news_id
int64 6
128k
| news_date
stringlengths 19
22
| news_category
stringclasses 15
values | news_title
stringlengths 1
226
| news_article
stringlengths 7
17.4k
|
---|---|---|---|---|
6 | 1/6/2011 2:45:49 PM | மர்மம் | தூக்கில் தொங்கும் சேவல்கள் திருடர்களை காவு வாங்கும் முனி | நாலு ஆள் உயரம், முறுக்கு மீசை, கையில் வீச்சரிவாளுடன் முனியின் மிரட்டும் தோற்றம், அருகில் கம்பீரமாய் குதிரை, எண்ணிக்கை யில் அடங்காமல் குத்தப்பட்டிருக்கும் வேல் கம்பு, அடர்ந்து கவிழ்ந்து கிடக்கும் மரங்கள், அவற்றின் கிளைகளில் செத்து தொங்கும் சேவல்கள் என வாணியாறு முனியப்பன் கோயிலை நெருங்கும் போதே பக்தியுடன் பயமும் தொற்றிக் கொள்கிறது. அயோக்கியத்தனம், அடாவடி செய்பவர்களை கதிகலங்க வைக்கும் இந்த கோயில், தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி வாணியாற்றின் கரையில் இருக்கிறது.கோயிலை சுற்றியிருக்கும் மரங்களில் மனிதர்கள் தூக்கில் தொங்குவது போல செத்து தொங்கிக் கொண்டிருக்கின்றன சேவல்கள். சு ருக்கில் சிக்கியிருக்கும் ஒவ்வொரு சேவலிலும் ஒரு திருட்டு சம்பவம்தான் ஒளிந்திருக்கிறது. திருடர்களை உடனுக்குடன் தண்டிக்கும் நீதிபதியாக இந்த முனியப்பனை நினைக்கிறார்கள் இப்பகுதி மக்கள். எங்கு திருட்டு நடந்தாலும் சரி. போலீசுக்கு போவதில்லை. தலைக்கு குளித்து ஒரு சேவலுடன் முனியப்பன் கோயிலுக்கு செல்கிறார்கள். சூடம் ஏற்றி சாமி கும்பிட்டுவிட்டு சேவல் கழுத்தில் கயிற்றை கட்டி, அங்குள்ள மரத்தில் தூக்கில் தொங்க விட்டு விடுகிறார்கள். கோழி துடி துடித்து இறந்து விடும். அதோடு திருடனுக் கும் கெடு தொடங்கி விடும் என கண்ணில் அனல் தெறிக்க கூறுகிறார்கள் முனியின் பக்தர்கள்.‘முதலில் சாதாரணமாய் வாந்தி, மயக்கத்தில் ஆரம்பிக்கும். அப்போதே தவறை உணர்ந்து திருட்டுபொருளை சம்பந்தப்பட்டவர் கண் ணில் படுமாறு வைத்து விட்டுச் சென்றால் உயிர் தப்பும். இல்லையென்றால் சாதாரண வாந்தி ரத்த வாந்தியாகும். பேதி சீதமாகும். அதன் பிறகும் திருந்தாதவர்களை முனி சும்மா விடுவதில்லை. துடி துடித்து இறந்த சேவல் போல கொள்ளையனும் துடித்து சாவான்’ என்பது சேவலை தொங்கவிட்டவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. உதாரணத்துக்கு சில சம்பவங்க ளையும் சொல்கிறார்கள்.இப்பகுதியில் திருடர்கள் மர்மமாய் இறப்பது தொடர்ந்து வருகிறதாம். சேவலை தூக்கில் போட்ட சில மணி நேரங்களிலேயே திருடு போன பொருள் எவ்வித சேதாரமுமின்றி கிடைத்த சம்பவங்கள் இங்கு ஏராளம் என்கிறார்கள் இப்பகுதியினர். 15 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள பி.எல். தண்டா பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது பட்டி மாடுகளில் ஒன்று திடீரென மாயமாகி விட்டது. 10 நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து முனியப்பன் கோயிலுக்கு வந்து சேவலைக்கில் போட்டு வேண்டிச் சென்றார். ஊர் போன மறுநாளே அவரது மாடு வீட்டு வாசலில் நின்றதாம். இதுபோல் பொருள் உடனடியாக கிடைத்தவர்கள் கோயிலுக்கு வந்து கோழி பலியிட்டு அன்னதானம் வழங்குவார்கள். முனியப்பன் கோயிலில் தினமும் யாராவது ஒருவர் விருந்து வைப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. |
9 | 1/6/2011 2:56:51 PM | மர்மம் | பவுர்ணமி ஜாமத்தில் மாயமான கர்ப்பிணி | அமானுஷ்யமான சம்பவங்கள் நம்மை சுற்றி ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. புருவம் உயர சொல்லப்படும் விஷயங் களை கேட்கும் போது நமக்கும் திகில் தொற்றிக் கொள்ளும். அப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காட்டில் 80 ஆண்டு களுக்கு முன்பு நடந்த மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.பனங்காட்டை சேர்ந்த சடையப்ப பூசாரி, அமராவதி நதிக்கரை முனியப்பன் கோயிலில் பூஜை செய்து, உடுக்கை அடித்து பாட ஆரம்பித்தால், முனிகள் அவருக்குள் இறங்கி ஆட்டம் போட துவங்கும். அவர் ஏவும் வேலைகளை உடனே செய்து முடிக்கும் என் பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.அன்றைய காலக்கட்டத்தில் அமராவதி நதிக்கரையின் இரு கரைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விவசாய பூமி. முப்போக மும் நெல் விளையும். அமாவாசைக்கு 10 நாட்களுக்கு பிறகு துவங்கி, பவுர்ணமி வரை நிலா வெளிச்சத்தில் வயலில் பணிகள் நடக் கும். ஒருமுறை விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் பனங்காடு விவசாயிகள் கஷ்டப்பட்டனர். பணிகளை முடிக்க முடி யுமா என்று விவசாயிகளுக்கு சந்தேகம்.சடையப்ப பூசாரியிடம் குறி கேட்டனர். ‘நாற்று நடவு முடித்து தருவது என் பொறுப்பு’ என்று வாக்கு கொடுத்தார். தலைச்சன் பிள் ளையை சுமக்கும் கர்ப்பிணி ஒருத்தியை பவுர்ணமி இரவு நடவுக்கு அனுப்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். சந்தோஷமாக ஒப்புக்கொண்டாள் ஆலடிக்களத்தை சேர்ந்த அய்யாவு மனைவி செல்வி. பவுர்ணமி நாள் வந்தது. பகலில் நாற்றங்கால்களில் இருந்த நெல் நாற்றுகளை, கட்டுகளாக கட்டி வயல்களில் நடவுக்கு போட்டனர். நிலவு மெல்ல மேலெழுந்து உலா வரத் துவங்கியது. முனியப்பன் கோயிலில் பூஜையும் தொடங்கியது. நடு ஜாமம் வந்ததும் சடை யப்ப பூசாரி ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்கு வந்தார். அங்கே செல்விக்கு மஞ்சள் பூசி தனியாக அமைக்கப்பட்டிருந்த மண் மேட் டில் உட்கார வைத்திருந்தனர். உடுக்கை எடுத்து அடித்தபடியே பேச ஆரம்பித்தார் பூசாரி. “வயல்ல முனியோட சேந்து, செல்வி நாத்து நடுறத யார் பாத்தாலும் உசிருக்கு ஆபத்து’’ என்று எச்சரித்தார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு பயம் தொற்றி கொண்டது.தலைவிரி கோலமாய் ஆடிக்கொண்டிருந்த பூசாரி திடீரென உரத்த குரலில் “போ தாயி... போ. முனிகளோடு சேர்ந்து போயி... நாத்து நடவு செய்யி. போ தாயி எந்திருச்சுப் போ..’’ என்று கட்டளையிட்டார். அமைதியாக அமர்ந்திருந்த செல்வி ஆவேசமாக எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவள் போன பாதையைக் கூட, பயத்தில் யாரும் திரும்பி பார்க்கவில்லை. செல்வியை நடவுக்கு அனுப்பிவி ட்டு கோயிலுக்குள் போன பூசாரி, பொழுது விடிந்துதான் வெளியே வந்தார். கோயில் வாசலில் மக்கள் காத்திருந்தார்கள். ‘‘நாத்து நடவு முடிஞ்சிடிச்சு. வாங்க போய் பார்க்கலாம்’’ என்றார். வயலில் அளவு மாறா மல் நாற்று நடப்பட்டிருந்தது. செல்வி? காணோம். ஊர் முழுக்க தேடியும் அவளைப் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. செல்வியை முனி காவு வாங்கி விட்ட தாக ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆவேசம் வந்தவராய் பூசாரி சொன்னார்.. ‘‘என்னிக்காச்சும் ஒருநாள் அவ வந்துருவா... வர லேனா இயற்கையோட கலந்துட்டானு அர்த்தம்’’ பூதகமாய் சொல்லி முற்றுபுள்ளி வைத்தார். சம்பவம் நடந்து 80 ஆண்டுகள் ஆகி விட்டது. செல்வி என்ன ஆனாள் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது. செல்வி நாற்று நட்ட வயல் இன்றும் ‘புள்ளத்தாச்சி வயல்’ என மண்மேடாக கிடக்கிறது. |
10 | 1/6/2011 3:02:00 PM | இந்தியா | காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் 102 கேள்விகள் | காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நடத்திய சிபிஐ போட்டி ஏற்பாடு குழுவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியின் மும்பை, புனே மற்றும் டெல்லி வீடுகளில் கடந்த மாதம் 24ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஊழல் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமல் இருக்க ரூ.4 கோடி கொடுக்க வேண்டும் எனவும் மர்மநபர் ஒருவர் சுரேஷ் கல்மாடிக்கு எழுதிய மிரட்டல் கடிதத்தையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.‘மிரட்டல் கடிதம் எழுதியவர் யாரென தெரியாது’ என்று சுரேஷ் கல்மாடி கூறினார். இந்த சோதனையை தொடர்ந்து சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு கல்மாடி மறுப்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை சிபிஐ அலுவலகத்துக்கு சுரேஷ் கல்மாடி வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதுவரை சிக்கிய ஆதாரங்கள் அடிப்படையில் 102 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் ஒன்றை சிபிஐ அதிகாரிகள் தயாரித்திருந்தனர். இந்தப் பட்டியலின்படி கல்மாடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. |
11 | 1/6/2011 3:08:15 PM | மர்மம் | மச்சுபிச்சு மலை ரகசியம் | தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிம றிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்கு இடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார். பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3 புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தி பச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரி கள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572&ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவி ல்லை. இதனால் அது சேதப்படாமல் தப்பியது.நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்த இன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டு வதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட் டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து, பின்னர் பழைய நிலைக்கே தி ரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கத வு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள் ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக் கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப் பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங் களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலை களிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள் ளது.இந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பல நூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது. 1911&ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983&ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித் தது. 2007&ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை 7 உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது. மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்க ழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதி யில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதி யில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய எ ன்ன அவசியம் வந்தது? மச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது. |
12 | 1/6/2011 3:09:20 PM | மர்மம் | ரத்த பலி வாங்கும் விபரீத ஆவி! | கடந்த 18ம் தேதி சாயங்காலம்... அடைமழையை கிழித்தபடி ஒரு சுமோ புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி பறந்து கொண்டி ருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்த உறவினர்களை புதுவையில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு தி ரும்பிக்கொண்டிருந்தார்கள் அதில் பயணித்தவர்கள். மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி காருக்குள் நிம்மதியாக சாய்ந்திருந்தனர். அந்த நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை. கெங்கராயபாளையத்தை தாண்டி குடுமியாங்குப்பம் என்ற இடத்தை கடந்தபோது அது காணாமல் போனது. எதிரே வந்த வேன் அவர்களின் காரை பதம் பார்த்ததில் காரோடு சேர்ந்து 4 பேர் நசுங்கினார்கள். கீழே குதிக்க முயன்ற டிரைவரும் உயிர் தப்பவில்லை. பின்னால் வந்த லாரி அவர் உயிரை பறித்துக் கொண்டு பறந்து விட்டது. வேனில் இருந்தவர்களுக்கும் ரத்தம் சொட்ட சொட்ட காயம். இது போன்ற விபத்து நடப்பது சகஜம் தானே என்றால் பதறியடித்து மறுக்கிறார்கள் குடுமியாங்குப்பம் வாசிகள். ‘ஏற்கனவே இந்த ரோட்டில் ஏகப்பட்ட விபத்துகள் நடந்திருக்கிறது. அதிலும் குறிப்பா குடுமியாங்குப்பம் பகுதி ரோட்டில் அடிக்கடி விபத்து நடந்து உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உயிர்கள் காவு வாங்கப்படுவது போல விபத்துகள் நடப்பதால் அந்த இடத்தை கடக்கவே பயமாக இருக்கிறது’ என்று பீதியுடன் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள். இங்க ரோட்டோரத்தில இருக்கிற ஆஞ்சநேயர் கோயில் மேலேயே மூணு தடவை வண்டிகள் மோதி சேதமாயிருக்கிறது. ஒரு வேளை சாமி குத்தமா இருக்குமோ என சிலர் அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி ஊர் பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது பீதியுடன் அவர் கூறியது, ‘சில வருடங்களாக கெங்கராயபாளையத்தில இருந்து குடுமியாங்குப்பம் வரையுள்ள 2 கிலோ மீட்டர் தூரமுள்ள ரோட்டில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏதாவது காத்து, கருப்போட விளையாட்டா இருக்குமோனு ஊர்க்காரங்கள்லாம் பயத்தில இருக்காங்க. குறிப்பிட்ட இடத்தில மட்டும் அடிக்கடி உயிர்கள் காவு வாங்கப்படுவதை பாத்தா... அத நம்பாமவும் இருக்க முடியல. ஒவ்வொரு முறையும் நாங்க இந்த பகுதிய கடக்கும் போதும் சாமிய வேண்டிக்கிட்டுதான் போவோம்‘.அந்த பகுதியில கெட்ட ஆவிங்க நடமாட்டம் இருக்கு. அதுதான் விபத்த நடக்க வச்சு ரத்தப்பலி வாங்குது என்று பலர் அச்சத்து டன் கூறுகிறார்கள். டிரைவர்களிடம் இதுபற்றி கேட்ட போது, ‘மற்ற பகுதியில செல்லும் போது எதுவும் தெரியறதில்ல. ஆனா கெங் கராயபாளையத்தை தாண்டி குடுமியாங்குப்பம் வரைக்கும் கடக்கும்போது மட்டும் எங்களை அறியாமல் ஒரு வித படபடப்பு வந்து விடுகிறது. ரோடு நல்லா இருந்தாலும், பெரிய அளவில் வளைவுகள் இல்லாவிட்டாலும் எதிரே வரும் வாகனம் மீது மோதி விபத்து நடந்து விடுகிறது. இல்லாவிட்டால் யாராவது ரோட்டை கடக்கும் போது அடிபடறாங்க. எங்களுக்கே என்னன்னு சொல்ல தெரி யல... தினமும் உயிரை கையில பிடிச்சிட்டுத்தான் போக வேண்டியிருக்கு’ என்று பயத்துடன் சொல்கிறார்கள். |
13 | 1/6/2011 3:11:00 PM | மர்மம் | உலகப் பேரழகியின் மர்ம மரணம் | வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி கள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12&ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18&வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13&ம் தால மியை திருமணம் செய்துகொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இ ருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள். இந்நிலையில் மர்மமான முறையில் 13&ம் தாலமி கொல்லப்பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது. அதன் பின் னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயி ருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார். ஆட்சியை பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதி களுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தை கைப் பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரி கள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண் டாள்.இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவ ளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர். சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மர ணம் நிகழ்வதில்லை.சற்று நேர மரண போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோ பாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபி யம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை. |
14 | 1/6/2011 3:17:03 PM | மர்மம் | அமாவாசை இருட்டில் பேய் விரட்டும் முனி | சேலம் - தர்மபுரி எல்லையில் இருக்கிறது தொப்பூர் கிராமம். இங்குள்ள பாலத்தின் அருகே பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. முறுக்கு மீசையுடன் 15 அடி உயரத்தில் பார்ப்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விதமாய் அருகருகே 2 முனியப்பன் சிலைகள். வலது புற முனியப்பன், கைகளில் ஆள் உயர அரிவாளுடனும், குதிரையை சங்கிலியால் கட்டி வைத்தபடி மிரள வைக்கி றார். மற்றொரு முனியப்பன் 4 அடி உயர கத்தியுடன் காட்சி தருகிறார். இந்த 2 முனியப்பன் சிலைக்கு கீழே பழமை வாய்ந்த மற்றொரு முனியப்பன் சுவாமி சிலையும் இருக்கிறது. கோயிலை சுற்றி புங்க மரம், வேப்பமரம் உள்ளன. இங்குதான் ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டு பூஜை நடத்தப்படுகிறது. பில்லி சூனியம் அகற்றுவது, பேயை விரட்டுவது, திருட்டு போன பொருளை கண்டுபிடிப்பது, தொழிலை பெருக்குவது ஆகியவைதான் இந்த கோயிலின் சிறப்பம்சம்.பெரும்பாலும் அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சேலம், தர்மபுரி, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து பேய், பிசாசு ஓட்டுவதற்கும், காத்து கருப்பு அண்டாமல் இருக்கவும், பில்லி, சூனியத்தை அகற்றவும் நிறைய பேர் வருகிறார்கள். அமாவாசை கும்மிருட்டில் பேயை, முனி விரட்டும் காட்சி காண்பவர்கள் மிரண்டு தான் போகிறார்கள். முனியப்பன் அருள் வந்து, உடுக்கை ஒலியுடன் பேயை விரட்ட ஆடியபடி வரும் பூசாரியின் ஆக்ரோஷம் நடுநடுங்க வைத்து விடுகிறது.அதே வேகத்தில பேய் பிடித்து ஆடுபவர்களின் உச்சி மண்டை தலை முடியை முடிச்சு போட்டு பேயை ஓட்டும் காட்சி திகில் அடையச் செய்யும். பேய் மீண்டும் அண்டாமல் இருக்க, முடியை வெட்டி பூசாரி நாலாபுறமும் ஆவேசமாய் வீசி எறிகிறார். அடுத்த நிமிடமே பேய் பிடித்து ஆடியவர் சுருண்டு விழுகிறார். பிடித்த பேய் விலகி ஓடியதை போல இயல்பாய் மாறும் காட்சிகள் அமாவாசை இருட்டில் அரங்கேறுகின்றன. அகோர பேய்களையும் இந்த முனி விரட்டி விடும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கை. பேய் ஓட்டும் போதும், பில்லி, சூனியம் எடுக்கும் போதும், கோழிகளை கோயில் மரத்தில், கழுத்தில் கயிறு கட்டி தூக்கிலிடுவது போல தொங்க விடுகின்றனர். கோழி தானாக இறந்ததும், பூசாரி அதனை பிய்த்து நாலாபுறமும் வீசுகிறார். வீசப்பட்ட கோழியை யாரும் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் மீண்டும் பேய் பிடித்துவிடுமாம். அது முனியின் கோபம் என்று இந்த பகுதி மக்கள் நம்புகி றார்கள். இந்த முனி கடும் கோபக்காரராம். தன்னை யாராவது அலட்சியமாக பேசினால் ரெண்டில் ஒன்று பார்த்து விடுவார் என்று பதறுகி றார்கள் கிராம மக்கள். இந்த வழியாக செல்லும் லாரி டிரைவர்கள் அனைவரும், தினசரி முனியப்பன் சுவாமியை வழிபட்டுதான் செல்கிறார்கள். அவசர கதியில் வழிபடாமல் சென்ற லாரிகள் டயர் வெடித்து பயணம் தடைப்பட்டு விடுகிறது என்கிறார்கள் டிரை வர்கள். முனியை வழிபட்டு சென்றால் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். முனியப்ப சுவாமி ரொம்ப சக்தி வாய்ந்தவர். அதுக்கு இங்க பேய் ஓட்ட வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தான் சாட்சி என்கிறார் பூசாரி அன்பழகன். |
15 | 1/6/2011 3:17:57 PM | மர்மம் | நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்! | நியூயார்க் துறைமுகத்தில் இருந்து மேரி செலஸ்டி என்ற சொகுசு கப்பல் கானா நோக்கி நவம்பர் மாதம் புறப்பட்டது. ஐரோப்பிய கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4&ம் தேதி அட்லான்டிக் கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள் பகுதி வழியாக காற்றை கிழித்துக்கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.அந்த வழியாக வந்த டே கிரேஷியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் சென்றவர்கள் நடுக்கடலில் மற்றொரு கப்பல் செல்வதை பார்த்து மகிழ்ந்தனர். மேரி செலஸ்டி கப்பலில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றனர். இதற்காக பல்வேறு சிக்னல்கள் கொடுத்தனர். ஆனால், எந்த பதிலும் இல்லை. கப்பலை நெருங்கி வந்து சத்தம் போட்டனர். அப்போதும், அந்த கப்பலில் எந்த சலனமும் இல்லை. இதனால், சிறு படகுகள் உதவியுடன் மேரி செலஸ்டி கப்பலில் ஏறி உள்ளே சென்றனர்.கப்பலில் விளக்குகள் ஜொலித்துக் கொண்டிருந்தன. உணவு பரிமாறும் கூடத்தில் காலை உணவு தயாராக இருந்தது. துவைக்கப்பட்ட துணிகள் கொடிகளில் உலர்த்தப்பட்டிருந்தன. பாதுகாப்பான அறைகளிலும் ஏராளமான உணவுப்பொருட்கள். தயார் நிலையில் உயிர் காக்கும் படகுகள் அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. துடைத்துவிட்டதுபோல கப்பல் பளிச்சென்று இருந்தது.தளம்தளமாக சென்று தேடினர். ஆனால், ஒருவரைக்கூட காணமுடியவில்லை. எல்லாரும் எங்கே போனார்கள்? பிரிட்டிஷ் பயணி களுக்கு ஆச்சரியம். மேல் தளத்தில் ஆரம்பித்து கீழ் தளம் வரை பாத்ரூமைக்கூட விடாமல் தேடினர். ம்ஹூம். ஆள்அரவமே இல் லை.‘இந்த கப்பல் விபத்தில் சிக்கியிருக்கலாமோ’ என்று ஒருவர் சொன்னார். விபத்தென்றால் சிறு சேதமாவது இருக்க வேண்டும். மேலும், ஒன்றிரண்டு பேராவது மிஞ்சியிருப்பார்கள். அதுவும் இல்லை. போராட்டம், சண்டை நடந்ததற்கான அறிகுறியும் இல்லை. கொள்ளை நடந்ததுபோலவும் தெரியவில்லை. எல்லா பொருட்களும் அப்படியே இருக்கின்றன. உணவுகள் தயாராக உள்ளன. தயாரித்தவர்கள் யார் எனத் தெரியவில்லை. கப்பலில் இருந்தவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றால் உயிர்காக்கும் படகுகள் அனைத்தும் பத்திர மாக உள்ளன?என்னதான் நடந்தது இந்த கப்பலில்? யாருமே இல்லாமல் கப்பல் மட்டும் பயணத்தை அமைதியாக தொடர்ந்தபடி இருந்தது. பிரிட் டிஷ் பயணிகளுக்கு பீதி அதிகரித்தது. பேய் கப்பலாக இருக்குமோ? சந்தேகத்துடன் இதயத் துடிப்பும் பலமடங்கு அதிகரித்தது. அலறி அடித்துக்கொண்டு கப்பலை விட்டு இறங்க முயன்றனர்.திடீரென ஏதோ உருண்டு விழும் சத்தம் கீழ் தளத்தில் கேட்டது. பயணிகள் யாரும் நகரவில்லை. பதற்றத்துடன் சில நொடிகள் கடந்த பிறகு, சாம்பல் நிற பூனை தாவி ஓடி வந்தது. பிரிட்டிஷ் மக்களை பொறுத்தவரை, கப்பல் பயணத்தின்போது பூனையை காண் பது நல்ல சகுனம். அந்த சூழ்நிலையில் அங்கு பூனையை பார்த்ததும் அவர்களுக்கு சற்று நிம்மதி. அடுத்த சந்தேகம்.. யாருமில்லாத கப்பலில் பூனை எப்படி தனியாக இருக்கிறது? ‘இதையெல்லாம் சிந்திக்க நேரமில்லை. தாமதித்தால் நாமும் மாயமாகக்கூடும். ஓடு, தப்பி ஓடு’ என்றபடி அவசர அவசரமாக மேரி செலஸ்டி கப்பலை விட்டு வெளியேறினர்.பேய் கப்பல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. சம்பவம் நடந்தது 1872&ல். 138 ஆண்டுகள் ஓடிவிட்டன. கப்பலில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற விபரம் இதுநாள் வரை தெரியவில்லை. கப்பல் மர்மங்கள் வரலாற்றில் இதுவும் இடம் பிடித்திருக்கிறது. |
16 | 1/6/2011 3:19:43 PM | மர்மம் | புதையலை காவல் காக்கும் 7 பூதம் | ‘டோய்... தப்பித்தவறிகூட அந்த குகை பக்கம் போயிடாத. அங்க பூதம் இருக்கு. ஒண்ணு ரெண்டில்ல, ஏழு பூதமாக்கும். புதயல அது தான் காப்பாத்துது. யாராவது எடுக்கப்போனா சும்மா உடாது. அலாக்கா தூக்கி விழுங்கிப்புடும்’’ & இப்படித்தான் சின்னஞ்சிறுசுகளி டம் பூச்சாண்டி காட்டி வருகின்றனர் கிராமத்து பெரிசுகள்.காலப்போக்கில் காற்றில் பரவும் இந்த தகவலுக்கு புது மெருகு பூசி ஆளாளுக்கு கூட்டியோ, குறைத்தோ வெவ்வேறு கதைகள் சொல் கின்றனர். புதையலை காவல் காக்கும் பூதம் பற்றிய கிலி அப்பகுதியில் பலரிடம் காணப்படுகிறது. அவர்கள் சொல்லும் குகைக்குள் தங்கமும் வைரமும் எப்படி வந்தது? அதிர்ச்சிகரமான பதில்களும், ஆச்சரிய தகவல்களும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளது கோட்டைக்கரடு. இந்த கரட்டின் மீது திப்பு சுல் தான் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. எங்கும் அடர்ந்த புதர்கள். மொட்டையாக, வழுக்கையாக, கூர்ப்பான தாக.. என பல வடிவில் பாறைகள். இங்குதான் குகைக்குள் 7 கொப்பரைகள் அதாவது 7 அண்டாக்கள் நிறைய புதையல் இருப்பதாக சொல்கின்றனர் மக்கள்.‘புதையல் எடுக்கப் போனா, பூதம் விழுங்கிடும்’ என்ற பயமுறுத்தலையும் மீறி சிலர் நெஞ்சை நிமிர்த்தி குகைக்குள் சென்றிருக்கின்ற னர். கும்மிருட்டாக இருக்கும் குகையில் பாதை தெரிவதற்காகவும், எதிரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப் பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம். குகைக்குள் நுழைந்து சில அடி தூரம் சென்றதுமே தீப்பந்தம் படா ரென்று அணைந்திருக்கிறது. தைரியமாய் உள்ளே போன வீராப்பு ஆசாமிகள் குலைநடுங்கிப்போய் குகையை விட்டு தலைதெறிக்க ஓடி வந்த சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது.நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான காரணங்கள், பழங்கதைகளை விவரிக்கின்றனர் மக்கள்... ஏழு பூதத்தின் வேலைதான் அது. அதுனால முடியாதது ஒண்ணுமே இல்ல. புதையல் தேடிப் போனவங்க உசிரோடு திரும்பினதா சரித்திரம் இல்ல. அது.. வெள்ளைக்கார ஆட்சி இந்தியாவுல காலூன்றி, வேரூன்றின நேரம்.. அப்ப மேட்டூர் பகுதி திப்பு சுல்தான் ஆளுகைல இருந்திச்சு. தன்னை பாதுகாத்துக்க கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை கட்டினான். எதிரிகள் நெருங்கின சூழ்நிலை யில, தப்பி தலைமறைவாகி பதுங்கிக்கொள்ள இந்த கோட்டைதான் அவனுக்கு பயன்பட்டது. கோட்டையூரில் இருந்து இது 15 கி.மீ. தூரத்துல இருக்கு.புதையலை பூதம் காவல் காக்கும் குகையும் இங்கதான் இருக்கு. கோட்டைக்கரட்டில் இருந்து கோட்டையூருக்கு ரகசிய சுரங்கம் இ ருக்கு. பிரிட்டிஷ் படையிடம் இருந்து தப்பிய திப்பு சுல்தான் படை வீரர்கள் இது வழியாத்தான் தப்பினாங்க.இங்குள்ள குகையிலதான் 7 கொப்பரை நிறைய தங்கம், வைரம், வைடூரிய நகைகள் இருக்கு. அதை காலம் காலமா ஏழு பூதம்தான் காவல் காக்குது. யாரையும் பூதம் உள்ள விடாது. மீறிப் போனவங்க உசிரோட திரும்பினதா சரித்திரம் இல்ல. 20 வருஷம் முன்னாடி வரை, குகைக்குள்ள 10 அடி தூரமாவது போய்ட்டு வர்ற அளவுக்கு இருக்கும். இப்ப நுழையக்கூட முடியாத அளவுக்கு புதர் மண்டியி ருக்கு’’ என்கின்றனர் மக்கள்.சிலர் தங்கள் அனுபவத்தை பீதி குறையாமல் விவரிக்கின்றனர்.. ‘‘நான்கூட குகைக்கு போயிருக்கேன். தீப்பந்தம் அணையிறாப்புல இ ருந்திச்சு. உடனே வெளியே வந்துட்டேன். அந்த கண நேர வெளிச்சத்தில உள்ளே பாத்தேன். குகை முழுக்க மனித எலும்புக்கூடு குவிஞ்சு கிடந்தது. புதையல் தேடிப் போனவங்களை பூதம் அலாக்கா தூக்கி விழுங்கி எலும்புக்கூட்டை அங்கயே வீசியிருக்கு. மனு ஷங்க பாச்சா பூதத்துக்கிட்ட பலிக்காது’’ என்கின்றனர்.ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு இருக்கிறது குகைப் பாதை. மலை உச்சியில் இருந்து மேட்டூர் அணை சுவர் வரை கற்கள் அ டுக்கப்பட்டதற்கான அடையாளம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தண்ணீர் வற்றும் நேரத்தில் மட்டும் இது வெளியே தெரிகி றது.ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது. |
17 | 1/6/2011 3:23:57 PM | மர்மம் | காவிரி கரையில் கரை ஒதுங்கும் உடல்கள்: சூறாவளியாய் சுழன்று வரும் ஆவிகள் | மீன்கள் கூட்டமாக துள்ளுவதுபோல் சத்தம்... வலை விரிச்சா எதுவும் சிக்குவதில்லை. பரிசலில் பலர் மீன் பிடிப்பதுபோல் தெரிகி றது... பக்கத்தில் போனா ஆளே இருக்க மாட்டாங்க. காவிரி ஆற்றுப் பகுதியில்தான் இந்த மாயாஜாலம். அங்கே என்ன நடக்குது. ஆத்துல மீன் மாதிரி ஓடுறது யாரு, அரூபமாக பரிசலில் மீன் பிடிப்பது யாரு... இந்த கேள்வியை யாரிடம் கேட்டாலும், ‘எல்லாம் ஆவிகள் செய்யற சேட்டைதான்’ என்கின்றனர். பெத்து வளர்த்த பிள்ளைங்க வயதானதால விரட்டியடிச்சிட்டாங்க, காதலுக்கு வீட்ல எதிர்ப்பு, கள்ளக்காதல் அம்பலமானதால் அவ மானம்.. இப்படி பல விஷயங்களால் மனம் நொந்தவர்கள் நிம்மதி தேடிச் செல்லும் இடம் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணை. காவிரி ஆறுதான் அவர்களுக்கு அடைக்கலம். விரக்தியோடு வந்து விழுபவர்களை கட்டித்தழுவி விழுங்கிவிடுகிறது ஆற்று நீர்.தானாக விழுந்து உயிரை மாய்ப்பவர்கள் ஒரு பக்கம். போதையில் ஆற்றில் இறங்குபவர்கள், கவனக் குறைவாக குளிப்பவர்கள், பரிச லில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுபவர்கள் என்ற வகையிலும் மரணக் கணக்கு அதிகரிக்கிறது. இவர்களது உடல் பல மைல் தூரம் அடித்துச் செல்லப்பட்டு, சேலம், தர்மபுரி மாவட்ட எல்லைகளான கோட்டையூர், ஒட்டனூர், பண்ணவாடி, நாகமரை, ஏமனூர் ஆகிய பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன. அற்ப ஆயுளில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் பலரது உடல் கரையில் ஒதுங்கி அழுகி, எலும்புக்கூடாகி கிடக்கிறது. ஆனால், அவர்களது ஆவி மட்டும் காவிரிக் கரை யையே சுற்றிச்சுற்றி வருகிறதாம். சொந்த, பந்தங்களை தேடி கரையோர கிராமங்களுக்கும் ஆவிகள் விசிட் அடிப்பதாக சொல்கின்ற னர். வழியில் யாராவது சிக்கிக்கொண்டால் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. பல உயிர்களை பலி வாங்கி, தனக்கு துணை சேர்த் துக் கொள்கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டையூர் பரிசல் துறை. மீனவ குடும்பம் ஒன்று பரிசலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது. பச்சை குழந்தையுடன் பெண்ணும் வலை வீசினார். உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு சத்தம். கண் மூடி கண் திறப்பதற்குள் சூறாவளியாய் வருகிறது காற்று. அவ்வளவுதான் பரிசல் தலைகுப்புற மிதந்தது. அதிலிருந்த பெண்ணும், அவளது கைக் குழந்தையும் நீரில் பிணமாக மிதந்தனர். சுழன்றடித்த சூறாவளியாய் வந்தது வேறு எதுவும் இல்லை.. ஆவிகளின் அட்டகாசம்தான் என அஞ்சியபடி சொல்கிறார்கள் மீனவர் கள். இதனால், பெரும்பாலும் உச்சிவெயில் நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. மீனவர்கள், கரையோர விவசாயிகளுக்கு மதிய உணவு கொடுக்க வரும் பெண்களையும் ஆவிகள் பிடித்து பாடாய்படுத்துகிறதாம்.சடலங்கள் அதிகம் ஒதுங்கும் கரையோர பகுதிகளில் அடிக்கடி சலங்கை ஒலி கேட்பதாகவும், பெண்கள் தங்களை ஆசையாய் அழைப்பது போன்று இருப்பதாகவும் மீனவர்கள் பீதியுடன் கூறுகின்றனர். கரையோர கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பெண்கள் பேய் பிடித்த நிலையில் கோயில்களுக்கும், மந்திவாதிகளை தேடியும் படையெடுத்து வருகின்றனர். ஆவி பீதியால் கிராம மக்கள், மீன வர்களின் கையிலும், இடுப்பிலும் டஜன் கணக்கில் மந்திரரித்த தாயத்துகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆவிகளின் அட்டகாசம் அதிகமாகி விடுகிறதாம். இதனால் அந்த நாட்களில் மீனவர்களும் விவ சாயிகளும் தொழிலுக்கு லீவு விட்டு விடுகின்றனர். அதையும் மீறி மீன் பிடிக்க சென்றவர்களில் சிலர் திரும்பி வரவில்லை என்கின்ற னர். ‘‘நடுராத்திரியில ஊரு பக்கமா ஆவிங்க வந்து போகும். அப்ப நாய்ங்க எல்லாம் ஒரே நேரத்துல ஊளையிடும். சில நேரத்துல ஊரே மயான அமைதியில இருக்கும். அப்ப, வினோதமா ஒரு சத்தம் கேட்கும். பல பேரு என்னென்னமோ பூஜையெல்லாம் செஞ்சி பாத் துட்டாங்க. ஆனா, ஆவிங்க அடங்குனா மாதிரி தெரியல’’ என்று பீதி கிளப்புகிறார் ஒரு பெரியவர்.பண்ணவாடி பரிசல் துறையில் மீன் வறுத்து விற்கும் 70 வயது லட்சுமி பாட்டி சொல்றாங்க.. வாழவேண்டிய வயசுல உசுர விடுறவங்களோட ஆவி இந்தப் பக்கம் அதிகமா சுத்திட்டுதான் இருக்கு. ஒரு நாள் வேலமங்கலம் கரட் டுப் பகுதியில புருஷனும் பொஞ்சாதியும் மீன் பிடிச்சிட்டு இருந்தாங்க. திடீர்னு மழையும் காத்தும் சேந்து வந்துடுச்சி. பரிசல பாறை மறைவுல நிறுத்திட்டு திரும்பியிருக்காங்க. கரையில பரக், பரக்குனு சத்தம் கேட்டிருக்கு. உத்து பாத்தப்ப குழந்த மாதிரி ஒரு உருவம் தெரிஞ்சிருக்கு. ரெண்டு பேருக்கும் தூக்கி வாரிப்போட்டுடுச்சாம். கரைக்கு ஓடிவந்து, அங்க நிறுத்தியிருந்த வண்டிய எடுத்துக்கிட்டு புறப்பட்டாங்க. அப்ப அந்த குழந்தை உருவம் வானத்துக்கும், பூமிக்குமா எழுந்து நின்னுச்சாம். உசுரு தப்பி வூட்டுக்கு வந்தவங்கதான். அப்புறம் குளிர்காய்ச்ச வந்து படுத்த படுக்கையாயிட்டாங்க. பாடம் போட்டு, எந்திரம் கட்டி, மருத்துவம் பார்த்து அவங்க மீண்டு வர்றதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சி... படபடப்பு நிற்காமல் சொல்லி முடித்தார் பாட்டி. ஆவி பீதியில் இன்னமும் பல கிராமங்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. |
18 | 1/6/2011 3:25:59 PM | மர்மம் | இருட்டில் துரத்திய வேட்டி உருவம் | ‘‘ஏய்... மணி பத்தாச்சு. த்ரீஃபேஸ் கரண்டு வந்திருக்கும். தோப்புக்கு போய் மோட்டார் போட்டு வந்துரலாம். துணைக்கு வர்றியா?’’ நண்பருடன் கிளம்பினார் புதுவை குருவிநத்தத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயது வாலிபர். கல்யாணம் ஆக வில்லை. துணிச்சல்காரர். மறக்காமல் டார்ச் லைட்டையும் எடுத்துக்கொண்டார்.இருட்டென்றால் அப்படி ஒரு இருட்டு. டார்ச் லைட்டை அடித்தபடியே வயல் வரப்பில் நடந்து சென்றார்கள். ஆளை மறைக்கும் அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்திருந்ததால் அதன் நடுவே புகுந்து சென்றார்கள். 20 நிமிஷ நேர நடைக்கு பிறகு, தென்னந்தோப் புக்கு வந்து சேர்ந்தனர். அங்கு மோட்டார் கொட்டகை மேல் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது குண்டு பல்பு.கொட்டகைக்கு போய் மோட்டாரை போட்டார் ராஜா. பட்டென்று சத்தம். பீஸ் போய்விட்டது. ஒற்றை பல்பும் அணைந்ததில் கும்மிருட்டு பயமுறுத்தியது.பீஸை போடலாம் என்றால் டார்ச் மங்க ஆரம்பித்தது. திருகி, தட்டிப் பார்த்தும் பயனில்லை. என்ன செய்யலாம் என்று இருவரும் யோசனையில் இருந்த நேரத்தில்.. திடீரென படபடவென்று சத்தம். பக்கத்தில் தரைக் கிணற்றில் உள்ள மோட்டார் கொட்டகை தகரம் தடதடவென்று ஆடிக்கொண் டிருந்தது. இந்த நேரத்தில் என்ன சத்தம்..? ராஜா மெதுவாக எட்டிப் பார்த்தார். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் வெள்ளை வேட்டி காற்றில் பறப்பதுபோல இருந்தது.தைரியம் உள்ளவர்தான் என்றாலும் வியர்க்க ஆரம்பித்தது. நண்பரை கூப்பிட்டார். ‘‘அங்கு என்னமோ அசையுது பாரு’’. நண்பர் பார்த்தார். ராஜாவும் சேர்ந்து பார்த்தார். வேட்டி அசைந்த இடத்தில் இப்போது ஒரு உருவம் தெரிந்தது. இருவரையும் பீதி பற்றிக் கொண்டது. உடல் வெடவெடக்க ஆரம்பித்தது. லப்டப் அதிகரித்தது. ‘‘வா போய்டலாம்’’ஓட்டமும் நடையுமாக புறப்பட்டார்கள். சிறிது தூரம் போனதும் நண்பருக்கு சந்தேகம். நின்று திரும்பிப் பார்த்தார். அவர்களுக்கு பின்னால் 10 அடி தூரத்தில் வேட்டி அசைந்துகொண்டிருந்தது. அப்போது ஓட்டம் பிடித்தவர்கள்தான்.. வயல், வரப்பு, மரவள்ளிக்கி ழங்கு தோட்டம், கரும்புக்காடு.. கண்மண் தெரியாமல் ஓடினார்கள். எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தார்கள். அது வரை அவர்களை துரத்திவந்த வேட்டி உருவம் ஊர் எல்லையோடு நின்றுவிட்டது.வீட்டுக்கு சென்று பல மணி நேரம் ஆன பிறகும், அவர்களது பதற்றம் அடங்கவில்லை. அன்று இரவு முழுவதும் இருவருக்கும் தூக் கமே வரவில்லை. கண்ணை சற்று மூடினாலும் கண்எதிரே வேட்டி அசைந்து கிலி ஏற்படுத்தியது. இந்த விஷயம் வெளியே தெரியவந்ததில்.. மறுநாள் ஊரே பரபரத்தது.ஊர் பெரியவர் ஒருவர் சொன்னார்.. ‘‘அந்த மோட்டார் கொட்டாயில 6 மாசம் முன்னாடி பஞ்சு வியாபாரி ஒருத்தரு, தொட்டியில கால்கழுவ போனப்போ, போஸ்ட் தாங்கிப்பிடிக்கும் எர்த் கம்பியில தலை பட்டுருச்சு. கரண்டு அடிச்சி அங்கேயே செத்துட்டாரு. அவருதான் ஆவியா சுத்துராரு’’ என்றார். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும் இப்போதும் அந்த தோப்பு பகுதி அப்பகுதியினருக்கு பீதியாகத்தான் இருக்கிறது.இன்னொருவர் வேறொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.. ‘‘40 வருஷம் முன்னாடி மயிலம் முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திரம் திருவிழாக்கு அப்பா, அம்மா கூட்டிட்டு போயிருந்தாங்க. எனக்கு 12 வயசு இருக்கும். ஊர் திரும்ப பஸ்சுக்கு காத்திருந்தோம். பஸ் கிடைக்காததால விழுப்புரம் போயி கடலூர் வந்தோம். கங்கணாங்குப்பம் பெண்ணையாத்து பக்கத்துல இறங்கி ஆத்தக் கடந்து போய்டலாம்னாங்க. தண்ணி இல்லை. அதனால, தைரியமா நடந்து வந்தோம், ஆத்து நடுவுல வந்தப்போ 60 அடி உசரம் கொண்ட 5 உருவங்க சுடுகாட்டை நோக்கி போயிட்டு இருந்தது. எல்லாரும் பயந்துட்டோம். உருவமெல்லாம் போனதுக்கு அப்புறம் வீடு வந்து சேர்ந்தோம். சுடுகாட்டு பகுதியில ஆவிங்க இப்படி கருப்பு உருவம் எடுத்து அலையும்னு பெரியவங்க சொன்னாங்க. பெண்ணையாத்துப்பக்கம் போனாலே கருப்பு உருவம்தான் ஞாபகம் வருது’’ என்றார். |
19 | 1/6/2011 3:26:40 PM | மர்மம் | கதிகலங்க வைக்கும் முனி ராசா | வீட்ல ஏதாவது திருட்டு போனா, எல்லாரும் விழுந்தடிச்சுட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாங்க. கண்டுபிடிக்கிறாங்களோ இல் லையோ, போலீஸ் மேல அவ்வளவு நம்பிக்கை. ஆனா, மதுரை மாவட்டம் சூரக்குண்டு பகுதி மக்களோட நம்பிக்கையே வேற. முனி கோயிலுக்கு போய் நேர்ந்துக்கிட்டு வந்தா போதும்.. காணாமல் போன பொருள், வீடு தேடி வந்துடுமாம்.‘‘இதெல்லாம் சாதாரணம் இல்ல சாமி... சக்தி வாய்ந்தது அந்த முனி கோயில். அங்க இருக்குற முனி ரொம்பத் துடியானது. தப்பு செஞ்சவங்களையும், தன்னை சீண்டுனவங்களையும் அது சும்மா விடாது...’’ என்கிறார்கள் கிராம மக்கள். மதுரை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து 28&வது கிலோ மீட்டரிலும், மேலூரில் இருந்து இரண்டாவது கிலோ மீட்டரிலும் இருக்கிறது முனி கோயில். சூரக்குண்டு, தெற்குவளவு பகுதியில் உள்ள சுமார் 500 தலைக்கட்டுக்கு பாத்தியப்பட்டது இந்தக் கோயில்.ஊரில் ஒரு தப்பு நடந்தாலும் முனி போட்டுப் பார்த்துடும் என்பது கிராம மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நிறைய சந்தர்ப் பங்களில் அவர்களின் நம்பிக்கை பலிக்கவும் செய்திருக்கிறது. இதுபற்றி கேட்டால் கதைகதையாக சொல்கிறார்கள்.கிராமத்தை சேர்ந்த முத்துராக்கு அம்மாளுக்கு சொந்தமான மாட்டை யாரோ ‘நகர்த்தி’ கொண்டு போய் விட்டார்களாம். எங்கு தேடி யும் கிடைக்காததால முனி கோயிலுக்கு போனார் முத்துராக்கு. ‘‘முனி ராசா... எம்மாட்டை எந்தக் காவாலிப் பயபுள்ளயோ திருடிபுட் டாம்யா. நீதான் ஒரு நியாயம் சொல்லணும். மாடு திரும்ப கெடச்சா... சேவல் வெட்டி போடறேன்..’’ என்று நேர்ந்துகிட்டு வீடு தி ரும்பினார்.ரெண்டாவது நாளில், கோயில் சுவரோரமாக செடி, கொடிய மேஞ்சுகிட்டு இருந்ததாம் காணாம போன மாடு. அதுக்கு பக்கத்தி லேயே திருடன் ரத்தம் கக்கி, மயங்கிக் கிடந்தானாம். விட்டாலாச்சார்யா பட பாணியில் நடந்த அதிசயத்தை பிரமிப்பாக சொல்கி றார் முத்துராக்கு. வடநாட்டு இன்ஜினியர் ஒருவரை முனி சரணடைய வைத்த சுவாரஸ்யத்தை பற்றி சொல்கிறார் ஊர் பெரியவர் ஒருவர். அவர் சொன்னது:கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பகுதியில நாலு வழி ரோடு போட்டாங்க. அதுக்காக குறுக்கே நிற்கிற முனி கோயிலை இடிச்சு ட்டு வேறு இடத்துக்கு மாத்தணும்னு சொன்னாங்க. நாங்கள்லாம் சேர்ந்து எவ்வளவோ எதிர்ப்பு காட்டியும் வடநாட்டு இன்ஜினிய ருங்க கேட்கல. ‘‘எங்களுக்கு ரோட் போட்றதுதான் முக்யம் மேன். சாமி எல்லாம் அப்றம்...’’ என்று கூறிவிட்டு பணியில் இறங்கியுள்ளனர்.‘‘முனிகிட்டயே மல்லுக்கு நிற்கிறான்டா. இனி இவன் பாடு; அந்த முனி பாடு’’ என்று ஒதுங்கிக் கொண்டார்கள் கிராம மக்கள். ‘‘கோயில சுத்தி அளவு எடுத்துட்டு, பத்தடி கூட நகர்ந்திருக்க மாட்டார் வடநாட்டு இன்ஜினியர். வயத்த கலக்கி பேதி பிடுங்கிடுச்சு. அவரும் பார்க்காத டாக்டர் இல்ல. செய்யாத வைத்தியம் இல்ல. முனி விவகாரமாச்சே, டாக்டரால தீர்க்க முடியுமா? தோப்போரமா அடிச்சு கொட்டுகிற பம்புசெட் மாதிரி இன்ஜினியருக்கு நிக்காம ஓடியது. சாப்பிட்டது, வாயை தாண்டுவதற்குள் வெளியே வந்து விழுந்தது. ஆள் கிறங்கி, கிறுகிறுத்து போயிட்டாரு.அவருகிட்ட வேலை பார்த்த உள்ளூர்க்காரங்க, மெதுவாக கிட்டபோயி, ‘இன்ஜினியர் அய்யா... ஒண்ணு சொன்னா தப்பா நினைச் சுக்க மாட்டீங்களே’ கேட்க, ‘ஒன் என்னா மேன்? ஹன்ட்ரட் கூட சொல்லு. என் பிராப்ளம் முதல்ல அரெஸ்ட் ஆகணும்’ என்று புலம்பிவிட்டார்.‘இது தெய்வ குத்தமுங்க அய்யா. முனிகிட்ட மனசுருக வேண்டி, நேர்த்திக்கடன் செலுத்தறதா வேண்டிக்குங்க. சட்டுனு நிக்கும்’னு சொன்னாங்க. மறுப்பு தெரிவிக்கிற நிலையில அவரு இல்ல. முனிகிட்ட சரண்டர் ஆயிட்டாரு.... அப்புறம்தான் ‘அரெஸ்ட்’ ஆச்சு. முனியோட சக்தியை உணர்ந்து கொண்ட இன்ஜினியர் 10,001 ரூபா காணிக்கையா செலுத்திட்டு, கோயிலுக்கும்... அந்த திசைக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு... என்று சொல்லி முடித்தார் அந்தப் பெரியவர். இப்போதும் முனி பயம் எல்லாருக்கும் இருக்கிறது. ஊரில் யாராவது புதிதாய் வாகனம் வாங்கினால் ஒரு எட்டு இங்கு வந்து சேவலோ... கோழியோ பலி கொடுத்து விடுவது வழக்கம். அதன் பிறகு ரத்தப்பலி கேட்காதாம்.வாழ்க்கையை நகர்த்தி செல்பவை நம்பிக்கைகளே. சமயத்தில் அவை மூட நம்பிக்கை என்று சுட்டிக் காட்டப்படுவதும் உண்டு. ஆனால், அனுவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது மூடநம்பிக்கையா அல்லது பரிபூரண உண்மையா என்கிற மர்மத்துக்கான விடை தெரியும். தப்பு செய்தவர்களை முனி, ரத்தம் கக்கவிடும் என்கிற விஷயத்தை பொறுத்தவரை... சூரக்குண்டு மக்களுக்கு அது நம்பிக்கை. மற்றவர்களுக்கு இன்னமும் அது மர்மமே! |
20 | 1/6/2011 3:32:36 PM | மர்மம் | கல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்! | புதையலை காவல் காக்க மந்திரவாதிகள் ஏவி விட்ட குட்டிச் சாத் தான் வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறி குதிக்கிறது..’’ கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பலரும் இப்படித்தான் பீதியில் சொல்கின்றனர். குட்டிச்சாத்தான் பீதிக்கு அப்பகுதியினர் சொல்லும் விளக்கம் இதுதான்..மன்னர்கள் ஆட்சியின்போது தலைநகராக விளங்கிய இடம் சூளகிரி. திப்பு சுல்தான் போன்ற மன்னர்கள் இங்கு கோட்டை கட்டி ஆட்சி செய்துள்ளனர். ராஜ குடும்பத்தினர், போரில் வீர மரணம் அடைபவர்களின் உடல்களை இங்குள்ள மலை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் புதைத்து வைத்துள்ளனர்.செல்வ செழிப்பும், தங்கம், வைரம் என தாராளமாய் கொட்டிக்கிடந்த காலம் அது. இறந்தவர்களின் உடலுடன் அவற்றையும் சேர் த்து கல்லறைகளில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோல சூளகிரி மலைப்பகுதியில் 100&க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.இது மட்டுமல்லாமல், ஒரு மலை மீது வெட்ட வெளியில் பலகை கற்களால் நாலாபுறமும் அடைக்கப்பட்ட கல்லறைகளும் உள்ளன. காலப்போக்கில் பலகை கற்கள் உடைந்ததில்.. தற்போது மண்ணுக்குள் புதைந்து கிடந்த கல்லறைகள் வெளியே தெரிய ஆரம்பித்துள் ளன. இதை மோப்பம் பிடித்த மந்திரவாதிகளும், மை போட்டு பார்க்கும் சூனியக்காரர்களும் சூளகிரிக்கு படையெடுக்கத் தொடங்கி யுள்ளனர்.கல்லறையில் வைக்கப்பட்ட தங்க, வைர ஆபரணங்கள், ஆடைகள் போன்றவற்றை வெளியாட்கள் யாரும் நெருங்க முடியாது. ஆவி கள் அதை சுற்றிச் சுற்றியே அலைந்துகொண்டிருக்கும். ஆனால், பிரத்யேக பூஜைகள் செய்து அவற்றை விரட்டிவிட்டு புதையலை எ டுக்க வருகிறது மந்திரவாதிகள் கும்பல்.கல்லறையை கண்டுபிடிப்பதும் அதற்குள் உறங்கி கிடக்கும் ஆவியை வெளியேற்றுவதும் சாதாரணமான விஷயமல்ல. இரவு 10 மணிக்கு மேல் ஊர் மக்கள் உறங்கிய பிறகு மந்திரவாதிகள் ஓசையின்றி படையெடுக்கின்றனர். கல்லறை இருக்கும் இடத்தை யூகித்து கண்டுபிடிக்கின்றனர். ஆனால், குறிப்பாக எந்த இடம் கல்லறை என்று கண்டுபிடிப்பதற்குள் இரவாகிவிடுகிறது. அதற்குப் பிறகு உடனே பூஜை செய்ய முடியாது என்பதால் அடுத்த நாள்தான் பூஜை நடத்துகின்றனர். அதுவரை கல்லறை நகைகளை காப்பாற்றுவ தற்கும் உலவும் ஆவிகளை அடக்கி வைப்பதற்காகவும் குட்டிச்சாத்தானை காவலுக்கு ஏவிவிடுகின்றனர் மந்திரவாதிகள்.வரும் மந்திரவாதிகள் எல்லாம் ஆளுக்கொரு குட்டிச்சாத்தானை ஏவுவதால் அப்பகுதியில் அவற்றின் நடமாட்டம் அதிகரித்திருக்கிற து. விவரம் தெரியாமல் அப்பகுதிக்கு செல்லும் அப்பாவி பொதுமக்கள் குட்டிச்சாத்தானின் சேட்டைக்கு இலக்காகி விடுகின்றனர்.சூளகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மனைவி முனிரத்தினம்மா காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதை பார்த்தார். கிட்டே சென்று பார்த்துள்ளார். மண் கலசங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பொரி கடலை, எலுமிச்சம்பழம் ஆகியவை சிதறிக் கிடந்துள்ளன. முந்தைய நாள்தான் அங்கு மந்திரவாதிகள் ஆவிகளை அடக்கும் பூஜையை செய்துள்ளனர். இது தெரியாமல் கல்லறைக்கு அருகே சென்று பார்த்த முனிரத்தினம்மாவை ஏதோவொரு சக்தி திடீரென தூக்கி வீசியது.மயங்கி விழுந்தவர் விழுந்தவர்தான். வெகு நேரம் கழித்து நினைவு திரும்பியது. உடல் முழுவதும் வியர்த்துப் போயிருந்தது. நடக்க முடியவில்லை. கை, கால்கள் வீங்கியிருந்தன. மிகவும் சிரமப்பட்டு தவழ்ந்தபடியே வீடு போய்ச் சேர்ந்தார். கல்லறைக்கு அருகில் எ ன்ன நடந்தது என்பதுகூட அவருக்கு தெளிவாக நினைவில்லை. பிரமை பிடித்ததுபோலவே இருந்தார்.குடும்பத்தினர் பீதியடைந்தனர். மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். முனிரத்தினம்மாவை உற்றுப் பார்த்தார் மந்திரவாதி. இது குட்டிச்சாத்தான் வேலை என தெரிந்துகொண்டார். சில மந்திரங்கள் சொல்லி விபூதியை முகத்தில் வீசினார். அவ்வளவுதான்.. நிலந டுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கிய முனிரத்தினம்மா அதே இடத்தில் விழுந்தார்.சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. பழைய முனிரத்தினம்மாவாக கண் விழித்தார். ‘‘ஒரு அடி உசரம், தேங்காய் சைசுக்கு தலை, விரல் அளவு மட்டுமே நீளம் கொண்ட கை.. இந்த உருவம்தான் குட்டிச்சாத்தான். வானத்துக்கும் பூமிக்குமா எகிறிக் குதிக்கும். அதை சாதாரணமா நெனைக்காதீங்க. பயங்கரமானது, கொடூரமானது. அதை அடக்கவே முடியாது’’ என்றார் மந்திரவாதி. அதைக் கேட்டு பீதியில் உறைந்து போயினர்.சூளகிரி காட்டுப் பகுதிக்கு மக்கள் போவதே இல்லை. தெரியாமல் சென்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மந்திரம் செய்துதான் குட் டிச்சாத்தானை விரட்டவேண்டி உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள் பீதி அடங்காமல். |
21 | 1/6/2011 3:34:20 PM | விளையாட்டு | ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து 644 ரன் குவிப்பு | சிட்னி: சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்தது. பிரியர் 54, பெர்சனன் ரன் எதும் எடுக்காத நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். பிரியர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 130 பந்தில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெர்சனன் 35, டிரம்லெட் 12 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 644 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஆஸி. தரப்பில் ஜான்சன் 4, ஹில்பன்ஹாஸ் 3 விக்கெட் வீழ்த்தினர். 364 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸி. அணி 2வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது. |
22 | 1/6/2011 3:40:26 PM | ஆன்மீகம் | காக்க காக்க.. கனகவேல் காக்க (சூரசம்ஹாரம்) | சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.முருகனுக்கு பல்வேறு விரதங்கள், உற்சவங்கள், வழிபாடுகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதம் கூறப்பட்டுள்ளது. ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பார்களே, அது கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி இவ்வாறு மாறியிருக்கிறது. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல, நமது ‘அகம்’ என்கிற மனத்தையும் குறிக்கிறது. நம் மனதில் இருக்கிற பேராசை, வெறுப்பு, ஆணவம், கோபம், வஞ்சம் தீர்த்தல், கருமித்தனம் உள்பட பல்வேறு தீய குணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப் பெருமான். முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.நீர் விரதம், பால் விரதம், மவுன விரதம் என பலவகை விரதங்கள் உண்டு. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளையும் கந்த சஷ்டியன்று செய்வார்கள்.சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் காலை, மாலை இரு வேளையும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.முருகனை குறித்து செய்யப்படும் அர்ச்சனையில் ‘சஷ்டிப் பிரியாய நம’ என்று வரும். சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம். |
23 | 1/6/2011 3:41:21 PM | ஆன்மீகம் | வைகுண்ட ஏகாதசி.... | ‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை. |
24 | 1/6/2011 3:42:08 PM | ஆன்மீகம் | கிரகங்கள் அருளும் உயர்கல்வி யோகம் | பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் மூலமாகத்தான் பொருள் செல்வத்தை ஈட்ட முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது அப்படியல்ல.கல்வியறிவு பெற்றவர்கள்தான் தங்களது கல்வித் திறமையால் பெரும் கோடீஸ்வரர்களாக விளங்குகிறார்கள். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்லாமல் செழிப்பும் உண்டாகிறது. கம்ப்யூட்டர் யுகத்தில் காமதேனு போல வாரிக் கொடுக்கக் கூடிய கல்வி யோகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருக்கு கல்வி சரளமாக வரும். சிலருக்கு அதிக முயற்சி தேவைப்படும். சிலருக்கு படித்த படிப்புக்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.கல்வி பெற நமக்கு கிடைக்கிற வாய்ப்புகளும் கடும் உழைப்பு, விடாமுயற்சியும் கல்விச் செல்வத்தை நமக்கு வாரி வழங்குகிறது என்றாலும் ஜாதக அமைப்பிலும் இதற்கு பங்கு இருக்கிறது. ஒருவருடைய ஜாதக கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதில் லக்னம் என்று இருக்கும். இதுவே முதல் கட்டம். இந்த கட்டத்தில் இருந்துதான் ஒன்று, இரண்டு என்று எண்ணவேண்டும். இதில் லக்னம் மிக முக்கியமானது. அதற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகமே லக்னாதிபதி. அதற்கடுத்து உயர்நிலை கல்வி வரை பேசக்கூடிய இடம் நான்காம் இடம்.பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.பொதுவாக ஜாதக கட்டத்தில் நான்காம் வீட்டின் கிரகமும், ஒன்பதாம் வீட்டின் கிரகமும் நீச்சம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் இல்லாமலும் இருக்க வேண்டும். கல்வி பயிலும் காலகட்டத்தில் (16 முதல் 26 வயது வரை) நல்ல யோகமான திசைகள் நடப்பது மேலும் சிறப்பை தரும். கஷ்டமான அறிவியல், கணித பாடங்களைக்கூட எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும்.ஆராய்ச்சி துறையில் பட்டம் பெற, மாஸ்டர் டிகிரி பெற 1, 4, 9&ம் அதிபதிகள் பலம் பெற்று இருக்க வேண்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது வித்யா யோகம். இது உயர்ந்த கல்வியையும், அந்தஸ்தையும் அளிக்கும். மேஷ ராசியில் சூரியன், புதன் சேர்ந்து இருந்தால் ஆராய்ச்சி பட்டம் பெறும் யோகம் உண்டு. பத்தாம் இடத்தில் சூரியன், கேது, செவ்வாய் சேர்ந்து இருந்தால் மருத்துவ துறையில் சாதிக்கும் யோகம் ஏற்படும்.புதன், சனி, செவ்வாய் கிரகங்கள் பலமாக இருந்தால் இன்ஜினியரிங் பிரிவில் யோகம் உண்டு. பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ராகு, சனி சேர்ந்து இருந்தால் டெக்னிக்கல் துறையில் படிப்பு அமையும். இரண்டாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்ந்து இருந்தால் பேச்சாற்றல் தேவைப்படக்கூடிய விரிவுரையாளர், விற்பனை பிரதிநிதி, அரசியல்துறை, வக்கீல் என சாதனை படைக்கலாம்.பத்தாம் அதிபதியுடன் சூரியன் சேர்ந்தால் அரசு உத்யோகம் அமையும்.பத்தாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி, குரு சேர்ந்தால் வங்கியில் உத்யோகம் அமையும். பத்தாம் அதிபதியுடன் புதன், செவ்வாய் சேர்வதால் கம்ப்யூட்டர் துறையில் சிறப்பு உண்டு. இந்த அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகும். இதை தவிர சில கிரக பார்வை, சேர்க்கை காரணமாக கல்வி யோகம் மிகவும் பிரகாசமடையும். சரஸ்வதி தேவியுடன் குரு, புதன் ஆகிய கிரங்களையும் வழிபட்டு வந்தால் கல்வியில் ஏற்றம் பெறலாம். |
25 | 1/6/2011 3:42:20 PM | விளையாட்டு | நியூசி.-பாக். டெஸ்ட் நாளை துவக்கம் | பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடந்த 20-20 தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் நாளை ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. |
26 | 1/6/2011 3:42:58 PM | ஆன்மீகம் | துர்க்கா தேவியை வழிபட்டால் பில்லி, சூன்யம் பறந்தோடும் | சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கும். அதுபோல நம் மனமும் அமைதியில்லாமல் அலை பாயும். மனோ வியாதி உள்ளவர்களுக்கு அன்றைய தினம் சற்று கடினமான தினமாக இருக்கும். சந்திரன் மனோகாரகன், மனத்தை ஆள்பவன். அதனால் பவுர்ணமியில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக சொல்கின்றன சாஸ்திரங்கள்.பவுர்ணமி தினத்தில் அம்பாள் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக மகா திரிபுர சுந்தரியாக பவுர்ணமியன்று அருள்பாலிப்பதாக ஐதீகம். மேலும் ஸ்ரீ சந்திரிகா என்ற அவதாரத்திலும், துர்க்கையின் அம்சத்திலும் அம்பாள் இருப்பதாக சித்தர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர். பவுர்ணமி தினத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் சத்திய நாராயணன் பூஜை செய்வது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சித்தர்களின் கூற்றுப்படி, நம் துக்கங்களையும், தடைகளையும், இடையூறுகளையும், நோய், நொடிகளையும், பில்லி, சூன்யம், ஏவல் போன்ற தீவினைகளையும், கிரக தோஷங்களையும் போக்கும் வழிபாடு ஸ்ரீதுர்க்கா தேவி வழிபாடு. துர்க்கா தேவியை ஒவ்வொரு பவுர்ணமி வரும் கிழமைக்கேற்ப வழிபடுவதால் அந்த கிரக தோஷ அவஸ்தையில் இருந்து விடுபடலாம்.ஞாயிற்றுக்கிழமையில் வரும் பவுர்ணமி, சூரியனுக்கு ஏற்றதாகும். சூரிய திசை நடப்பவர்கள், சூரிய தோஷம் உள்ளவர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு புடவை அல்லது சட்டைத் துணி சாற்றி, செந்தாமரை மலர் வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வழங்கலாம். தீராத நோய்கள் தீரும். மன அமைதி ஏற்படும்.திங்கட்கிழமையில் வரும் பௌர்ணமி சந்திரனுக்கு ஏற்ற தினமாகும். சந்திர திசை நடப்பவர்கள், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரக்காரர்கள், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு, ஆரஞ்சு புடவை சாற்றி மல்லிகை பூ மாலை சூட்டி அர்ச்சனை செய்ய வேண்டும். அனைத்து பழவகைகளுடன் கல்கண்டு சாதம் படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். மன அமைதியும், சுபகாரிய விஷயங்களும் கூடிவரும். வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் தடை விலகும்.செவ்வாய்க்கிழமையில் வரும் பவுர்ணமி, அங்காரகன் எனும் செவ்வாய்க்கு ஏற்ற தினமாகும். செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், மிருக சீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திரக்காரர்கள், 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு சிகப்பு நிற புடவை அல்லது துணி சாற்றி செவ்வரளி, சிகப்பு நிற பூக்களால் அர்ச்சனை செய்து பழங்கள், சித்ரான்னம் படைத்து பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் நன்மை ஏற்படும். நிலம் சொத்து சேர்க்கை ஏற்படும்.புதன்கிழமையில் வரும் பவுர்ணமி புத பகவானுக்கு ஏற்ற தினமாகும். புதன் திசை நடப்பவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு பச்சைநிற புடவை சாற்றி மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகையால் அர்ச்சனை செய்து பால் பாயாசம், பஞ்சாமிர்தம் படைத்து பக்தர்களுக்கு தரலாம். கல்வி தடை விலகும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மாமன் வகை உறவுகள் பலப்படும்.வியாழக்கிழமையில் வரும் பவுர்ணமி வியாழன் என்ற குருவிற்கு ஏற்ற தினமாகும். குரு திசை நடப்பவர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் இந்நாளில் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு மஞ்சள் நிற புடவை அல்லது ஜாக்கெட் துணி சாற்றி, சாமந்தி, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை சுண்டல், தயிர் சாதம், பழங்கள் படைத்து பக்தர்களுக்கு வழங்கினால் சுபகாரியத் தடைகள் விலகும். தோஷங்கள் நீங்கும். செல்வாக்கு, பொன், பொருள் சேர்க்கை உண்டு.வெள்ளிக்கிழமையில் வரும் பவுர்ணமி சுக்கிரனுக்கு ஏற்ற தினமாகும். திருமணத் தடை, களத்திர தோஷம் உள்ளவர்கள் சுக்கிர திசை நடப்பவர்கள் பரணி, பூரம், பூராட நட்சத்திரக்காரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ரிஷபம், துலாம் ராசியில் பிறந்தவர்கள், ஆகியோர் வழிபட, சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு வெண்பட்டு புடவை சாற்றி மல்லிகைப்பூ, கதம்ப பூமாலை, பழ வகைகள் நிவேதனம் செய்ய வேண்டும். பிரிந்த தம்பதியர் சேருவார்கள். தடைபட்ட கட்டிட வேலைகள் நிறைவேறும். கையில் பணம் புரளும்.சனிக்கிழமையில் வரும் பவுர்ணமி, சனீஸ்வரருக்கு ஏற்ற தினமாகும். நாவில் சனி, அஷ்டம சனி, ஏழரை சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள், 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், மகரம், கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆகியோர் வழிபட சகல யோகங்கள் விருத்தியடையும். துர்க்கைக்கு நீலநிற புடவை அல்லது நீலத்துணி சாற்றி மரிக்கொழுந்து, சங்கு பூ, கதம்ப மாலை அர்ச்சனை செய்து காய்கறி கலந்த சாதம், எள் சாதம், தயிர் சாதம், பாலில் தேன் கலந்து படைத்து பக்தர்களுக்கு தந்தால் தீராத நோய், நொடிகள் தீரும். மன அமைதி ஏற்படும். கிரக தோஷம் விலகும். |
27 | 1/6/2011 3:43:31 PM | ஆன்மீகம் | நவராத்திரி.. சுபராத்திரி! | சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி. நவம் என்றால் 9 என்று பொருள். ஒன்பது ஒரு பெருக்கமான எண் ஆகும். இதன் சக்தியும், ஆதிக்கமும் மிகவும் உயர்ந்தது. நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என்று ஒன்பதின் முக்கியத்துவம் அதிகம்.சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு எத்தனையோ விழாக்கள். உற்சவங்கள் இருந்தாலும் கோயில்களிலும் வீட்டிலும் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை நவராத்திரி. புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் இருக்கும்போது அமாவாசையில் இருந்து வளர்பிறையில் 9 இரவுகளுடன் கூடுதலாக ஒருநாள் தசமி திதியையும் சேர்த்து நவராத்திரி என்றும் தசரா என்றும் நம் பாரதத்தில் காலம் காலமாக கொண்டாடப்படுகிறது.அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளை ஜோதிட சாஸ்திரப்படி முக்கிய சுபகாரியங்களுக்கு விலக்கி வைக்கிறோம். அந்த இரண்டு திதிகளை சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவனின் அம்சம் உள்ளது என்பதை புரியவைப்பதற்காகவுமே நவராத்திரியில் அஷ்டமி, நவமி, திதிக்கு முக்கியத்துவம் தந்து கடைசி நாளான தசமி திதியில் விஜயதசமி என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.நவராத்திரி வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியாகிய துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியாகிய லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் ஞான சக்தியாகிய சரஸ்வதியையும் வழிபடுகிறோம்.அஷ்டமி அன்று தீய சக்திகளை அழிப்பதற்காக காளி, நீலி, சூரி என்று பயங்கர தோற்றத்துடன் அருள்பாலிக்கும் சக்தி அம்சத்தை வணங்கும் நாள். துர்க்கை அம்மன், பிரத்யங்கரா தேவி, இந்திராணி, சாமுண்டி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம் இல்லத்தில் உள்ள தீய சக்திகள், ஏவல், பில்லி, சூனியம், வாஸ்து குறைபாடுகள் போன்றவை நீங்கி சுபிட்சம் பெருகும்.நவமி நாள்தான் மகாநவமி. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகளில் சிறந்து விளங்க பிரார்த்தித்து புத்தகங்கள், நாம் பயன்படுத்தும் பேனா, பென்சில், இசைக் கருவிகள் போன்றவற்றை சரஸ்வதி முன்பு வைத்து பூஜை செய்ய வேண்டும். நலங்கள், வளங்கள் பெருகுவதற்காக அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்களில் இருக்கும் அனைத்து தளவாடங்கள், கருவிகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட நமக்கு பயன் தரும் அனைத்து பொருட்களுக்கும் சந்தனம், குங்குமம் வைத்து பூ வைத்து, பூஜைகள் செய்து வழிபடுவது மகா நவமியின் சிறப்பாகும்.மற்ற மாதங்களில் வரும் தசமி திதி சிறப்புமிக்கதாக இருந்தாலும், நவராத்திரிக்கு அடுத்த நாள் வரும் தசமி, விஜய தசமி என்று போற்றப்பட்டுகிறது. சகல காரிய வெற்றிகளையும், அஷ்டஐஸ்வர்யங்களையும் ஒருங்கே வாரி வழங்கக்கூடிய நாள். இந்த நாள் சரஸ்வதி தேவிக்கு மிகவும் உகந்த நாளாகும். கல்வி, இசை மற்றும் கலைகள் கற்கவும், புதுக்கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இந்த நாள் சிறப்பானதாக கருதப்படுகிறது. விஜயதசமியில் தொடங்கப்படும் கல்வி, கலைகள், புதிய தொழில்கள் எல்லாம் விருத்தியடையும் என்பது ஐதீகம்.நவராத்திரி ஒன்பது நாளும் பெண்களுக்கு உண்டான முக்கிய பண்டிகையாகும். அவரவர் வசதிக்கேற்ப, குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற அளவில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள், மிருகங்கள் என பொம்மைகளை அடுக்கி உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றம் என எல்லோரையும் அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்வது சிறப்பு. வந்தவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல், இனிப்பு வகைகள், ஜாக்கெட் பிட், பழங்கள், பூ, மஞ்சள், தேங்காய் என மங்கல பொருட்களை கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம். ஜோதிட சாஸ்திரப்படி, கொலு வைத்து நவராத்திரி விரத பூஜையை செய்வது சுபகாரியத் தடைகள், குழந்தை பாக்ய தடை, இனம்புரியாத கவலைகள், பயம் போன்ற தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி வீட்டில் மகிழ்ச்சியையும் சகல வளங்களையும் அள்ளித் தரும். |
28 | 1/6/2011 3:44:14 PM | ஆன்மீகம் | ஆறு பலங்கள் தரும் ஆஞ்சநேயா! | மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும். |
29 | 1/6/2011 3:44:45 PM | விளையாட்டு | டெஸ்ட் போட்டிக்கு காலிங்வுட் குட்பை | இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன். பால் காலிங்வுட். 34 வயதான அவர் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறார். இந்நிலையில் இந்த தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக காலிங்வுட் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20-20ல் தொடர்ந்து ஆடுவேன் எனவும் அவர் தெரிவித்தார். |
30 | 1/6/2011 3:46:33 PM | தொழில் | டெரகோட்டா பொம்மையில் பணம் அள்ளலாம் | இயற்கையில் கிடைத்த மண்ணை பிசைந்து பல வடிவங்களில் பாண்டங்கள், சாமி சிலைகள், ஆயுதங்கள் என விருப்பப்பட்டதை படைத்தான் அந்தக்கால மனிதன். பஞ்சபூதங்களும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) கலந்த ஒரு கலை இந்த மண்பாண்டக்கலை என்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். புதுவை வில்லியனூர் பகுதி மண்பாண்டத்தொழிலுக்கு பெயர் பெற்றது. இப்போது அது புதிய வடிவம் எடுத்து டெரகோட்டா என்ற பெயரில் சக்கை போடு போடுகிறது. இத்தொழிலில் பிரபலமானவர் கணுவாய்பேட்டையைச்சேர்ந்த வி.கே.முனுசாமி. 43 வயதாகும் இவர் ஏழு வயதில் இருந்தே இத்தொழிலில் இருக்கிறார். இப்போது பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். யுனெஸ்கோ விருது,தேசிய விருது, மாநில அரசு விருது, கலைமாமணி விருது போன்றவைகளும் இவருக்கு பெருமை சேர்க்கின்றன.தனது தொழில் அனுபவம் குறித்து வி.கே.முனுசாமி கூறியதாவது: நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். எனது தந்தை வி.கிருஷ்ணபத்தர் மண்பாண்டங்கள் செய்வதில் திறமையானவர். சிறு வயதிலேயே மண்பாண்டங்கள், சாமி சிலைகளை விளையாட்டாக செய்து பழகினேன். பின்னர் முறைப்படி என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு கிராக்கி அதிகரிக்கவே அவற்றை செய்வதில் ஈடுபாடு காட்டினேன். 1990ம் ஆண்டு ஓம் சக்தி பைன் ஆர்ட்ஸ் அண்டு டெரகோட்டா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஏராளமானோருக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்று தனியாக தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றங்கரையில் கிடைக்கும் ஒருவித களிமண் இந்த டெரகோட்டா பொம்மைகள் செய்ய ஏற்றது. எந்த வடிவத்தை செய்தாலும் அச்சு பிசகாமல் வளைந்து கொடுக்கும். வெடிப்பு வராது, நாம் நினைத்த வடிவம் கிடைக்கும். இந்த மண்ணை வடிகட்டினால் கிடைக்கும் களிமண்ணைக்கொண்டு சிறிய பொம்மைகள், அலங்கார பொருட்கள், மணிகள் போன்றவற்றை செய்யலாம். மீதமுள்ள மண்ணில் வைக்கோல் கூளம், யானை சாணம் போன்றவற்றை கலந்து பிசைந்து ஒரு அடி முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். மேலும் வில்லியனூர் டெரகோட்டாவுக்கு புவி குறியீடு பெற்றுள்ளோம். உலக அளவில் இந்த பொருட்களுக்கு மரியாதை உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த டெரகோட்டா பொம்மைகள் மிகவும் கவர்ந்திழுக்கின்றன. பெரிய ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கார்ப்பரேட் அலுவலகங்கள், ரிசார்ட்ஸ் போன்ற இடங்களில் இந்த டெரகோட்டா பொம்மைகளுக்கு நல்ல மவுசு உண்டு. இங்கு வைப்பதற்கென்றே பெரிய ஜாடிகள், உருளிகள் (தண்ணீர் ஊற்றி பூக்களை போட்டு வைப்பது) போன்றவற்றை பல வடிவங்களில் வேலைப்பாடுகளுடன் செய்து தருகிறோம். நமது நாட்டிலும் இப்போது இந்த தொழில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கிறது. மத்திய அரசின் கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம் ஏராளமானோருக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறது. ஏராளமான வெளிநாடுகளுக்கு இந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கிறது. தாய்லாந்து, வியட்னாமைப்போல புதுவையிலும் கைவினை கிராமம் கண்டிப்பாக தேவை. இதன்மூலம் ஏராளமான கைவினை கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சந்தை வாய்ப்பு கிடைக்கும். இங்கு காட்சி மையம் ஒன்றும் வைத்து விட்டால் இத்தொழில் மேலும் பிரபலமடையும். இதற்கு மூலதனம் தேவையில்லை, மூளைத்தனம் இருந்தால் போதும். அதே நேரம் பெரிய அளவில் தொழிலாக செய்தால் ஏராளமானோருக்கு வேலை கொடுக்கலாம். லட்சக்கணக்கில் வருமானமும் ஈட்டலாம். மாதம் 5 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். மொத்தத்தில் நம் தமிழர்களுக்கே உரிய இந்த கைவினைக்கலையை அழிந்து விடாமல் பாதுகாக்கும் சக்தி இளைய சமுதாயத்திடம் உள்ளது. அதனை பொறுப்புடன் உணர்ந்து செயல்பட்டால் டெரகோட்டா கலை மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவ்வாறு முனுசாமி கூறினார்.செய்வது எப்படி?டெரகோட்டா பொம்மைகள் செய்வதற்கு தேவை நல்ல களிமண். ஆறு, ஏரி, குளக்கரைகளில் இது கிடைக்கும். வில்லியனூரை பொறுத்தவரை சங்கராபரணி ஆற்றங்கரையில் நல்ல களிமண் கிடைக்கிறது. இந்த களிமண்ணை எடுத்து வெயிலில் உலர வைத்து பின்னர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் முழுக்க ஊறவைக்க வேண்டும். மறுநாள் அதனை எடுத்து பிசைந்து கையாலும், எந்திரத்தாலும் நாம் விரும்பும் வடிவ பொருட்களை செய்யலாம். சிறிய பொருட்களை கையால் செய்யலாம். பெரிய சிலைகள், பொம்மைகள் போன்றவை எந்திரத்தில் செய்யலாம். கிராம தேவதைகள், விலங்குகள், பறவைகள், அய்யனார், குதிரை, யானை போன்றவற்றை தற்போது மிகவும் கலை நுட்பத்துடன் தயாரிக்கின்றன. அரை அங்குலம் முதல் 32 அடி உயரம் வரை சிற்பங்கள் செய்யப்படுகிறது.களிமண்ணால் செய்தபின்னர் அவற்றை காயவைத்து பின்னர் சூளையில் வைத்து சுட வேண்டும். நன்றாக வெந்தபிறகு சிலைகள், பொருட்கள் தயாராகி விடும். இவற்றுக்கு இயற்கை வண்ணம் (இளஞ்சிவப்பு நிறம்) பூசி விற்பனைக்கு அனுப்பலாம்.இன்வெஸ்ட்மென்ட் இதற்கு பெரிய முதலீடு வேண்டாம். வீட்டிலேயே செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை போட்டு தொழில் தொடங்கலாம். 20க்கு 40 அடி அளவுள்ள கொட்டகை இருந்தால் சிறிய அளவில் தொழில் தொடங்கலாம். இங்கு களிமண், பதப்படுத்தும் இடம், மோல்டிங், பினிஷிங், பயரிங் (சூளை), பேக்கிங், விற்பனை, காட்சியகம் போன்றவை இருக்க வேண்டும். 60க்கு 180 அளவு கொண்ட கொட்டகை அமைத்தால் பெரிய அளவில் செய்ய முடியும். தற்போது விறகு சூளைக்கு பதிலாக கேஸ் மூலம் எரியும் அடுப்பும் வந்து விட்டது. மழைக்காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான பயிற்சி இல்லாதவர்கள் கூட வீட்டுவேலைநேரம் போக மற்ற நேரத்தில் அகல்விளக்கு அச்சு வாங்கி வந்து அகல்விளக்கு செய்து ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை வருமானம் பெறலாம். நல்ல கற்பனைத்திறன், பொறுமை, அழகியல் ரசனை இவை இருந்தால் இந்த தொழிலில் நீங்கள்தான் ராஜாஉதவித்தொகையுடன் பயிற்சிஇந்த தொழிலுக்கு மாவட்ட தொழில் மையம் உதவித்தொகையுடன் பயிற்சியும் அளிக்கிறது.8 ம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலங்களில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் உண்டு. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), ஆதிதிராவிடர் நலத்துறை (ஒரு வருடம்), மகளிர் மேம்பாட்டுக்கழகம் (மகளிருக்கு மட்டும்) ஆகியவையும் பயிற்சி அளிக்கின்றன. மகளிர் மேம்பாட்டுக்கழகம் 3 முதல் 6 மாத பயிற்சி அளிக்கிறது. மத்திய அரசின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் 14 வயது நிரம்பியவர்களுக்கு இத்தொழில் குறித்து 1500 ரூபாய் உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி அளிக்கிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு அட்வான்ஸ் டிரைனிங் (குரு சிஷ்யா பரம்பரா திட்டம்) 6 மாதம் அளிக்கப்படுகிறது. இதில் மாதாமாதம் 2 ஆயிரம் உதவித்தொகையும் உண்டு. அடுத்த ஆண்டு 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவிகளும் இலவசம். தனியார் அமைப்புகள், கல்லூரிகள், என்ஜிஓ அமைப்புகள் ஆகியவை இதனை எடுத்துச்செய்யலாம்.சந்தை வாய்ப்புபயிற்சி முடித்தவுடன் நாம் செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் மாவட்ட தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது. மாநில, தேசிய மற்றும் உலக வர்த்தக கண்காட்சி போன்றவற்றுக்கு அழைத்துச்செல்கிறது. போக்குவரத்து செலவும் அளிக்கின்றனர். இதன்மூலம் நாம் தனிப்பட்ட முறையிலும் விற்பனை வாய்ப்பை பெற முடியும்.மத்திய அரசு கைவினை அபிவிருத்தி ஆணையம் மூலம் கிராப்ட் பஜார், காந்தி சில்ப் பஜார், டெல்லி ஹாட் போன்ற கண்காட்சிகளிலும் பங்கு பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. வெளிநாட்டில் நடக்கும் கண்காட்சிகளிலும் நாம் பங்கு பெற வாய்ப்பு கிடைக்கும். இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது. சிறப்புகள்டெரகோட்டா பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இயற்கையோடு ஒன்றிணைந்து இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. உடைந்து போனால் கூட அவற்றை தூர எறிந்து விட்டு புதியதை வைத்துக்கொள்ளலாம். விலையும் குறைவு. மண்பாண்டங்களில் சமைத்தால் உணவு சுவையாக இருக்கும்.நீண்டநேரமானாலும் கெட்டுப்போகாது. மண்பானை நீரை குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தேனீர் கோப்பைகள், ஐஸ் கிரீம் கப்புகள் கூட மண்பாண்டங்களில் செய்கிறார்கள். டெரகோட்டா பொம்மைகள், அலங்கார பொருட்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வீட்டு வாசல் மற்றும் பூஜை அறைகளில் தண்ணீர் நிரப்பி பூக்களை போட்டு வைக்கும் உருளிகள் வாஸ்து குணம் கொண்டவை. இவ்வாறு பல சிறப்புகள் உள்ளன.என்னென்ன செய்யலாம்? டெரகோட்டா பொம்மைகளை பொறுத்தவரை அரை அங்குல விநாயகர் சிலை முதல் 32 அடி உயர சிலை வரை செய்யலாம். சிறிய விநாயகர் பொம்மைகள், குபேரன் சிலை, யானை, குதிரை போன்ற விலங்குகள் சிலைகள், அலங்கார விளக்குகள், உருளிகள், தொங்கும் விளக்குகள், அகல் விளக்குகள், மனித உருவங்கள், சுவற்றில் செய்யும் உருவங்கள், ஆபரணங்கள், டைல்ஸ், டிசைன்கள், தொங்கும் மணிகள், வாஸ்து மணி, அலங்கார மணி, செராமிக் பொம்மைகள் இன்னும் ஏராளமான பொருட்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் செய்யலாம். |
31 | 1/6/2011 3:49:44 PM | விளையாட்டு | ஐசிசி கனவு அணியில் சச்சின், சேவாக், கபில்தேவ் | துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ‘கனவு அணி’ ஒன்றை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 97 நாடுகளில் உள்ள 6 லட்சம் ரசிகர்கள் இதில் வாக்களித்தனர். இதன் முடிவில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சச்சின், சேவாக், கபில்தேவ் இடம் பெற்றுள்ளனர். சச்சின், சேவாக் சிறந்த துவக்க ஜோடி என்ற முறையில் தேர்வாகி உள்ளது. 2006ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் ஜோகன்ஸ்பர்க்கில் நகரில் மோதிய ஒரு நாள் போட்டி சிறந்த ஆட்டமாக தேர்வாகியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஆஸி. 434 ரன்கள் குவித்தது. ஆனால் தென் ஆப்ரிக்கா தனது புயல் வேக பேட்டிங்கால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அணி விவரம்: சச்சின், சேவாக், விவியன் ரிச்சர்ட்ஸ், லாரா, ரிக்கி பான்டிங், கபில்தேவ், கில்கிறிஸ்ட், டொனால்டு, வாசிம் அக்ரம், மெக்ராத், முரளீதரன். |
End of preview. Expand
in Dataset Viewer.
- Downloads last month
- 97