ளது.
அதேநேரம், பொதுமக்கள் பொழுது போக்குவதற்கான போதிய இடம் இல்லாத கோயம்பேட்டில், இந்த பூங்கா அமையும் பட்சத்தில் அதிக வரவேற்பைப் பெறும் என்று சிஎம்டிஏஅதிகாரிகள் கூறுகின்றனர்.
|
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 3-வது நாளாக சாலை மறியல் போராட்டம்: கிண்டி ரயில் நிலையம் அருகில் 139 பேர் கைது | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 06:05:00 |
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அரசுத் துறைகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஒரு சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, நியமன தேர்விலிருந்து விலக்கு அளித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கடந்த 12-ம்தேதிமுதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14-ம் தேதி கோடம்பாக்கம் மேம்பாலம் அருகிலும், 15-ம் தேதி வேப்பேரியில் சென்னை காவல்ஆணையர் அலுவலகம் அருகிலும் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நியமன தேர்வு இன்றி ஆசிரியர் பணி வழங்க இயலாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 3-வது நாளாக நேற்றும் கிண்டி ரயில் நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சாலையிலிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மொத்தம் 139 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூபன் முத்துகூறும்போது, ``எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.
இதன் தொடர்ச்சியாக சென்னைகாமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் அவர்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஓபிஎஸ், சீமான் கண்டனம்: இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ``அறநெறியை மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்களை அழைத்துப் பேசி சுமுகதீர்வுகாண வேண்டும். டிஎன்பிஎஸ்சி மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி,அவர்களுக்கு பணிநியமனம் வழங்கவேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், ``தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வைற்ற மாற்றுத் திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
|
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒப்புதலும் தரவில்லை: அமைச்சர் எஸ்.ரகுபதி | செய்திப்பிரிவு | கூறியது | 2024-02-17 06:03:00 |
புதுக்கோட்டை; மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒப்புதலும் தரவில்லை என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
திமுக தேர்தல் அறிக்கையை முன்கூட்டியே கூற இயலாது. தேர்தலில் அதுதான் கதாநாயகன். அதை உரிய நேரத்தில் கட்சியின் தலைவர் வெளியிடுவார்.
தமிழக தேர்தல் களம் திமுகவுக்கா? பாஜகவுக்கா? என்பது அல்ல. தமிழகத்தில் பாஜக கால் ஊன்றவில்லை. வளர்ந்ததைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். பண பலத்தை வைத்து தமிழகத்தில் பாஜக பலமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்குகளை எண்ணும்போது அவர்களின் உண்மையான பலம் தெரிய வரும். திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒப்புதலும் தரவில்லை. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், ஆணையத்திலும் தமிழக நீர்வளத் துறை அலுவலர்கள் உரிய வாதங்களை எடுத்து வைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
|
மத்திய அரசுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம்; தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 06:00:00 |
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்றுநடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னையில் தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயிகளுக்குக் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் அமைப்பு(எஸ்கேஎம்) உள்ளிட்டவை பிப்.16-ம்தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் அருகே மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்தன. அந்த வகையில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
இதற்காக அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே காலை9.30 மணி முதல் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் குவியத் தொடங்கினர். அவர்கள்மத்திய பாஜக அரசுக்கு எதிராகபதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து,தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது தடுப்புகள் அமைத்து போலீஸார் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸ் வாகனங்களில் ஏற மறுத்து, தரையில் அமர்ந்து தொழிற்சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களைச் சமாதானம்செய்து, காவல் துறை வாகனங்களில் ஏற்றி அண்ணா அரங்கத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சிலமணி நேரங்களில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், எம்.பி. கூறியதாவது: மத்திய பாஜக அரசு நாட்டை சீரழித்துள்ளது. வெள்ளை அறிக்கை என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கையை சமர்ப்பித்து ஏமாற்றுகிறது. பாஜக அரசை விரட்டும் நோக்கத்தோடு இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் மாபெரும் போராட்டத்தை ஒடுக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையும்கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய பாஜகஅரசை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்தில் கி.நடராஜன் (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜாஸ்ரீதர் (எச்எம்எஸ்), அந்திரிதாஸ் (எம்எல்எஃப்), சேவியர் (ஐஎன்டியுசி), கே.பாலகிருஷ்ணன் (எஸ்கேஎம்) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அண்ணா தொழிற்சங்கம் கருத்து
இதற்கிடையே தொழிற் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிராக கண் துடைப்புக்காக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. தமிழக அரசும் பல்வேறுகோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே மாநில அரசையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தைப் பொறுத்தவரை முழுமையான அளவில் அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் பணியைப் புறக்கணித்துள்ளனர்.
குறிப்பாக கோவை மின்வாரியத்தில் 29 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பணிக்குச் செல்லவில்லை. ஆனால் பிற சங்கத்தினரோ மறியல் போராட்டத்தை நடத்தி, பிற்பகலில் பணிக்குச் சென்றுள்ளனர். அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு, அலுவலகங்கள் முறையாக இயங்கியது தொடர்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
|
பெரும்பான்மை அடிப்படையில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது: கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் | சி.பிரதாப் | சென்னை | 2024-02-17 05:38:00 |
சென்னை: பெரும்பான்மையான சங்கங்களின் கருத்துகள் அடிப்படையில் போராட்டத்தை தள்ளிவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைதல் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்தது. ஆனால், கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகளை முதல்வர்மு.க.ஸ்டாலின் அழைத்துப் பேசியபின்பு போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஜாக்டோ-ஜியோவில் உள்ள சங்கத்தின் ஆசிரியை ஒருவர் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது. அதில், ‘‘எப்பவும் இதே வேலையாப் போச்சு, வாபஸ், தள்ளிவைப்பு, இதையேதான் திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. முதலமைச்சரைப் பார்க்கிறதுதான் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கை எனக் கூறியிருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருக்க மாட்டோம்.
ஓய்வூதியம், சரண்டர் வாங்கித் தரோம்னு போராட்டத்துக்கு அழைக்கிறீங்க, அதை நம்பி நாங்களும் விடுப்பு எடுக்கிறோம். ஆனால், அதை ரத்து செய்துவிடுகிறீர்கள். இனி உங்களை நம்பமாட்டோம். நீங்களும் எங்களை அழைக்க வேண்டாம். கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் ஒவ்வொரு முறையும் முதல்வர் அழைத்து பேசியதும் போராட்டத்தை வாபஸ் பெறுவது ஏன்? எங்கள் குடும்பத்தினர்கூட எங்களை ஏளனம் செய்யும் நிலையே உள்ளது’’ என அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.
137 சங்கங்கள்: இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) கூறும்போது, ‘‘தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் அவற்றைக் கையாள வேண்டும். இது ஒரு தனிப்பட்ட அமைப்பின் அறிவிப்பல்ல. ஜாக்டோ-ஜியோவில் 137 சங்கங்கள் உள்ளன. அதில் பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும். அதன்படியே தள்ளிவைப்பு முடிவும் எடுக்கப்பட்டது.
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதில்அனைவருக்கும் வருத்தமுள்ளது. அதேநேரம் ஆட்சியின் தலைமைபொறுப்பில் இருக்கும் முதல்வர்அழைத்துப் பேசும்போது அதையேற்று தற்காலிகமாகவே போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம். நிதிநிலை அறிவிப்புக்கு பின்பு ஏதும் நடவடிக்கை இல்லையெனில் மீண்டும் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம்’’ என்றார்.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அன்பரசு (மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) கூறும்போது, ‘‘ஜாக்டோ- ஜியோ உதயமான காலத்தில் இருந்து இதேபோல் பல ஆசிரியர்கள், ஊழியர்கள் கோபமடைந்து பேசியுள்ளனர். இத்தனை முறை சந்தித்தும் முதல்வர் எதுவும் செய்யவில்லை என அறிந்தும், அவரை நம்புகிறார்களே என்பது இயல்பான கோபம். இது திட்டமிட்டுச் செய்வதல்ல. அந்த உணர்வுக்கு மதிப்பளித்து உரிமைகளை மீட்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவோம். ஜாக்டோஜியோ அமைப்பில் 90-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களும், 35-க்கும் மேலான ஆசிரியர் சங்கங்களும் உயர்மட்டக் குழுவில் பங்கு வகிக்கின்றன. அனைவருக்கும் ஒரேவிதமான கருத்துகள் இருக்காது’’ என்றார்.
முதல்வர்அழைத்துப் பேசும்போது அதையேற்று தற்காலிகமாகவே போராட்டத்தை தள்ளிவைத்து உள்ளோம்.
|
சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் நீதிமன்றம் தலையிடும் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-17 05:19:00 |
சென்னை: சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வையற்ற, பார்வை குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கைது செய்த போலீஸார், அவர்களை வெளியூர் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்து அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது சட்டப்பூர்வமான உரிமைதான் என்றாலும் அவை சட்டப்பூர்வமாக நடத்தப்பட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்கூட்டியே போலீஸாரிடம் அனுமதி கோரப்பட்டதா? போலீஸார் அனுமதி மறுத்துள்ளனரா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், திடீரென சாலையை மறித்து யாரும் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடமுடியாது. ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கென அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீஸாரின் அனுமதி பெற்று அதன்பிறகே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த முடியும். ஒருவேளை போலீஸார் அனுமதி மறுத்தால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடலாம்.
அதேநேரம், சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும். இந்த வழக்கில் மனுதாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கும்படி போலீஸாரை நாடலாம், எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
|
தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த புதிய விதிமுறைகள் என்னென்ன? | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-16 20:40:00 |
மதுரை: தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயத்தை 3 மணி நேரத்தில் முடிக்கவும், அதிகபட்சம் 5 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த ரவி, பேராவூரணி தாலுகா செருபாலக்காடு கிராமத்தில் பிப். 18-ல் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாட்டுவண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்துவதற்கு பொதுவான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர் எஸ்பி ஆஷிஸ்ராவத் பதில் மனு தாக்கல் செய்தார்.அதில், மாட்டு வண்டி பந்தயம், ரேக்ளா ரேஸ் நடத்த விலங்குகள் நல வாரியம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். பங்கேற்பாளர்கள் சுகாதாரத் துறையிடம் உடற்தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
காளை மாட்டு வண்டிப் பந்தயம் பகல் நேரத்தில் மட்டும் நடத்தப்பட வேண்டும். முழுப் போட்டியும் அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டும். மாட்டு வண்டி பந்தயத்தில் சூதாட்டம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது. காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கக் கூடாது. இதேபோல் மாட்டு வண்டியில் செல்பவர்கள் மது அருந்தக்கூடாது. ஒவ்வொரு காளை வண்டிக்கும் உரிய அதிகாரிகளிடம் உறுதிச்சான்றிதழ் பெற வேண்டும்.
பந்தயம் தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது மாநில நெடுஞ்சாலைகளில் நடத்தப்படக்கூடாது. கிராமச் சாலைகள் அல்லது காலி மைதானத்தில் நடத்தப்பட வேண்டும். மாட்டு வண்டிப் பந்தயம் முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். காளைகள் எந்த வகையிலும் சித்திரவதை செய்வதை அனுமதிக்கக்கூடாது. காளைகளை சவுக்கால் அடிக்க அனுமதிக்கக்கூடாது. சவுக்கை வண்டிக்காரர் காற்றில் சுழற்றி தரையில் மட்டுமே அடிக்க வேண்டும். மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதில் சாதி, வகுப்பு மற்றும் அரசியல்சாயம் இருக்கக் கூடாது.
பந்தய வண்டியில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும், அதிபட்சம் 5 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே பந்தயம் நடத்த அனுமதிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 மாட்டு வண்டிகளுக்கு மேல் செல்லக் கூடாது. அரசியல் கட்சிக் கொடிகள், மதக் கொடிகள், கோஷங்கள் மற்றும் பாடல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாட்டு வண்டிப் பந்தயத்தில் பங்கேற்கும் அனைத்து காளைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி காளைகள் நல்ல நிலையில் இருக்கின்றன, போதை ஏற்படுத்தும் பொருட்கள் கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை பின்பற்றி மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது குறித்த விதிமுறைகள் குறித்து அனைத்து டிஎஸ்பிக்கள், மாநகர் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அந்த சுற்றறிக்கை அடிப்படையில் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
|
ரேஷனில் மசூர் பருப்பு விநியோகிக்க கோரிய வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-16 19:01:00 |
சென்னை: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் விநியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனமான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட விலைக் குறைவான மசூர் பருப்பை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் களையான கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறி மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு, மசூர் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிக்க உத்தரவிட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து 2017-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். எனவே, துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரி எங்களது நிறுவனம் தரப்பில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
|
“மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவர்” - விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 18:51:00 |
சென்னை: "ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021-ல் விவசாயிகளின் மாபெரும் எழுச்சிமிக்க போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய பாஜக அரசு பல்வேறு வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் டெல்லி நோக்கி இந்திய விவசாயிகள்அணி திரளுகின்றனர்.
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சாரச் சட்டத் திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மிகக் கொடுமையாக இரவு நேரங்களிலும் விவசாயிகள் மீது ட்ரோன்கள் வாயிலாகக் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்துவதை ஒருக்காலும் அங்கீகரிக்க முடியாது.
தேசத் துரோகிகள் போலவும் மிகப்பெரிய கொடும் குற்றவாளிகள் போலவும் விவசாயிகளை மத்திய அரசு கையாளுகிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான போராட்டம் வெற்றி பெறஎங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
|
ப்ரீமியம் அலெக்ஸி நவல்னி மரணம் முதல் ‘அஸ்வின் 500’ சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.16, 2024 | செய்திப்பிரிவு | மரணம் | 2024-02-16 18:30:00 |
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணம்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, ரஷ்யாவின் கார்ப் நகரத்தில் உள்ள ஆர்க்டிக் சிறையில் நவல்னி அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறையில் வாக்கிங் சென்ற நவல்னி திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாகவும், இதன்பின் மருத்துவர்கள் முதலுதவிக்கு பின் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், என்னும் சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்தாகவும் ரஷ்ய சிறைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
|
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் மனு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிலளிக்க உத்தரவு | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-16 18:17:00 |
மதுரை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது. உயர் நீதிமன்றமும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற கிளையில் 2-வது முறையாக ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். என் கைது சட்டவிரோதம். வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங்க் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார். இதையடுத்து, ''லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 28-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
|
பாஜக மீது கடும் அதிருப்தி: திமுக கூட்டணியில் இணைகிறாரா கிருஷ்ணசாமி? | அ.கோபால கிருஷ்ணன் | ராஜபாளையம் | 2024-02-16 17:34:00 |
ராஜபாளையம்: தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா ஆகியோரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்திக்கவில்லை. தென்காசி தொகுதி கள நிலவரத்தால் திமுக கூட்டணி பக்கம் கிருஷ்ணசாமி சாய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிய தமிழகம் கட்சியை 1996-ம் ஆண்டு தொடங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, தென் மாவட்டங்களை மையப்படுத்தியே தனது அரசியல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். தென்காசி மக்களவைத் தொகுதியில் 1998 முதல் 1999, 2004, 2009, 2014, 2019 வரை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு ஒருமுறைகூட அவரால் வெற்றிக் கனியைச் சுவைக்க முடியவில்லை. இந்தத் தொகுதியில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து தலா ஒரு முறையும், 3-வது அணி சார்பில் ஒரு முறையும், இருமுறை தனித்தும் போட்டியிட்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்திய கிருஷ்ணசாமி தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை முழுநேர அரசியலுக்கு கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தென்காசி தொகுதியில் நடந்த பல்வேறு போராட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் ஷியாம் கலந்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் இணைந்து செயல்பட்டு வந்த கிருஷ்ணசாமி, ஆர்எஸ்எஸ் மாநாட்டிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், தான் பாஜகவுடன் அல்ல ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறி வந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணமாக தென்காசி வந்தபோது, அவருடன் கிருஷ்ணசாமியும் கலந்துகொண்டார். மேலும், பாஜகவின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கிருஷ்ணசாமி தவறாமல் கலந்துகொண்டு வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதமே தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.
பின்னர் நடந்த புதிய தமிழகம் கட்சியின் 27-வது ஆண்டு மாநாட்டில் தனது மகன் ஷியாமை இளைஞரணி தலைவராக நியமித்தும், புதிய தமிழகம் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார் கிருஷ்ணசாமி. அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டபோது இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியவர்களில் கிருஷ்ணசாமி முக்கியமானவர். தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான 'ஸ்டார்ட் அப் பிரிவு' மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதேபோல் சங்கரன்கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்ற அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை மிகப்பெரிய மாநாடு போல் நடத்திய ராஜலட்சுமி தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளார்.
இந்த இரு கட்சிகளின் சார்பிலும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதை அறிந்து கிருஷ்ணசாமி அதிர்ச்சி அடைந்தார். இதனால் கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடியை கூட்டணிக் கட்சியினர் சந்தித்த நிலையில், கிருஷ்ணசாமி சந்திக்கவில்லை. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் பாஜக தேசிய தலைவர் நட்டா சென்னை வந்தபோதும் அவரை சந்திக்க கிருஷ்ணசாமி செல்லவில்லை. மேலும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றும் கோரிக்கையை நிறைவேற்றாமல் பாஜக தவறிழைத்து விட்டது என கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், ''பாஜகவுக்கு கொள்கை ரீதியில் புதிய தமிழகம் முழு ஆதரவை அளித்து வந்தது. மக்களவைத் தேர்தலில் இரு இடங்கள் கேட்ட நிலையில் முக்கிய தொகுதியான தென்காசி தொகுதியில் அண்ணாமலை ஆதரவில் பாஜகவினர் தேர்தல் பணியாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றனர்.
|
“மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயல்” - விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 17:29:00 |
சென்னை: "கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயலானது வன்மையான கண்டனத்துக்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது மிகுந்தப் போற்றுதலுக்குரியது. கரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயலானது வன்மையான கண்டனத்துக்குரியது.
விவசாயப் பெருங்குடி மக்களை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி 13 மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்த வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போருக்கு அடிபணிந்தும், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதுடன் அவர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தது.
ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் வேளாண் பெருங்குடிகள் முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது வெட்கக்கேடானதாகும்.
வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளை பெருமுதலாளிகளின் கூலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் கொடுமைகளுக்கு எதிராக வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் ஒன்றுதிரண்டு அறவழியில் போராடி வருகின்றனர். வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் அலட்சியம் செய்வதுடன், போராடும் விவசாயிகள் மீது பாஜக அரசு அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும்.
இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
மேலும், வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.
|
“தேர்தல் பத்திரம் திட்டம் ரத்தால் பாஜகவுக்கு இழப்பு இல்லை” - திமுகவுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பதில் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 17:02:00 |
சென்னை: "பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்பாக, என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் முடித்திருப்போம். சென்னையில் காவல் துறை அனுமதி இல்லை. எனவே, இங்குள்ள 20 தொகுதிகளில் மட்டும் மக்களை உள் அரங்கு கூட்டங்களில் சந்தித்து வருகிறோம். இந்த யாத்திரையின் இறுதி நிகழ்வு பல்லடத்தில் நடைபெறுவது உறுதி.
என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் பல்லடத்துக்குத்தான் வருகிறார். அதில் எந்த மாற்றமும், சந்தேகமும் இல்லை. ஆனால், எந்த தேதியில் வருகிறார் என்பதை இரண்டு, மூன்று நாட்களில் அறிவிக்கிறோம். காரணம், பிரதமர் அரசு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கும்போது, அந்த தேதியையும் இறுதி செய்த பின்னர்தான், தேதியை அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார்.
அப்போது நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் சிலர் அந்தக் கட்சியில் இணைவார்கள். சிலர் இந்த கட்சியில் இணைவார்கள். இது புதிதல்ல. கவுதமி ராஜபாளையத்தில் போட்டியிட கட்சி வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததாகவும், ஆனால், வாய்ப்பு தரவில்லை என்று சொல்லியிருந்தார். இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சில விஷயங்களை வெளிப்படையாக வெளியே பேசுவது நல்லதல்ல.
பிரதமரின் தமிழக வருகையின்போது இன்னும் நிறைய பேர் பாஜகவில் இணையப் போகின்றனர். பாஜகவில் இருந்து மாற்றுக் கட்சிக்கு செல்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். அதேபோல், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தால், அவர்களுடைய பழைய கட்சியைக் குறித்து யாரும் பேச வேண்டும் என்று கட்சியினரிடம் நான் கூறியிருக்கிறேன். எனவே, மக்கள் வருவதும் போவதும் சகஜம்தான்" என்றார்.
தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. பாஜகவுக்கு வந்துள்ள 48 சதவீத தொகை தேர்தல் பத்திரம் இல்லாமல் வந்துள்ளது. இந்தியாவில் பாஜக மீது மக்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து, இந்தக் கட்சிக்கு 10 ரூபாய் கொடுத்தால், அவர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துள்ளனர்.
பாஜக இந்தியா முழுவதும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக்கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது. பாஜகவுக்கு ஒரு மாநிலத்துக்கு சராசரியாக ரூ.212 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி வந்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 5,500 பேருக்கும் காசோலையில் நிதி வழங்கினோம். இதுபோல் செய்ததாக திமுகவோ, வேறு ஏதாவது மூத்த கட்சிகளோ, இல்லை தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு கட்சி சொல்ல முடியுமா? எனவே, எங்களைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பால் இழப்பு ஒன்றும் இல்லை" என்று அண்ணாமலை கூறினார்.
|
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்.20 வரை நீட்டிப்பு: இது 21-வது முறை | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-16 16:52:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 21வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் விவரம் > கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
|
“அமைச்சர் எ.வ.வேலு பதவி விலகத் தயாரா?” - மேல்மா சிப்காட் எதிர்ப்புக் குழுவினர் சவால் | இரா.தினேஷ்குமார் | திருவண்ணாமலை | 2024-02-16 16:16:00 |
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் திட்டத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நிலத்தில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், “எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதனை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா?" என்று அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 3-வது கட்ட சிப்காட் விரிவாக்க திட்டத்துக்காக, மேல்மா உட்பட 9 ஊராட்சிகளில் உள்ள 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சி செய்கிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச் சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், "முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை பறித்தால் வாழ்வாதாரம் பாதிக்கும்" என முழக்கமிட்டனர்.
நூறு நாட்களை கடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 7 விவசாயிகளை முந்தைய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் குண்டர் சட்டத்தில் இருந்து 7 விவசாயிகளும் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களுடன் இணைந்து 2-ம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். ஒரு பிடி மண்ணை கூட அரசுக்கு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பதவி விலகத் தயாரா? - அமைச்சர் எ.வ.வேலு கருத்துக்கு மேல்மா சிப்காட் விரிவாக்க எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறும்பூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அமைச்சர், எ.வ.வேலுவை கண்டித்து முழக்கமிட்டனர். விவசாயிகள் கூறும்போது, "நிலம் கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தும், குண்டர் சட்டத்தில் கைது செய்தும் கொடுமைப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறி வருகிறார். எங்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதனை நிரூபித்தால் அமைச்சர் பதவியில் இருந்து எ.வ.வேலு விலக தயாரா?" என கேள்வி எழுப்பி உள்ளனர்.
சட்டப்பேரவையில் நடந்த விவாதம் என்ன? - தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, “திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்து வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நியாயமாக போராட்டம் நடத்திய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை இந்த அரசு போட்டு அவர்களை கைது செய்தது கண்டிக் கத்தக்கது. விவசாயிகள் தங்களுடைய நிலங்களை காக்க, அறவழியில் போராட்டம் நடத்தினர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “நீங்கள் முதல்வராக இருந்த போது சிப்காட்டுக்கு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என அறிவிப்பு எல்லாம் வந்தது. அதன் பின்னர், விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அரசு பொறுப் பேற்ற உடனே, நீங்கள் செய்த பணியை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதாலும், இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தான் நிலத்தை கையகப்படுத்த இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மொத்தம் 9 ஊர்கள் உள்ளன. அதில், 7 ஊர்களின் விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நிலத்தை கொடுக்கும் நிலை இருந்தது. 2 ஊர்களில் மட்டும்தான் சிலரின் தூண்டுதலின் அடிப்படையில் செயல்படுகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து தூண்டிவிட்டனர். அந்தப் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள், சிப் காட்டுக்கு நிலம் எடுங்கள், வேலை கொடுங்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் எடுக்கக் கூடாது என கூறுபவர்கள் மிகவும் குறைவு. நிலம் எடுத்து பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என கூறுபவர்கள் 99 சதவீதத்தினர். நிலங்களை கையகப்படுத்தி அரசு எடுத்துக் கொள்ளாது. லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க தான் முயற்சி செய்கிறோம். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் இல்லை” என்றார் அமைச்சர்.
|
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-16 16:02:00 |
சென்னை: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 1996-ம் ஆண்டு அறநிலையத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டேன். பின்னர் 2005-ல் துணை ஆணையராகவும், 2010-ல் இணை ஆணையராகவும், 2015-ல் கூடுதல் ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கூடுதல் பதவி உயர்வு பெற உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் 2016-ல் மீண்டும் இணை ஆணையராக பணியில் அமர்த்தப்பட்டேன். தன்னுடன் பணிபுரிந்த வாசுநாதன் மற்றும் திருமகள் ஆகியோரை கூடுதல் ஆணையர்களாக நியமிக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையராக நியமிக்க உத்தரவிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், இணை ஆணையராகவே பணியில் இருந்து ஓய்வு பெற்றதால், கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளித்து, அதற்கான பணபலன்களை அளிக்க உத்தரவிட்டிருந்தது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பட்டூ தேவானந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் மார்ச் 15-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
|
கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு | ஆர்.பாலசரவணக்குமார் | சென்னை | 2024-02-16 15:05:00 |
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்கக் கூடாது. விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை இன்று (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் முறையீடு: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், அமலாக்க துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இந்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிடும் என்று முறையிட்டார். மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் பட்டியலிடும் போது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
ஜாமீன் மனு விசாரணை: இதேபோல், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்குப் பதிலாக புதன்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டுப் பதிவு இல்லை: இதைத்தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. மனுவின் நகல் அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டு விட்டதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக செந்தில் பாலாஜியை காணொளி வாயிலாக ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனால், இன்று செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு நடைபெறவில்லை.
|
டிஎன்பிஎஸ்சி-க்கு 5 புதிய உறுப்பினர்களை நியமித்தது தமிழக அரசு | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 15:04:00 |
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (TNPSC) ஐந்து புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.சரவணகுமார், மருத்துவர் ஏ.தவமணி, மேயர் சிட்டி பாபு தெருவைச் சேர்ந்த உஷா சுகுமார், கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவன முதல்வர் முனைவர் ஆர்.பிரேம்குமார் ஆகிய ஐந்துபேரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு வருட காலங்களுக்கு அல்லது 62 வயது வரை இப்பதவியில் நீடிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். இதில் தலைவர் உட்பட பல உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனிடையே, காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பும்பொருட்டு, தற்போது 5 புதிய உறுப்பினர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் பெற்று உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் தகவல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 14:49:00 |
சென்னை: "திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.16) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம்.
அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி மக்களைத் தேடி மருத்துவம்,ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும். இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களாக அமைந்திருக்கின்றன.
இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகத்தான திட்டம். இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். “மக்களிடம் செல் - மக்களோடு வாழ் - மக்களுக்காக வாழ்” என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் – மறைந்த முதல்வர் கருணாநிதியும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம்.
ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்தத் திட்டம்.
அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக்கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது.
மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமையாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18-12-2023 அன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.
தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகள முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.
முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.
இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள், பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு, கட்டட அனுமதி, பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம், கடன் உதவிகள், கருவிகள், அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது. கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை லட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள். எல்லா மாவட்டங்களிலும், மேற்படி முகாம்களில் அளித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அந்த பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறது.
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமான அமைச்சர்களையும், அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்” என்று முதல்வர் பேசினார்.
|
“கர்நாடக அத்துமீறலை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது” - ராமதாஸ் @ மேகேதாட்டு விவகாரம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 14:45:00 |
சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ளன; முறையான அனுமதி பெற்று விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும், மேகதாது அணை கட்ட உருவாக்கப்பட்ட சிறப்பு குழுக்களின் கீழ் 2 துணைக் குழுக்கள் செயல்படும் என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் நிநி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத் தடையை மீறி காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கவும், அதனடிப்படையில் மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கவும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. ஆனால், இதை சற்றும் மதிக்காமல், மேகேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் காவிரி மேலாண்மை ஆணையம் அண்மையில் வழங்கியது.
அதற்கு எதிராக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேககேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டதாக கர்நாடகம் அறிவித்திருக்கிறது. இதற்குப் பிறகும் கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே 1924-ம் ஆண்டில் கையெழுத்தான காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகளை கட்ட முடியாது. காவிரி சிக்கல் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகளை கட்ட முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானவை.
மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018-ம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வதுதான். அதை மத்திய அரசு உடனடியாக செய்வதுடன், மேகேதாட்டு அணை குறித்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று கருநாடகத்தை எச்சரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என ராமதாஸ் கூறியுள்ளார்.
|
“தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை கைவிடாததில் மகிழ்ச்சி” - ஆளுநர் ஆர்.என்.ரவி @ உதகை | ஆர்.டி.சிவசங்கர் | உதகை | 2024-02-16 14:30:00 |
உதகை: “தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் உதகை சென்றுள்ளார். உதகை ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ள அவர் இன்று காலை தோடரின மக்களின் தலைமை மந்தமான முத்தநாடு மந்துவுக்கு சென்றார். அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தஏஷ் குட்டன் மற்றும் தலைவர்கள் வரவேற்றனர். அவர் மற்றும் அவரது மனைவிக்கு தோடரின மக்களின் பாரம்பரிய புத்துக்குளி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர், அங்குள்ள தோடர் மக்களின் குலதெய்வ கோயிலான மூன்போ மற்றும் ஓடையாள் வாவ் கோயில்களை பார்வையிட்டு, பின்னர் வழிபட்டார்.
பின்னர் ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி, தோடர் இளைஞர் இளவட்ட கல்லை தூக்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு ஆரவாரம் செய்தனர். அவர்கள் இருவரும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தோடர் மக்களின் கைவினை பொருட்களை பார்வையிட்டனர். பிறகு, தோடரின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தனர். இதையொட்டி, ஆளுநர் ரவி தோடர் மக்களுடன் அவர்களுடன் கைக்கோர்த்து பாரம்பரிய நடனம் ஆடினார்.
அவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ரவி, “தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி. இது தான் இந்தியா. மக்கள் வளர்ச்சி அடைந்தாலும் தங்களது அடிப்படையை விட்டுவிட கூடாது.
ஆல்வாஸ் தோடரின மக்களின் கிராமங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்களை காண்பித்தபோது, இங்கு வர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. அதனடிப்படையில் இன்று இங்கு வந்து உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்குள்ள உங்களின் கோயில்களை பார்வையிட்டதை புனித யாத்திரையாக கருதுகிறேன். என்னையும் எனது மனைவியையும் நீங்கள் உபசரித்தது எனது பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சுமார் ஒரு மணி நேரம் முதல் நாடு பந்தில் நேரத்தை செலவிட்ட ஆளுநர் பின்னர் பகல் 12.30 மணியளவில் ராஜ்பவனுக்கு புறப்பட்டு சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு முத்தநாடு பந்து பகுதியில் எஸ்பி பல.சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
|
மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக தீர்மானம் - காவிரி ஆணைய தலைவர் உருவ பொம்மை எரிப்பு @ தஞ்சை | வி.சுந்தர்ராஜ் | தஞ்சாவூர் | 2024-02-16 13:18:00 |
தஞ்சாவூர்: மேகேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே இன்று (பிப்.16) போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு துணை நிற்கும் மத்திய அரசையும், அதற்குத் துணையாக இருந்து சூழ்ச்சி செய்து வரும் எஸ்.கே. ஹல்தரையும், பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்த பொருளை முன்வைத்தால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை. இந்நிலையில் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. எனவே காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே. ஹல்தரை நீக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.
போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப. ஜெகதீசன், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் த.சு. கார்த்திகேயன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசியக் களத் தலைவர் ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், துரை. இரமேசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
|
மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும்: தினகரன் வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 13:10:00 |
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணைகட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
கர்நாடக மாநில நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் சித்தராமையா, மத்திய அரசின் அனுமதியை பெற்று விரைவில் மேகேதாட்டு அணை கட்டப்படும் எனவும், அணை கட்டும் பணிகளை மேற்கொள்ள பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மேகேதாட்டு அணை குறித்து நடைபெற்ற விவாதத்தில் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றது விவசாயிகளுக்கு இழைத்த மாபெரும் துரோகம் ஆகும்.
தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி நதிநீர் விவகாரத்தில், ஜெயலலிதா நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினால் பெற்ற உரிமையை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
எனவே, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக தடுத்து நிறுத்துவதோடு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என தினகரன் கூறியுள்ளார்.
|
“உதயநிதியின் கருணை மாற்றுத்திறனாளிகள் பக்கம் திரும்புமா?” - தமாகா கேள்வி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 13:03:00 |
சென்னை: நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்த உதயநிதியின் கருணை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பக்கம் திரும்புமா? என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஷால் பொதுச் செயலாளராக பதவியேற்றதிலிருந்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் நன்கொடை பற்றி பேசாத உதயநிதி ஸ்டாலின் தற்போது விஜய்யின் அரசியல் அறிவிப்பிற்குப் பிறகு நன்கொடை தர முன்வந்தது ஏன்?.
தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் திரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் விஜய் பக்கம் போய்விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகத் தான் தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை உதயநிதி வழங்கியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு சிறு, குறு திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட முடியாமல் சிரமப்படுகின்றனர். பல படங்கள் திரையரங்குகளை அடைவதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் உதயநிதி ஸ்டாலினும் அவர் குடும்பத்தார் வசமுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் என்று கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போலதான் திரைப்படத்துறை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வாரம்தோறும் இரண்டு மூன்று திரைப்படங்களை இந்த நிறுவனங்கள் வெளியிட்டு வந்தன. ஒட்டுமொத்தமாக திரையுலகத்தை தன் கட்டுப்பாட்டிலும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகிஸ்தர்கள் என அனைவரும் இன்று திமுக ஆட்சியின் கீழ் ஒரு பயத்தில் உள்ளனர். உதாரணத்திற்கு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியிட முடியாமல் சிரமப்பட்ட போது அது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாகதான் வெளியிடப்பட்டது. இதன் பிரதிபலனாக கமல்ஹாசன் திமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தற்போது எம்.பி சீட் கூட பெற இருக்கிறார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு வேண்டும், வேலைவாய்ப்பு வேண்டும் என போராடி வருகின்றனர். இதற்கெல்லாம் ஏன் உதயநிதி ஸ்டாலின் மனம் உருகவில்லை?. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் எத்தனையோ பணியிடங்கள் காலியாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், அவர்களை அழைத்து பேசக் கூட மறுக்கிறார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அவசியம் வேலை வாய்ப்பு வழங்க அரசு முன்வர வேண்டும். அது பற்றி உதயநிதி ஸ்டாலின் ஏன் வாய்திறக்கவில்லை?. சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட போது கூட தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிக்கப்பட்ட அளவிற்கு நிதி உதவிகள் வழங்கப்படவில்லை. காவிரி நீர் வராததால் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தஞ்சை தரணியில் காய்ந்துள்ளன. அதற்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர். அதையும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏன் உதயநிதி ஸ்டாலின் முன்வரவில்லை?.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்குவது தவறில்லை. ஆனால் அதே சமயத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். நடிகர், நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் வயது முதிர்ந்து பென்ஷன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் கணக்கெடுத்து உரிய பென்ஷனை வழங்க உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை?. ஒலிம்பியாட் மற்றும் கேலோ போன்ற பிரம்மாண்டமான விழாக்களை நடத்தினால் மட்டும் போதாது. ஏராளமான இளைஞர்கள் கிராமப்புறங்களில் போதிய வாய்ப்பின்றி விளையாட்டுகளில் பிரகாசிக்க முடியாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து உதயநிதி ஸ்டாலின் உரிய வாய்ப்பு வழங்க ஏன் முன்வரவில்லை?.
அரசு துறைகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களே இல்லை என்ற நிலை நிலவுகிறது அதையெல்லாம் சரிசெய்ய உதயநிதி ஸ்டாலின் ஏன் முன்வரவில்லை?. 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதை காற்றில் பறக்க விட்டு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடிய (ரெட் ஜெயன்ட் மூவீஸ்) திரைத்துறைக்கு தானாக முன்வந்து உதவி செய்வது சரியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
|
தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு - மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை | கி.மகாராஜன் | மதுரை | 2024-02-16 12:14:00 |
மதுரை: தேர்தல் அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து உள்ளது. மதுரை மாவட்ட நடுவர்மன்ற நீதித்துறை நீதிபதி முத்துலட்சுமி விடுதலை அளித்து தீர்ப்பளித்துள்ளார். இதன்மூலம் 13 ஆண்டுகால வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. குற்றம்சாட்டபட்ட 21 பேரில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி: கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரருமான மு.க.அழகிரி (அப்போது திமுகவில் இருந்தார்) மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அப்போது பணப்பட்டுவாடா நடந்ததாகவும், சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரி, அவரும் ஆதரவாளரும், மதுரையின் முன்னாள் துணை மேயருமான மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் என மொத்தம் 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 9-ம் தேதி நடந்த விசாரணையில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
பிறழ்சாட்சியாக மாறிய தாசில்தார்: வழக்கு விசாரணையின் போது, "மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை. பணப் பட்டுவாடா புகாரின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதால் வாக்குவாதம் எழுந்து, மோதலாகியது" என்று தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தாசில்தார் காளிமுத்து நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறினார். அவரைத் தொடர்ந்து மற்ற சாட்சிகளும் பிறழ்சாட்சியாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
ஓபிஎஸ்ஸை வீழ்த்த வியூகம் - தேனியில் ரவீந்திரநாத்துக்கு எதிராக களமிறக்கப்படும் மகேந்திரன்? | ஒய்.ஆண்டனி செல்வராஜ் | கூறியதாவது | 2024-02-16 12:02:00 |
கடந்த மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும், தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றார். இந்த முறை பாஜக கூட்டணியில் ரவீந்திரநாத்தை தேனியில் களம் இறக்கத் திட்டமிட்டு தற்போதே அந்தத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். பாஜக கூட்டணியில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவுடன் ரவீந்திரநாத்தை வெற்றிபெறச் செய்துவிடலாம் என்று ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், ரவீந்திரநாத்தை வீழ்த்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான ஒரு தேர்தல் பணிக் குழுவை அதிமுகவில் பழனிசாமி நியமித்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த முறை ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுக தேர்தல் பணிக்குழு தேனியில் முகாமிட்டு ரவீந்திரநாத்தை வெற்றிபெறச் செய்தது. இந்த முறை தேனியில் ரவீந்திரநாத் போட்டியிடும்பட்சத்தில், அவரை தோற்கடிக்கும் பொறுப்பை ஆர்.பி.உதயகுமாரிடம் பழனிசாமி வழங்கியுள்ளார்.
மேலும், ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரனை தேனி வேட்பாளராக நிறுத்த பழனிசாமி ஒப்புதல் கொடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரவீந்திரநாத்தை தேர்தலில் வெல்வதன் மூலம், தங்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் ஓபிஎஸ்ஸை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பழனிசாமி திட்டமிட்டுள்ளார் என்றனர்.
|
செய்யாறு சிப்காட் விவகாரத்தில் நில உரிமையாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்த தயாரா? - அன்புமணி | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 11:50:00 |
சென்னை: "செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். இது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாரா?" என பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒரு விழுக்காட்டினர் மட்டுமே சிலரின் தூண்டுதலால் அதை எதிர்ப்பதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசும் போது அமைச்சர் வேலு தெரிவித்த இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது. விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த அமைச்சர் எ.வ. வேலு முயல்வது கண்டிக்கத்தக்கது.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. 11 கிராமங்களில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் இதற்காக பறிக்கப்படவுள்ளன. இதைக் கண்டித்து 90% விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களைக் காக்க எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அதை மறைத்து நிலம் வழங்க அவர்கள் தயாராக இருப்பதாக பொய்யுரைப்பது அமைச்சருக்கு அழகல்ல.
மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த மாநில அரசு முயன்ற போது அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளின் கருத்தையறிய 2008-ஆம் ஆண்டில் 22 கிராமங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 6,000 விவசாயிகள் பங்கேற்ற பொதுவாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதைத் தொடர்ந்து நிலம் எடுக்கும் முயற்சியிலிருந்து மகாராஷ்டிர அரசும், ரிலையன்ஸ் நிறுவனமும் பின்வாங்கின. அது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் வழங்க 99% விவசாயிகள் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்று கூறும் அமைச்சர் வேலுவும், தமிழக அரசும் மகாராஷ்டிர மாநிலத்தில் நடத்தப்பட்டதைப் போன்று செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் உரிமையாளர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் அடக்குமுறை மூலம் விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயன்றால், அதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.
|
“பக்தர்களின் எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்துக்கு அடிக்கல் நாட்டுவதா?” - ராமதாஸ் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 11:18:00 |
சென்னை: வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வள்ளலாரின் கொள்கைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த பார்வதிபுரம் என்ற இடத்தில் 1867 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்த வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார், அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார். அங்குள்ள ஒளிக்கோயிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒளிக்கோயிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும்; பெருவெளிக்கு பதிலாக அருகிலுள்ள காலி இடங்களில் பன்னாட்டு மையத்தை அமைக்கலாம் என்றும் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.
உலகம் முழுவதும் வாழும் வள்ளலார் பக்தர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. ஆனால், அதை மதிக்காத தமிழக அரசு, நான் அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து சரியாக ஒரு மாதம் கழித்து பிப்ரவரி 17 ஆம் நாளான நாளை சனிக்கிழமை வடலூர் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டவுள்ளது. சென்னையிலிருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரிகிறது.
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போது அதை பா.ம.க. வரவேற்றது. அதற்கு காரணம் வள்ளலாரின் புகழும், பெருமையும் உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்படுவதற்கு இந்த மையம் உதவும் என்று நம்பியது தான். தமிழ்நாட்டு மக்களும் கூட இத்தகைய நம்பிக்கையைத் தான் கொண்டிருந்தனர். ஆனால், வள்ளலார் அவரது உயிராக நேசித்த பெருவெளியை சிதைத்து தான் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்பது நிச்சயம் அவருக்கு சிறப்பு சேர்க்காது. மாறாக, அருட்பிரகாச வள்ளலாரின் பெருமையையும், செல்வாக்கையும் அது குறைத்து விடும்.
வடலூர் சத்தியஞான சபையில் பெருவெளி அமைக்கப்பட்டு 157 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், 'இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்' என்பது தான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.
சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகியவை உள்ளன. அப்பகுதிகளில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்பட்டால், அது அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே கருதப்படும். எனவே, வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட்டு, சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் இருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் மையத்தை அமைக்க வேண்டும்; அதுகுறித்து முடிவெடுக்கப்படும் வரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டும். அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
“சுயநலத்துக்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் பழனிசாமி” - ஓபிஎஸ் கண்டனம் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 10:19:00 |
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் இரட்டை நிலைபாடு எடுத்து தனது சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமி திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள்தான் உள்ளன. இந்த ஆட்சியும் மாறும், காட்சியும் மாறும் என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.
இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக ஆதரிக்கிறது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும் என்றும், எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும் என்றும் தனது டிவிட்டர் பதிவில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்தக் கொள்கையிலிருந்து தற்போது அந்தர் பல்டி அடித்திருக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாட்டினை எதிர்த்து 14-02-2024 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின்மீது பேசிய என்.தளவாய் சுந்தரம், ‘2024 ஆம் ஆண்டு முதல் தொடங்கி 2034ஆம் ஆண்டில் முடிவடையும் 10 ஆண்டுகளுக்குள்ளான கிட்டத்தட்ட 10 கோரிக்கைகள் அளித்திருக்கிறோம். பரிசீலனை செய்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, அதனை மத்திய அரசிற்கு அனுப்பி, அதன் மூலமான எங்களுடைய சாதகங்களையும், பாதகங்களையும் பார்க்கின்ற நிலை வரும்பொழுது, நாங்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கின்ற சூழ்நிலை உருவாகும்பொழுது, குழு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமானால், நாங்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம் என்று அரைகுறையாக, மழுப்பலாக குழப்பி இருக்கிறார்.
27 அமாவாசை என்று 2022-ல் கூறியது இப்போது 2034-க்கு சென்றுவிட்டது. இது மட்டுமல்லாமல், இந்தத் தீர்மானம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து, திமுகவுடன் கைகோர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எந்த திமுக என்கிற தீயசக்தியை எதிர்த்து எம்ஜிஆர் கட்சியை தொடங்கினாரோ, எந்தத் தீயசக்தியை எதிர்த்து மாண்புமிகு ஜெயலலிதா கட்சியை வளர்த்தாரோ, அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, திமுகவுடன் கைகோர்த்திருப்பது, ரகசிய உடன்பாடு செய்திருப்பது என்பது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு அடையாளம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஓர் இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2016ஆம் ஆண்டு முழங்கியவர் ஜெயலலிதா.
இதற்கு முற்றிலும் முரணாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்துக்காக திமுகவிடம் சரணாகதி அடைந்துவிட்டார். கட்சியின் தனித் தன்மை தாரைவார்க்கப்பட்டு விட்டது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் துரோகக் கூட்டம் நான்காவது இடத்திற்கு மக்களால் துரத்தி அடிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
|
வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க அன்புமணி வலியுறுத்தல் | செய்திப்பிரிவு | சென்னை | 2024-02-16 10:01:00 |
சென்னை: சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 40% முதல் 94% வரை விளைச்சல் குறைந்திருக்கிறது. குறுவையைத் தொடர்ந்து சம்பா பருவத்திலும் விளைச்சல் வீழ்ச்சி அடைந்து விட்டதால் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் கூட, கர்நாடகத்திடமிருந்து போதிய தண்ணீர் பெற தமிழக அரசு தவறியதால் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியவில்லை. அதனால், சுமார் 2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் கருகி விட்டன; அதுமட்டுமின்றி, 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களின் விளைச்சல் பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. அதனால், உழவர்கள் கடுமையான இழப்பை எதிர்கொண்டனர்.
சம்பா பருவமாவது வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதுவும் பொய்த்து விட்டது. அக்டோபர் மாதம் நடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் இப்போது அறுவடை செய்யப் பட்டு வருகின்றன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 15 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப் படும் நிலையில், நடப்பாண்டில் 12 லட்சத்திற்கும் குறைவான ஏக்கரில் தான் சம்பா/தாளடி சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவற்றிலும் விளைச்சல் வழக்கமான அளவில் பாதிக்கும் கீழாக குறைந்துவிட்டது.
காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 2700 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். கடந்த ஆண்டில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தது 2400 கிலோ முதல் 2500 வரை விளைச்சல் கிடைத்தது. ஆனால், நடப்பாண்டில் பெரும்பான்மையான பகுதிகளில் 1200 முதல் 1500 கிலோ வரை மட்டுமே நெல் விளைந்துள்ளது. அதாவது நெல் விளைச்சல் 40% முதல் 50% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சம்பா நெல் விளைச்சல் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அங்கு சில பகுதிகளில் ஏக்கருக்கு 172 கிலோ மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளது. இது வழக்கமான விளைச்சலான 2700 கிலோவுடன் ஒப்பிடும் போது வெறும் 6% மட்டுமே. இந்தப் பகுதிகளில் சம்பா விளைச்சல் 94% குறைந்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் வழக்கமான அளவில் 50%&60%க்கும் கூடுதலாக விளைச்சல் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா/தாளடி விளைச்சல் குறைந்ததற்கு தமிழக அரசு தான் பொறுபேற்க வேண்டும். அக்டோபர் மாதம் தொடங்கிய சம்பா/தாளடி சாகுபடி பிப்ரவரி இறுதியில் தான் நிறைவடையும். இந்தக் காலத்தில் மழை பெய்யும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காவிரியில் குறைந்தது வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், சம்பா நடவு தொடங்கியது முதல் ஒரு நாள் கூட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஜனவரி மாதத்தில் நெற்பயிர்கள் கதிர் வைக்கும் நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உழவர்கள் கோரிக்கையை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பிப்ரவரி 3&ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 4000 கனஅடி முதல் 6000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப் பட்டது. இது சம்பாப் பயிருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சம்பா/தாளடி விளைச்சல் வீழ்ச்சிக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாதது தான் காரணம் என்று உழவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பா சாகுபடிக்காக ஒவ்வொரு ஏக்கருக்கும் சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். ஆழ்துளை கிணறு இல்லாத பகுதிகளில் இந்த செலவு இன்னும் கூடுதலாக அதிகரித்துள்ளது. ஆனால், செலவு செய்த பணத்தில் பாதியைக் கூட திரும்ப எடுக்க முடியாததால், சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவைப் பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் திரும்ப செலுத்தாத உழவர்கள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது.
உழவர்களை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால், குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. சம்பா பயிர்களின் விளைச்சல் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு வாயைத் திறக்கவில்லை.
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், காலப்போக்கில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்ய உழவர்களே இருக்க மாட்டார்கள். அதன்பின் அரிசிக்காக நான் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பருவத்தில் விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
|
கிடப்பில் பேருந்து சேவை கோரிக்கை: நாகாவதி - எர்ரப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு | செய்திப்பிரிவு | தருமபுரி | 2024-02-16 09:33:00 |
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகாவதி - எர்ரப்பட்டி கிராம மக்கள் பேருந்து சேவை தொடர்பான தங்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது நாகாவதி - எர்ரப்பட்டி கிராமம். 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தின் வழியாக தருமபுரி நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பேருந்துகள் அனைத்தும் நல்லம்பள்ளி ஒன்றியம் வழியாக தருமபுரி செல்கின்றன.
எர்ரப்பட்டி கிராமத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரத்துக்கு நேரடியாக பேருந்து சேவை இல்லை. இந்த கோரிக்கையை சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், இதை கண்டித்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக எர்ரப்பட்டி கிராம மக்கள் பேனர் வைத்து அறிவித்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியது: நாகாவதி எர்ரப்பட்டி கிராமம் பென்னாகரம் ஒன்றியம் மற்றும் வட்டத்துக்கு உட்பட்டது. எனவே, வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்த பணிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம், வேளாண் துறை அலுவலகங்கள், டிஎஸ்பி அலுவலகம் ஆகிய இடங்களில் ஏதேனும் தேவைகள் தொடர்பாக பென்னாகரத்துக்குத் தான் செல்ல வேண்டும். ஆனால், எங்கள் ஊரில் இருந்து பென்னாகரத்துக்கு இதுவரை நேரடி பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே, இவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மூலம் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி வரை சென்று பின்னர் அங்கிருந்து 30 கிலோ மீட்டர் பயணித்து பென்னாகரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் நேரமும், பணமும் விரயமாகிறது. எனவேதான், எர்ரப்பட்டியில் இருந்து பென்னாகரத்துக்கு நேரடியாக பேருந்து சேவையை ஏற்படுத்த கோருகிறோம். எங்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை.
எனவே, இதை கண்டித்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். பென்னாகரத்துக்கு நேரடி பேருந்து சேவை அல்லது எங்கள் பகுதியை நல்லம்பள்ளி ஒன்றியத்தில் இணைத்தல் இவற்றில் ஏதேனும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் இம்முறை தேர்தலில் எங்கள் பகுதி மக்கள் வாக்களிக்க மாட்டோம். இவ்வாறு கூறினர்.
சுவடே இல்லாத தார் சாலை: தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சியில் மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் உள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்தப் பகுதி முழுவதும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமங்கள். இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட 8 கிலோ மீட்டர் நீள சாலை முழுமையாக பெயர்ந்து தார்சாலைக்கான சுவடே இல்லாமல் சேதமடைந்துள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளும் வெளியூர்களுக்கு சென்றுவர கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாலை மிகவும் பாதிக்கப்பட்டதால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து மாணவ, மாணவியருக்காக காலை மற்றும் மாலையில் தலா ஒரு நடை மட்டுமே இயக்கப் படுகிறது. சாலையின் நிலையை காரணம் காட்டி அவரச சூழலிலும் கூட இந்த கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் இயக்கவும் மறுக்கப்படுகிறது.
இது குறித்து மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் புதியதாக தார் சாலை அமைக்கப்படவில்லை. எனவே, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தேர்தல்களை புறக்கணிப்பதாக ஊர் நுழைவு வாயிலில் கிராம மக்கள் அறிவிப்பு பேனர் வைத்துள்ளனர். சாலை மிகவும் பாதிக்கப்பட்டதால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து மாணவ, மாணவியருக்காக காலை மற்றும் மாலையில் தலா ஒரு நடை மட்டுமே இயக்கப் படுகிறது.
|
தென்காசியில் இளைஞரை போலீஸார் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல் | செய்திப்பிரிவு | தென்காசி | 2024-02-16 09:00:00 |
தென்காசி: தென்காசியில் இளைஞர் ஒருவரை காவலர் அடித்து, நெஞ்சில்மிதிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து, இழுத்து தரையில்போட்டு, அவரது நெஞ்சில் காலால்மிதிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவுகிறது.
இந்நிலையில் தென்காசி மங்கம்மாள் சாலையை சேர்ந்த ஜோசப்ரவி மகன் ஆன்ஸ்டன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நேற்று அனுப்பியுள்ள மனு:
தென்காசி பேருந்து நிலையத்தில் கடந்த 14-ம் தேதி இரவு 10.30 மணிக்கு நானும் எனது நண்பர்கள் விஷ்ணு, முகம்மது காசிம்ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்தபோலீஸார் எங்களை தாக்கியதுடன், அவதூறாக பேசினர். என்னை அடித்து கீழேதள்ளி, ஷூ காலால் ஓங்கி மிதித்தார்கள்.
இதனால் மயக்கமடைந்த என்னை போலீஸாரே 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். என்னை அடித்து கொடூரமாக தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு போதையில் இருந்த தன்னைப் பிடித்து போலீஸார் கடுமையாகத் தாக்கியதாக தென்காசி இளைஞர் ஒருவர் தெரிவித்தார். எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் தன்னை அனுமதிக்க மறுத்ததாகவும் இளைஞர் குற்றம் சாட்டினார். pic.twitter.com/UKVDVzk8Yl
|